Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோசிகம் | kōcikam, n. <>kaušika. 1. Silk, silk cloth; பட்டாடை. கோசிகம்போல (பெருங். உஞ்சைக். 43, 154). 2. (Mus.) A primary melody type, corresponding to pairavi; 3. Sāma Vēda; Owl; |
| கோசிகன் | kōcikaṉ, n. <>Kaušika. Višvāmitra, as the descendant of Kušika; [குசிகர்வமிசத்தவன்] விசுவாமித்திரன். கோசிகற் கொருமொழி சனகன் கூறுவான் (கம்பரா. கார்முக. 64). |
| கோசிகை | kōcikai, n. See கோசிகம், 1. கோசிகையாம் . . . அரங்கேசர்க் கரவuசே (அஷ்டப். திருவரங். மா. 87). . |
| கோசிலேபிடித்துவா - தல் [கோசிலேபிடித்துவருதல்] | kōcilē-piṭittu-vā-, v. tr. & intr. <>கோசு2 +. To manage the rudder so as to sail close to the wind; காற்றின்கதியிலே செல்லும்பாதி கப்பற்சுக்கானைத் திருப்புதல். (W.) |
| கோசிலேவா - தல்[கோசிலேவருதல்] | kōcilē-vā-, v. intr. <>id. +. See கோசிலேபிடித்து வா-. (W.) . |
| கோசு 1 | kōcu, n. <>Pkt. kōša. A measure of distance, calling distance; கூப்பிடு தூரவளவு. சன்னிதிக்கு அப்புறத்தில் இரண்டுகோசு அளவிலிருக்கும் பாபவிநாசனிக்கு (குருபரம். பன்னீ. 217). |
| கோசு 2 | kōcu, n. See கோசம்2. (பிங்.) . |
| கோசு 3 | kōcu, n. 1. cf. Port. cors. Lower front rope of the sail of a boat, clew line; தோணிப்பாயின் முன்புறக்கயிறு. (W.) 2. Turn, time; 3. cf. Defeat, loss, overthrow; 4. Affair, concern; |
| கோசு 4 | kōcu, n. <>E. cosh [K. kōsu.] Cabbage. See முட்டைக்கோசு. |
| கோசுக்கீரை | kōcu-k-kārai n. See கோசு4. . |
| கோசுக்கால் | kōcu-kāl, n. perh. கோசு4+. Long slender stalks of potherbs; சீரையின் நீண்ட மெல்லிய கால். (J.) |
| கோசுப்பாய் | kōcu-p-pāy, n. <>கோசு3+. Spanker, after-sail in a barque; கப்பலின் பின் புறப்பாய். Naut. |
| கோசுபோ - தல் | kōcu-pō-, v. intr. perh. கோது+. 1. To fall low in status, to be degraded; தாழ்ச்சியாதல். (யாழ். அக.) 2. To be defeated; |
| கோசும்பரி | kōcumpāi, n. <>Mhr. kōsimbari [K. Tu. kōṣumbari.] A relish made of pulse and other igredients; ஒருவகைப் பச்சடி. |
| கோசுமந்தில் | kōcu-mantil, n. <>கோசு3 +. Gaff lift, the spar upon which the upper edge of a fore and aft sail is extended; படகின் பின் பக்கத்துப் பாய் தாங்கும் கட்டை. Naut. |
| கோசுமலி | kōcumali, n. See கோசும்பரி. . |
| கோசுமாசு | kōcumācu, n. <>U. ghōlamāl. Juggling, deception, hoax; ஏமாற்று. Colloq. |
| கோட்காரன் | kōṭ-kāraṉ, n. <>கோள்1+. See கோட்சொல்லி. (W.) . |
| கோட்கூறு | kōṭ-kūṟu, n. <>id.+. (W.) 1. (Astrol.) Division of a sign of the zodiac into 30 sections, being the number of its degrees; இராசியை முப்பது அமிசமாகப் பிரிக்கை. 2. Good or evil influence of the planets; |
| கோட்சொல்லி | kōṭ-colli, n. <>id. +. Tale-bearer, slanderer; குறளை கூறுவோன். Colloq. |
| கோட்டகம் | kōṭṭakam, n. <>கோடு+அகம். 1. Shore, bank; கரை. நெடுங்குளக் கோட்டகம். (சிலப்.11, 71). 2. Pit, ditch; 3. Deep tank; |
| கோட்டங்காவலர் | kōṭṭaṅ-kāvalā, n. <>kōṣṭha+|. Warders of a jail; சிறைக்கூடங்காப்போர் கோட்டங்காவலர் . . . இசைத்துமென்றேகி (மணி. 19, 48). |
| கோட்டம் 1 | kōṭṭam, n. <>கோடு-. cf. kuṭ. 1. [M. kōṭṭam.] Bend, curve, warp, as in timber; வளைவு. மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநுல் (நன். 25). 2. Bowing in worship, adoration; 3. Partiality, as swerving from uprightness; 4. Crookedness, as of mind; 5. Hatred; 6. Envy, jealousy; 7. District, province; 8. Town, city; 9. Garden; 10. Shore, as of a tank; 11. Lute; 12. cf. kōṭa. Lines, figures and diagrams drawn with rice-flour on the ground, on festive occasions; 13. cf. khādya. Eatables, edibles; |
