Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோட்டு 2 | kōṭṭu, n. perh. E. court-card. To win all the cards in a card-game; சீட்டாட்டத்தில் எல்லாப்பிடிகளையும் பிடித்துச் செயிக்கை. |
| கோட்டுக்காறல் | kōṭṭu-k-kāṟal, n. perh. கோடு+. 1. A sea-fish, silvery, Equula blochii; ஒருவகைக் கடல்மீன். 2. A sea-fish, silvery, Gazza minuta; |
| கோட்டுநூறு | kōṭṭu-nūṟu, n. <>id. + நீறு. Shell-lime, conch-lime; கிளிஞ்சிற் சுண்ணாம்பு. கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல (தொல். எழுத். 6, உரை). |
| கோட்டுப்பூ | kōṭṭu-p-pū, n. <>id. +. Flowers on branches, one of nāl-vakai-p-pū, q.v.; மரகொம்புகளில் தோன்றும் பூ. கோட்டுப் பூப்போல மலர்ந்துபிற் கூம்பாது (நாலடி. 215). |
| கோட்டுமண்கொள்(ளு) - தல் | kōṭṭu-maṇ-koḷ-, v. intr. <>id. +. To break up earth with horns or tusks; மண்ணைக் கொம்பாற்குத்திப் பெயர்த்தல். கோட்டுமண் கொண்டிடந்து (திவ். பெரியாழ். 3, 3, 9). |
| கோட்டுமலை | kōṭṭu-malai, n. <>id. +. Lit., tusked mountain. Elephant; [கொம்புள்ளமலை] யானை. (W.) |
| கோட்டுமா | kōṭṭu-mā, n. <>id. +. 1. Lit., animal with tusks or horns. [கொம்புள்ள விலங்கு] 2. Elephant; 3. Boar; 4. He-buffalo; |
| கோட்டுமீன் | kōṭṭu-mīṉ, n. <>id. +. Shark; சுறா கோட்டுமீ னெறிந்த வுவகையர் (நற். 49). |
| கோட்டுவாத்தியம் | kōṭṭu-vāttiyam, n. <>id. +. A kind of stringed musical instrument; தந்தியுள்ள வாத்திய விசேடம். |
| கோட்டுவாய் | kōṭṭu-vāy, n. <>id. +. 1. Dribble; கோடைவாய். முகத்தொழுகு கோட்டு வாயு நெடுமூச்சுங் கண்டு (இரமநா. சுந்தர. 4). 2. Yawning; |
| கோட்டுவான் | kōṭṭuvāṉ, n. <>id. +. 1. Rock horned owl. See கோட்டான். (W.) 2. An aquatic bird; |
| கோட்டூர்தி | kōṭṭūrti, n. <>id. + ஊர்தி. Palanquin made of elephant's tusks; யானைத் தந்தத்தாற் செய்த பல்லக்கு. தேவிய ரேறிய பெருங் கோட்டூர்தி (பெருங். உஞ்சைக். 38, 180). |
| கோட்டெங்கு | kōṭṭeṅku, n. <>கோள்+தெங்கு. Coconut tree bearing bunches of coconuts; குலைகளையுடைய தெங்கு. கோட்டெங்கிற் குலைவாழை (பட்டினப்.16). |
| கோட்டை 1 | kōṭṭai, n. <>கோடு-. 1. [M. kōṭṭa.] Measure of capacity=21 marakkāl; 21 மரக்கால் கொண்ட ஒரு முகத்தலளவை. 2. A land measure; 3. A straw-covering with paddy stored in; 4. Stack of straaw or hay; 5. Bundle, as of tamarind, plantain leaves, etc., enclosed in matting or other covering; 6. Abundance, plenty; |
| கோட்டை 2 | kōṭṭai, n. <>kōṭṭa. 1. [T. kōṭa, K. M. kōṭṭa.] Fort, castle, stronghold; மதிலரண். (சூடா.) 2. Ginger plant. See 3. Jungle; 4. Halo; 5. Ward of a lock; 6. Interior of a house; |
| கோட்டைக்கடன் | kōṭṭai-k-kaṭaṉ, n. <>கோட்டை1+. Short loan of money returnable in kind after harvest; அறுப்புக்காலத்தில் நெற்கொடுத்துத் தீர்ப்பதாகச்சொல்லி வாங்குஞ் சிறுகடன். Loc. |
| கோட்டைகட்டு 1 - தல் | kōṭṭai-kaṭṭu-, v. intr. <>கோட்டை2+. 1. To conswtruct a fort; மதிலரண் எடுத்தல். 2. To accumulate a huge furtune; 3. To build castles in the air; 4. To invent a fictitious story; 5. To form a halo, as the moon; |
| கோட்டைகட்டு 2 - தல் | kōṭṭai-kaṭṭu-, v.intr. <>கோட்டை1+. To store paddy-seeds in bundles; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டிவைத்தல். Loc. |
| கோட்டைப்பவுன் | kōṭṭai-p-pavuṉ, n. perh. E. coat (of arms) + E. pound. Gold sovereign with the royal arms impressed on the reverse, dist. fr. kutirai-p-pavuṉ; பவுன்நாணயவகை. |
| கோட்டைப்போர் | kōṭṭai-p-pōr, n. <>கோட்டை1+. Hay-stack; வைக்கோற் போர். (யாழ். அக.) |
| கோட்டைபிடி - த்தல் | kōṭṭai-piṭi-, v. intr. <>கோட்டை2+. Lit., to capture a fort. to accomplish a great or arduous task, usually in contempt; [கோட்டையைத் தன்வசப்படுத்துதல்] அரியகாரியத்தைச் செய்துமுடித்தல். |
