Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோதை 5 | kōtai, n. <>Gautamī. An ancient river; கௌதமி. (பிங்.) |
| கோதையன் | kōtaiyaṉ, n. <>கோது2. Man of empty words; பயனில்லாப் பொருளைக் கூறுவோன். எந்நக் கோதையர்க் கூறலுண்டே (சீவக. 3098). |
| கோந்தச்சார் | kōntaccār, n. An insignifican contemptible person; அற்பன். Nā. |
| கோந்தளங்காய் | kōntaḷaṅ-kāy, n. A medicinal fruit. See சமுத்திராப்பழம். (மலை.) |
| கோந்தனை | kōntaṉai, n. Colocynth, climber. See பேய்க்கொம்மட்டி. (மலை.) |
| கோந்தி | kōnti, n. <>T. kōti. Ape; குரங்கு. (யழ். அக.) |
| கோந்து | kōntu, n. <>U. gōnd [T. gōndu.] Gum; பிசின். Colloq. |
| கோந்துத்தான் | kōntuttāṉ, n. <>U. gōnddān. Gum-pot, gum-bottle; பிசின்பாத்திரம். (C. G.) |
| கோந்துரு | kōnturu, n. 1. Ancestor in the fifth line, great-grand-father's grandfather; பூட்டனுக்குப் பாட்டன். (J.) 2. Ridicule; |
| கோந்துலா | kōntulā, n. <>Mhr. gōḷdhala. A kind of musical drum used by Mahratta beggars; மராட்டியப் பிச்சைக்காரர் உபயோகிக்கும் டமாரவகை. Loc. |
| கோநகர் | kōnakar, n. <>கோ3 +. 1. Capital city; இராசதானி. கோநக ரெதிர்கொள (சிலப். 27, 255). 2. Temple; |
| கோநாய் | kō-nāy, n. <>id. +. Wolf. See ஓநாய். கோநாயினம் வெரூஉம் வெற்ப (பழ. 292). |
| கோப்பழி - த்தல் | kōppaḻi-, v. tr. <>கோப்பு+அழி2-. To ruin, pull down, dismantle; சீரழித்தல். குருமாமணி யூசலைக் கோப்பழித்து (திருகோ. 161). |
| கோப்பன் | kōppaṉ, n. <>கோ. Loc. 1. Capable person not easily bamboozled; கெட்டிக்காரன். 2. Clever scoundrel; |
| கோப்பாண்டியன் | kō-p-pāṇṭiyaṉ, n. <>கோ3 +. Pandya, as king of kings; பாணியன். (திவா.) |
| கோப்பாளி | kōppāḷi, n. 1. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) See கோப்பன். Loc. |
| கோப்பி 1 | kōppi, n. <>E. coffee. See காப்பி. (J.) . |
| கோப்பி 2 | kōppi, n. See கோபி4, 1, 2. . |
| கோப்பிடு - தல் | kōppiṭu-, v. tr. <>கோப்பு+இடு-. To make arrangements; to scheme; ஏற்பாடு செய்தல். கூட்டுக்குளே யடைக்கக் கோப்பிட்டாள் (விறலிவிடு.603). |
| கோப்பியம் | kōppiyam, n. <>gōpya. 1. Secrecy, concealment, privacy; இரகசியம். எல்லாம் கோப்பியமாக நடக்கிறது. 2. Quietness, reticence, self-restraint; |
| கோப்பு | kōppu, n. <>கோ-. [T. K. kōpu, M. kōppu.] 1. Stringing, inserting, threading, adorning; கோக்கை. 2. Arrangement, order, method; 3. Beauty, as of form or construction; finish; 4. Decoration, ornament, embellishment; 5. That which covers, as a cloud, a roof; that which over whelms, as grief; 6. Gaudiness, showiness, parade; 7. Jest, sport, farce; 8. Means, device, scheme; 9. Bundle, pack, as taken on shoulders; 10. Daily provisions allowed by kings to their officers; 11. Vegetables; |
| கோப்புக்கூட்டு - தல் | kōppu-k-kūṭṭu-, v. tr. <>கோப்பு +. To make or get ready; சித்தஞ்செய்தல். Loc. |
| கோப்புமுறை | kōppu-muṟai, n. <>id. +. Art or manner of fitting or arranging things; பொருத்தும் முறை. மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ (பெருங். உஞ்சைக். 58, 53). |
| கோப்பெண்டு | kō-p-peṇṭu, n. <>கோ3 +. Queen; அரசன் மனைவி. பெருங்கோப்பெண்டுமொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86). |
| கோப்பெருங்கணக்கர் | kō-p-peru-ṅ-kaṇak-kar, n. <>id. +. Chief accountants of a State; இராசாங்கத்துத் தலைமைக் கணக்கர். கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்க (பெருங். நரவாண. 7, 122). |
