Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ச் | c, . The third consonant, being the palatal voiceless stop; நெடுங்கணக்கில் மூன்றும் மெய்யெழுத்து  | 
| ச 1 | ca, . The compound of ச் and அ. .  | 
| ச 2 | ca, Part. <>sa. With, together, used as a prefix in Sanskritic words, as சமூலம்; உடன் என்னும் பொருளதாய் வடசொற்களில் மொழிக்கு முன்னாக வரும் இடைச்சொல்.  | 
| சஃகுல்லி | Caḵkulli, n. <>šaṣkulī. A kind of pastry or cake; சிற்றுண்டிவகை. (பிங்)  | 
| சக்கட்டம். | cakkaṭṭam, n. 1. cf. சக்கந்தம். scoff, mockery, sport; பரிகாசம். (W.) 2. Censure;  | 
| சக்கட்டிசக்கட்டியெனல் | cakkaṭṭi-cakkaṭṭi-y-eṉal n. Onom. expr. of repeated thud; ஓர் ஓலிக்குறிப்பு. Loc.  | 
| சக்கட்டை | cakkaṭṭai, n. <>sakaṭa. (W.) 1. Badness, unfitness, inferiority, incompetency; சாமர்த்தியமின்மை. 2. Degradation; 3. Blockhead;  | 
| சக்கட்டையாள் | cakkaṭṭai-y-āḷ, n. <>சக்கட்டை +. Worthless, incompetent person; சத்தியில்லாதவன். (J.)  | 
| சக்கடாவண்டி | cakkaṭā-vaṇṭi, n. cf. šakaṭa+. [T. cekadābaṇdi.] Springless bullock-cart; கட்டைவண்டி. Loc.  | 
| சக்கடி | cakkaṭi, n. See சக்கணி. இயங்கொட்டச் சக்கடி கற்று (திருப்பு.417)  | 
| சக்கணி | cakkaṇi, n. <>T. jakkiṇi. A kind of dance; கூத்துவகை. சக்கணியி லோர் தருவுஞ்சாதித்து (பணவிடு.186)  | 
| சக்கத்து | cakkattu, n. A kind of pearl; முத்துவகை. (S. I. I. ii, 396, வரி 103.)  | 
| சக்கதேவி | cakka-tēvi, n. <>yakṣa +. See சக்கம்மா. கருத்து நன்றாய்ப்பேசுது சக்கதேவி (குற்றா.குற.71).  | 
| சக்கந்தம் | cakkantam, n. [K. Tu. cakkanda.] See சக்கட்டம். (யாழ்.அக) .  | 
| சக்கப்பிரதமன் | cakka-p-piratamaṉ, n.<>சக்கை3 +. A kind of sweet milk-porridge prepared from jack-fruit; பலாப்பழங்கொண்டு செய்யப்படும் பாயசவகை. Nā.  | 
| சக்கம்மா | cakkammā, n. <>yakṣa +. [T.jakkama.] A demoness; ஒரு பெண்தேவதை.  | 
| சக்கரக்கல் | cakkara-k-kal, n. <>சக்கரம்1+. Boundary or demarcation-stone for lands granted to Viṣṇu temples; விஷ்ணுகோயில்களுக்கு மானியமாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல். (Insc.)  | 
| சக்கரக்கவி | cakkara-k-kavi, n. <>id. +. See சக்கரபந்தம். .  | 
| சக்கரக்கள்ளன் | cakkara-k-kaḷḷaṉ, n.<>id. +. Close-fisted person, miser உலோபி.Nā.  | 
| சக்கரக்காரன் | cakkara-k-kāraṉ, n.<>id. +. Rich man செல்வன்.Loc.  | 
| சக்கரக்கோட்டம் | cakkara-k-kōṭṭam, n.<>id. +. An ancient State in the Central Provinces conquered by Kulōttuṅka cōḻa I; முதலாங்குலோத்துங்கசோழனால் வெல்லப்பட்டதும் மத்திய மாகாணத்திலுள்ளதுமான ஒரு இராச்சியம். விருதராச பயங்கரன்... வென்ற சக்கரக்கோட்டத்திடை (கலிங்.134).  | 
| சக்கரகவி | cakkara-kavi, n. <>id. +. See சக்கரபந்தம். .  | 
| சக்கரகாரகம் | cakkara-kārakam, n. cf. cakra-kāraka. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) .  | 
| சக்கரச்சுவாசம் | cakkara-c-cuvācam, n.<> சக்கரம்1+. [M.cakrasvāsam.] Gasp for breath, dying breath; மரணகாலத்திற்போலத் திணறியெழும் மூச்சு.Loc.  | 
| சக்கரச்செல்வம் | cakkara-c-celvam, n.<>சக்கரன்2+. Great wealth and prosperity, as of Indra; [இந்திரனது செல்வம்] பெருஞ்செல்வம். சக்கரச்செல்வம் பெறினும் (நாலடி, 346).  | 
| சக்கரஞ்சுற்று - தல் | cakkara-cuṟṟu-, v. intr. <>சக்கரம்1 +. 1.To revolve, rotate, as a wheel; சுழலுதல்.Loc. 2. To whirl around in play; 3. To be in sore distress;  | 
| சக்கரத்தாபனம் | cakkara-t-tāpaṉam, n.<> id. +. See சக்கரஸ்தாபனம் .  | 
| சக்கரத்தாழ்வார் | cakkarattāḻvār, n. <>id. +. Viṣṇu's discus, considered a deity; விஷ்ணுவின் சக்கரமான சுதரிசனாழ்வான்.  | 
| சக்கரத்தீவட்டி | cakkara-t-tivaṭṭi, n. <>id. +. A kind of round torch; வட்டத் தீவட்டி.Colloq.  | 
| சக்கரத்தேமல் | cakkara-t-tēmal, n. <>id. +. Round whitish spots on the body, believed to indicate fortune; அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டத்தேமல்.Loc.  | 
| சக்கரத்தேர் | cakkara-t-tēr, n. <>id. +. A wheeled car, dist. fr. eṭuppu-t-tēr, இழுப்புத் தேர்.(w.)  | 
