Word |
English & Tamil Meaning |
|---|---|
| சக்கரவர்த்தி | cakkaravartti, n. <>cakravarti nom. sing. of cakra-vartin. Emperor; பேரரசன். சக்கரவர்த்திகளாற் பயமுண்டெனும் (சிலப். 15,98, உரை). Any one of tikiri-maṉ- ṉavar; |
| சக்கரவர்த்தித்திருமகன் | cakkaravartti-t-tiru-makaṉ, n. <>சக்கரவர்த்தி+. Rama, as the son of the emperor Dašaratha; [தசரதசக்கரவர்த்தியின் குமாரன்] இராமபிரான். சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில்லு கைவந்திருக்குமா போல (ஈடு, 6, 4, 2). |
| சக்கரவர்த்தினி | cakkaravarttiṉi, n. <>cakravartini 1. Empress; பேரரசி. 2. Spikenard herb. See சடாமாஞ்சி. (சங்.அக.) 3. Red lac; |
| சக்கரவாகம் | cakkaravākam, n. <>cakravāka. 1.Cakra bird, the couples of which are believed to be separated and to mourn during night, noted for conjugal fidelity ; இரவில் இணைபிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவைவகை. சக்கரவாகச் செழும்பெடைகாள் (தணிகைப்பு.களவு.347); A musical mode; |
| சக்கரவாணம் | cakkara-vāṇam, n.<>cakra+bāṇa. [M. cakravāṇam.] Wheel-rocket; சக்கரம்போலச் சுழன்று தீப்பொறிகளைச் சிதறும் வாணம். |
| சக்கரவாளக்கோட்டம் | cakkaravāḷa-k-kōṭṭam, n. <>சக்கரவாளம்+. A place in the ancient city of Kāviri-p-pūm-paṭṭiṉam adjoining its burning-ground; காவிரிப்பூம்பட்டினத்தில் மயானத்தின் புறத்திருந்த ஓர் இடம். சக்கரவாளக் கோட்ட மீங்கிதுகாண் (மணி. 6, 202) |
| சக்கரவாளம் | cakkaravāḷam n. <>cakravāla. A mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness; உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை. சூழ்ந்து நிற்குந் சக்கரவாளச்சையம் (கந்தபு.அண்டகோ.20). The Third slope or tier of Mt. Mēru; 3. See சக்கரவாளக்கோட்டம். (மணி. 6,183.) 4. See சக்கரவாகம். 5. Circular form; |
| சக்கரவியூகம் | cakkara-viyūkam, n. <>சக்கரம்1+. See சக்கரயூகம் . |
| சக்கரவிருத்தி | cakkara-virutti, n. <>id.+. [T. cakravrddhi.] Compound interest; வட்டிக்கு வட்டி. (சங்.அக.) |
| சக்கரன் 1 | cakkaraṉ, n. <>cakra. Viṣṇu; விஷ்ணு. (யாழ்.அக.) |
| சக்கரன் 2 | cakkaraṉ n. <>šakra. 1.See சக்கிரன்.( சங்.அக.) . 2. Sun-god, one of tuvātacātittar, q.v.; |
| சக்கரஸ்தாபனம் | cakkara-stāpaṉam, n. <>cakra +. 1. Ceremonial setting of a plate containing mystical diagrams and letters for counteracting evil; பிறர்செய்த தீங்கைப்போக்க மந்திரமமைந்த சக்கரத்தைப் பதித்துவைக்கை. 2. Ceremonial setting of a plate containing a mystic diagram under the mūlavar; |
| சக்கராகாரம் | cakkarākāram, n. <>id. + ākāra. Circle, circular form; வட்டவடிவு. |
| சக்கராங்கனம் | cakkarāṅkaṉam n. <>id.+aṅkana. Branding with caṅku and cakkaram of Viṣṇu made by preceptor on the shoulders of a person at the time of his initiation into Vaiṣṇavism; வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஒருவரது தோள்மீது ஞானாசாரியர் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறிக்கை. |
| சக்கராங்கிதம் | cakkarāṅkitam, n. <>cakrāṅkita. See சக்கராங்கனம். . |
| சக்கராயுதன் | cakkarāyutaṉ, n. <>cakrāyudha. Viṣṇu, as having the discus-weapon; [சக்கரப்படையுடையவன்] திருமால். (திவா.) |
| சக்கராயுதி | cakkarāyuti, n. <>id. Durgā, as having the discus-weapon; துர்க்கை. (பிங்) |
| சக்கரான்கட்டு | cakkarāṉ-kaṭṭu, n. Two or three gunnies stitched together; ஒன்றாகத் தைக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று கோணி. Loc. |
| சக்கரை | cakkarai, n. <>šarkarā. See சர்க்கரை. (மூ.அ.) . |
| சக்கரைக்குத்தி | cakkarai-k-kutti, n. <>சக்கரை+. Metallic spike to tap bales and test the contents; கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி. |
| சக்கல் | cakkal, n. <>T. saggu. (w.) 1. Rotten straw, muck; மக்கல். 2. That which is withered, shrivelled, chaffy; |
| சக்கவாலர் | cakkavālar, n. <>cakravāla. Devas residing in Mt. cakkaravāḷa; சக்கரவாளகிரியிலிருப்பவரான வியந்தர தேவர்கள். (மேருமந்.574.) |
| சக்களத்தி | cakkaḷatti, n. <>saha+kalatra. 1. Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா.ii, 57,140). 2. Counterfeit, imitation; |
