Word |
English & Tamil Meaning |
|---|---|
| சக்கிரிகை | cakkirikai, n. cakrikā. knee; முழந்தாள். (யாழ்.அக.) |
| சக்கிரிவதம் | cakkirivatam, n. <>cakrivat . Ass; கழுதை. (சங்.அக.) |
| சக்கிலி | cakkili, n. cf. šāṣkula. Caste of shoemakers; சக்கிலியச்சாதி. |
| சக்கிலிக்குருவி | Cakkili-k-kuruvi, n. cf. சிச்சிலிக்குருவி. King-fisher; மீன்குத்திப்பறவை. (M.M.416.) |
| சக்கிலிச்சி 1 | cakkilicci, n. <> சக்கிலி. A woman of the Cakkili caste; சக்கிலிசாதிப்பெண். |
| சக்கிலிச்சி 2 | cakkilicci, n. A salt of burning and acrid nature; சத்திசாரம். (w.) |
| சக்கிலியன் | cakkiliyaṉ, n. <>சக்கிலி. [K.cakkaḷa, M. cakkiliyan.] Chucklers, workers in leather; செம்மான். |
| சக்கு 1 | cakku, n. <>Pkt. cakkhū <>cakṣuh. Eye; கண்.புரந்தர னெனுஞ் சக்கு வாயிர முடைக்களிறு. (கலிங்.175). |
| சக்கு 2 | cakku, n. [ T.saggu.] Mouldiness; பூஞ்சாளம். (J.) |
| சக்குக்கட்டு - தல் | cakku-k-kaṭṭu-, n. <>சக்கு2+. To grow mouldy; பூஞ்சாளம் பூத்தல். (J.) |
| சக்குச்சக்கெனல் | cakku-c-cakkeṉal, n. Onom. expr. signifying harsh, dissonant, dull sound, as of a muffled drum; ஓர் ஒலிக்குறிப்பு. (w.) |
| சக்குதானம் | cakku-tāṉam, n. <>சக்கு1+snāna. Ceremonial washing of the eyes of a deity in a temple; விக்கிரகத்தின் கண்களை நீராற் சுத்தி செய்யும் பூசைவகை. (யாழ்.அக.) |
| சக்குபு | cakkupu, n. prob, cakṣus+bhū. A plant growing in wet places; See கையாந்தகரை. (மூ.அ.) . |
| சக்குவரி | cakkuvari, n. <>šakvarī. A verse of four lines, each of them consisting of 14 letters; ஒற்றொழித்து அடியொன்றுக்கு 14 எழுத்துக்கள் கொண்ட நாலடிவிருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.) |
| சக்கேரா | cakkērā, n. <>U. zakhīra. Store, hoard. See சகேரா.(w.) . |
| சக்கை 1 | cakkai, n. [M. cakka.] 1.Refuse, as of sugarcane after pressing; rind or fibrous parts of fruits; anything wanting in solidity or strength, anything useless; கோது. 2. Bark; |
| சக்கை 2 | cakkai, n. [T. cekka, K.Tu.cakke.] Chips; சிராய். Small wooden peg; Wadding of a gun; |
| சக்கை 3 | cakkai, n. [M. cakka.] Loc. 1.Jack, Artocarpus; பலா. 2.Jungle jack; See காட்டுப்பலா. |
| சக்கைபுரட்டிவிடு - தல் | cakkai-puraṭṭi-viṭu-, v. intr. <>T. tcakka+. See சக்கைபோடு போடு-. . |
| சக்கைபோடுபோடு - தல் | cakkai-pōṭu--pōṭu-, v.intr.& tr.<> id. +. To accomplish a task skilfully or in an admirable manner, to work successfully; திறமையாகச் செய்தல்.colloq. |
| சக்கையன் | cakkaiyaṉ, n. <>சக்கை1. A stout, but weak person; உடல்வலியற்றுப் பருத்திருப்பவன். (J.) |
| சக்கையாய் | cakkai-y-āy, adv. <>T. tcakka +. In great measure, abundantly, excessively; நன்றாய். மழை சக்கையாய்ப் பெய்தது. |
| சக்கையாய்ப்பிழி - தல் | cakkai-y-āy-p-piḻi, v.tr. <>சக்கை1 +. To exact hard work from, overwork, as reducing one to skeleton; கடுமையாக வேலைவாங்குதல். |
| சக்கைவாங்குவாங்கு - தல் | cakkai-vāṅku--vāṅku-, v.tr. <>id. +. 1. See சக்கையாய்ப்பிழி-. அவனைச் சக்கைவாங்குவாங்கினான். 2.To take to task severely; |
| சக்கோலி | cakkōli, n. A plant; ஒரு பூடு. (சங்.அக.) |
| சக்தன் | caktaṉ, n. <>šakta. See சக்திமான். . |
| சக்தி | cakti, n. <>šakti. See சத்தி. . |
| சக்திபூசை | cakti-pūcai, n. <>šakti +. Worship of Sakti or the principle of Energy in God-head; சத்தியைப் பூசிக்கும் வாமமார்க்கம். |
| சக்திமான் | caktimāṉ, n. <>šakti-mān nom. sing. of <>šakti-mat . Strong man, able or skilful person, a man of powerful personality; ஆற்றலுள்ளவன்.Colloq. |
| சக்திமுகம் | cakti-mukam, n. <>šakti +. Royal mandate; அரசனது ஆணைப்பத்திரம். (T. A. S.) |
| சக்தியானுசாரம் | caktiyāṉucāram, adv. <>id. + anu-sāra. To the best of one's ability, so far as lies in one's power; ஆற்றலுக்கு ஏற்ப.சக்தியானுசாரம் தானஞ் செய்யவேண்டும். |
| சக்பந்தி | cakpanti, n. <>U. cakbandi. See செக்குபந்தி. . |
