Word |
English & Tamil Meaning |
|---|---|
| சக்ரவத்துப்பிடி - த்தல் | cakravattu-p-piṭi-, v.intr. <>cakravarti +. To proclaim title to sovereignty; சக்கரவர்த்தியென்ற விருதுபிடித்தல். நடைச் சக்கரவத்துப் பிடிக்கலாம்படி. (ஈடு, 3, 9, 9). |
| சககமனம் | caka-kamaṉam, n. <>sahagamana. Self-immolation of a Hindu widow on her husband's funeral pyre, concremation, sati; இறந்த கணவனோடு உடன்கட்டையேறுகை. |
| சககாரம் | cakakāram, n. <>sahakāra. A kind of sweet mango; தேமா. (பிங்.) |
| சககாரி | cakakāri, n. <>sahakārī nom. sing. of sahakārin. Secondary cause; துணைக்காரணம், அடுத்துவருமனன சககாரிகளாம் (வேதா.சூ.134). |
| சகச்சிரம் | cakacciram, n. <>sahasra. 1.The number 1000; ஆயிரம். 2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; |
| சகச்சிராட்சி | cakaccirāṭci, n. prob. sahasrākṣi A kind of plant; ஒருவகைப் பூடு. (தைலவ.தைல.23.) |
| சகச்சை | cakaccai, n. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (w.) . |
| சகசட்சு | caka-caṭcu, n. <>jagat-cakṣuh nom. sing. of jagat-cakṣus. Sun, as the eye of the world; (உலகிற்குக்கண்) சூரியன். (யாழ்.அக.) |
| சகசண்டி | caka-caṇṭi, n. <>jagat+caṇḵa. Rough, quarrelsome person; பெருமுருடன்.Loc. |
| சகசநிட்டை | cakaca-niṭṭai, n. <> saha-ja +. Religious meditation that has become second nature by long practice; அப்பியாசத்தால் ஒருவனுக்கு இயற்கையாயமைந்த நிட்டை. இன்னணஞ்சகநிட்டை யெய்திய நந்திப்புத்தேள் (தணிகைப்பு.நந்தியு.147). |
| சகசம் 1 | cakacam, n. <>saha-ja. That which is inherent, innate or natural; இயற்கையானது. |
| சகசம் 2 | cakacam, n. See சகடம் 4. (யாழ்.அக.) . |
| சகசமலம் | cakaca-malam, n. <>saha-ja +. The āṇava-malam , as an obstructive principle or bond inherent in the soul; உயிர்கட்கு இயல்பாயுளதாகிய ஆணவமலம். (சிவப்பிர.2, 20, உரை.) |
| சகசரம் | cakacaram, n. See சகசா.(w.) . |
| சகசரன் | cakacaraṉ, n. <>saha-cara. Friend, companion, associate; தோழன். |
| சகசரி | cakacari, n. <>saha-carī. 1.Henna, 1. sh., Lawsonia alba; பொன்னிறங்கலந்த கரிய பூமருதோன்றி. (மலை.) 2. A plant of ever-fresh flowers; 3. Female companion; 4. Wife; |
| சகசரிதம் | caka-caritam, n. <>saha+carita. Concomitant; உடன்நிகழ்வது. ஆணவசகசரிதமாக (சி.சி.2, 80. சிவாக்.). |
| சகசவேது | cakaca-v-ētu, n. <>saha-ja+hētu. Inference by which a thing is determined from a predication of its nature; கூறப்பெற்ற பண்பினால் பண்பியை அறியும் ஏது. (சி.சி.அளவை.10, சிவாக்.) |
| சகசன் | cakacān, n. <>saha-ja. Brother; சகோதரன். (சங்.அக.) |
| சகசா | cakacā, n. cf. sahā. Small Indian ipecacuanha. See சிறுகுறிஞ்சா (மலை.) . |
| சகசாட்சி | caka-cāṭci, n. <>சகம்1 +. Sun, as spectator of the whole world; [உலக முழுதையுங் காண்பவன்] சூரியன்.(W.) |
| சகசாதிசயம் | cakacāticayam, n. <>saha-ja+ati-šaya. (Jaina.) Innate pre-eminence, one of three aticayam , q.v.; அதிசயமுன்றனுள் ஒன்று. (சீவக..2813, உரை.) |
| சகசாலப்புரட்டன் | caka-cāla-p-puraṭṭaṉ, n. <> சகசாலம் +. Consummate deceiver, as a magician; பெருமோசக்காரன். |
| சகசாலம் | caka-cālam, n. <>jagat+jāla. Magical illusion; மாயவித்தை. மானெனுமோர் சகசாலச் சிறுக்கி. (அருட்பா, vi, தான்பெற்ற.9). |
| சகசிரம் | cakaciram, n. See சகச்சிரம், 1. (திவா.) . |
| சகசை | cakacai, n. <>saha-jā. Sister; சகோதரி. (சங்.அக.) |
| சகசோதி | caka-cōti, n. <>jagat +. 1.Brilliant light that illumines the whole world; overpowering light; பேரொளி. 2. God, as the Light of the Universe; |
| சகட்டடியாக | cakdaṭṭaṭi-y-āka, adv. <>U. sagat +. By the lump, at a sweep; on an average; மொத்தமாக. |
| சகட்டிலே | cakaṭṭil-ē, adv. See சகட்டடியாக.Colloq. . |
| சகட்டுக்கு | cakaṭṭukku, adv. See சகட்டடியாக. . |
