Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகமீன்றவள் | cakam-īṉṟavaḷ, n. <>சகம்1 +. Pārvatī, as the Mother of the Universe; [உலகங்களைப் பெற்றவள்] உமை. (பிங்.) |
| சகர்ப்பபிராணாயாமம் | cakarppa-pirāṇāyāmam, n. <>sa-kalpa +. Restraint of breath, practised with the use of mantras; மந்திரத்தோடு செய்யப்படும் பிராணாயாமம். (திருக்காளத்.பு.ஞானயோ.16.) |
| சகரச்சாரி | cakaraccāri, n. cf. šakti-sāra. A salt of acrid and burning taste; சத்திசாரம்.(w.) |
| சகரநீர் | cakara-nīr, n. <>சகரர் +. Sea, as dug by cakarar; [சகரர் தோண்டியது] கடல். சகரநீர் சுலாம் புவி (பிரமோத்.13, 66). |
| சகரர் | cakarar, n. <>Sāgara. The sons of Sagara, who are believed to have dug out the sea ; கடலுண்டாகுமாறு பூமியைத் தோண்டியவரான சகர புத்திரர்கள். சகரர்தொட்டலாற் சாகர மெனப் பெயர் தழைப்ப (கம்பரா.அகலி.43). |
| சகரன் | cakaraṉ, n. <>Sagara. A chief, famed for liberality, one of seven mutal-vaḷḷalkaḷ, q.v.; முதல் எழுவள்ளல்களுள் ஒருவன் (பிங்.) |
| சகரிகம் | cakarikam, n. šaikharika. A plant growing in hedges and thickets; See நாயுருவி. (மலை.) . |
| சகரையாண்டு | cakarai-y-āṇṭu n. <> šaka +. See சகாப்தம் (S.I.I.i, 87.) . |
| சகல் | cakal, n. prob. mašaka. Gnats, small flies; கொதுகு. (பிங்.) |
| சகலகம் | cakalakam, n. <>chagalaka. Goat; வெள்ளாடு. (யாழ்.அக.) |
| சகலகலாவல்லவன் | cakala-kalā-vallavaṉ, n. <>sakala+kalā +. Person well-versed in all branches of learning; எல்லாக்கலைகளுங் கற்றுத் தேர்ந்தவன். |
| சகலகலாவல்லி | cakala-kalā-valli, n. <>id.+id.+vallī. Sarasvatī, as the Goddess of all learning; [கலைகளனைத்திற்கும் உரியவள்] சரசுவதி. சகலகலாவல்லி மாலை. (குமர.பிர.சகல.). |
| சகலகுணசம்பன்னன் | cakala-kuṇa-cam-paṉṉaṉ, n. <>id.+ guṇa +. One endowed with all good qualities; நற்குணங்களெல்லாம் நிரம்பியவன். |
| சகலத்திராள் | cakalattirāḷ, n. <>id. All persons, including men, women and children; எல்லோரும். Colloq. |
| சகலப்பாடி | cakala-p-pāṭi, n. See சகலன்.Colloq. . |
| சகலபாசனம் | cakala-pācaṉam, n. <>sakala+bhājana. An umbrella of Arhat, one of mu-k-kuṭai, q.v.; அருகன் முக்குடையுள் ஒன்று. (சூடா.) |
| சகலபாடி | cakala-pāṭi, n. <>சகலன் + perh. படு-. See சகலன். . |
| சகலம் 1 | cakalam, n. <>sa-kala 1.All, the whole; எல்லாம்.சகலத்திற்கு நேத்திர மாகி நின்றோன் (உத்தாரா.அசுவமேத. 1). 2. See சகலாவத்தை. |
| சகலம் 2 | cakalam, n. <>šakala. Piece, fragment; துண்டு. கொடிஞ்சியுஞ் சகலமுற்று (பாரத.பதினான்.150). |
| சகலமங்கலை | cakala-maṅkalai, n. <>sakala +. Pārvatī; பார்வதி. (யாழ்.அக.) |
| சகலமோகினி | cakala-mōkiṉi, n. <>sakala +. Māyā, the power of illusion in creation, personified as a female principle obscuring the mind; உலகத் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள மாயாசத்தி. (w.) |
| சகலர் | cakalar, n. <>id. (šaiva.) Souls of the lowest class subject to mummalam; மும்மலமுடைய ஆன்மாக்கள். அஞ்ஞான ரச்சகலத்தர் சகலராம் (திருமந்.498). |
| சகலவியாபி | cakala-viyāpi, n. <>id. +. God, as omnipresent. See சர்வவியாபி. . |
| சகலன் | cakalaṉ, n. prob. sakula. Wife's sister's husband; தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன். (பிங்.) |
| சகலாகமபண்டிதர் | cakalākama-paṇṭitar, n. <>sa-kala+āgama +. Aruṇanti-civācāriyar, the author of civa-ṉāa-cittiyār, as learned in all the āgamas; சிவஞானசித்தியார் இயற்றிய அருணந்திசிவாசாரியர். |
| சகலாத்தன் | cakalāttaṉ, n. <>id. + āpta. God worshipped by the Nirgrantha sect of Jainas; அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர்.அனையராஞ் சகலாத்தரை (பிரபோத.33, 6). |
| சகலாத்து | cakalāttu, n. <>U. saklāt <> Port. escarlata. [M. šakalāttu.] Woollen stuff; broadcloth; ஒருவகைக் கம்பளித் துணி. கட்டிலின்மேற் கட்டி சகலாத்தென்றும் (விறலிவிடு.742). |
| சகலாவத்தை | cakalāvattai, n. <>sa-kala + அவத்தை. 1. See மேலாலவத்தை.(சிவப்.கட்.) . 2. See காரணசகலம்.(திருவால.கட்.) |
