Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகலி | cakali, n. <>šakalī nom.sing. cf šakalin. A kind of fish; ஒருவகை மீன். |
| சகலிகரணம் | cakalikaraṇam, n. <>šakalīkaraṇa. Breaking into pieces; துண்டுதுண்டாக்குகை. (யாழ்.அக.) |
| சகலை | cakalai, n. See சகலன். Loc. . |
| சகவம் | cakavam, n. A bird; பறவைவகை. (யாழ்.அக.) |
| சகவாசம் | cakavācam, n. <>saha-vāsa. Association, friendship, intercourse; நட்பு. |
| சகளத்திருமேனி | cakaḷa-t-tirumēṉi, n. <>sa-kala +. (šaiva.) The body or form assumed by Siva; சிவனது உருவவடிவம். |
| சகளநிட்களம் | cakaḷa-niṭkaḷam, n. <>id. +. The aspect of Siva as being with and without form, represented by the Liṅga; இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி. (சி.போ.பா.8, 1, 359.) |
| சகளப்பாடி | cakaḷappāṭi, n. See சகலப் பாடி. (யாழ்.அக.) . |
| சகளம் | cakaḷam, n. <>sa-kala. (šaiva.)The aspect of Siva as having form, represented by the images ; உருவத்திருமேனி. சகளமாய் வந்ததென்றுந்தீபற (திருவுந்தி.1). |
| சகளவல்லகி | cakaḷavallaki, n. <>id. +. vallaki A kind of lute; வீணைவகை. (பரத.ஒழிபி.15.) |
| சகளன் | cakaḷaṉ, n. <>sa-kala. 1. See சகலன்.(W.) . 2. Siva, as with form; |
| சகளாதனம் | cakaḷātaṉam, n. perh. sa-kalā + ā-sana. A yōgic posture in which a person sits cross-legged over his left hand; இடக்கையின் மேல் இருகாலையும் ஊன்றி அட்டணைக்காலிட்டிருக்கும் ஆசனம். (யாழ்.அக.) |
| சகளீகரணஞ்செய் - தல் | cakaḷīkaraṇacey-, v. intr. <> šakalī-karaṇa +. To perform aṅka- niyācam and kara- niyācam; செபழதலியவற்றில் அங்கநீயாசகர நீயாசங்கள் செய்தல். (சங். அக.) |
| சகளீகரி - த்தல் | cakaḷīkari-, 11 v. intr. <> šakalīkr. To assume form; உருவங்கொள்ளுதல். (சிவபிர.4, அவ. |
| சகன் 1 | cakaṉ, n. <>šaka. šālivāhana; சாலிவாகனன். சகன்காலம். (பெருந்தொ.956). |
| சகன் 2 | cakaṉ, n. <>jagat . Lord of the Universe; உலகநாயகன், குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு. (சி.போ.8, 2). |
| சகன் 3 | cakaṉ, n. See சகா1, 1. . |
| சகன்மகதாது | cakaṉmaka-tātu, n. <>sakarmaka +. (Gram.) Transitive verb, as a verb accompanied by an object; செயப்படுபொருள் குன்றாவினை. (பி.வி.35, உரை.) |
| சகன்மகர்த்தரிப்பிரயோகம் | cakaṉma-karttari-p-pirayōkam, n. <>sakarma +. (Gram.) Active voice of a transitive verb; செயப்படுபொருள் குன்றாவினை கொண்ட செய்வினை வழக்கு. (பி.வி.36, உரை.) |
| சகன்மம் | cakaṉmam, n. See சகன்மகதாது. . |
| சகனம் 1 | cakaṉam, n. <>jaghana. But-tocks, rump; பிருட்டம். (பிங்.) |
| சகனம் 2 | cakaṉam, n. <>šaka. See சகாப்பதம். ஏழஞ்சிருநூறெடுத்தவாயிரம் வாழுநற் சகனமருவா நிற்ப (சங்கற்ப.பாயி.). |
| சகனம் 3 | cakaṉam,. n. <>sahana. Patience; forbearance; பொறுமை. |
| சகஸ்திரபேதி | cakastirapēti, n. See சகஸ்ரபேதி. (w.) . |
| சகஸ்திராட்சன் | cakastirāṭcaṉ, n. <>sahasrā-kṣa. Indra, as thousand-eyed; (ஆயிரங்கண்ணுடையோன்) இந்திரன்.(w.) |
| சகஸ்ரநாமம் | cakasra-nāmam, n. <>sahas-ra-nāma. Sacred book containing thousand names of a deity; கடவுளின் ஆயிரநாமங்களைக் கூறும் நூல். |
| சகஸ்ரநாமார்ச்சனை | cakasra-nāmārccaṉai, n. <>id. +. Worship of a deity by offering at its feet a leaf, flower or pinch of saffron on pronouncing each of its thousand names; கடவுளுடைய ஆயிரநாமங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி மலர் முதலியவற்றை இட்டுப் பூசிக்கை. |
| சகஸ்ரபேதி | cakasrapēti, n. A kind of ore; உலோகமண் வகை. |
| சகஸ்ரம் | cakasram, n. <>sahasra. The number 1000; ஆயிரம். |
| சகஸ்ராரசக்கரம் | cakasrāra-cakkaram, n. <>id. +. A discus-mark on the foot of Lord Buddha, as having thousand spokes; புத்தரது பாதத்திலுள்ள இரேகை விசேடம். (மணி.5, 104, உரை.) |
| சகஸ்ராரத்தட்டு | cakasrāra-t-taṭṭu, n. <>sahasra-dhārā +. See சகத்திரதாரை. . |
| சகா 1 | cakā n. <>sakhā nom. sing. of sakhi. Companion, associate; தோழன். 2.Assistance; |
