Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகா 2 | cakā n. <>sahā. Rue. See பாம்பு கொல்லி. (மலை.) . |
| சகாகோடிசங்கம் | cakākōṭicaṅkam, n. See சதகோடிசங்கம். (W.) . |
| சகாகௌலம் | cakākaulam, n. A hell; நரகவகை. (யாழ்.அக.) |
| சகாடி | cakāti, n. cf. jhaṣā. Sponge-gourd. See பீர்க்கு. (மலை.) . |
| சகாத்தம் | cakāttam, n. <>šakābda. See சகாப்தம். எண்ணிய சகாத்த மெண்ணுற்றேழின் மேல் (கம்பரா.தனியன்). |
| சகாத்தன் | cakāttaṉ, n. prob. sakhā+āpta. Companion, friend; தோழன். (யாழ்.அக.) |
| சகாதி | cakāti, n. cf. sahā. Rue; See பாம்பு கொல்லி. (சங்.அக.) . |
| சகாதேவன் | cakātēvaṉ, n. <>Sahadēva. See சகதேவன். . |
| சகாதேவி | cakātēvi, n. <>sahadēvi. See சகதேவி 2 .(w.) . |
| சகாப்தம் | cakāptam, n. <>šakābda. šālivāhana Era commencing from 78 A. D.; கி.பி.78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம். |
| சகாபாடி | cakāpāṭi, n. See சகபாடி. . |
| சகாமியம் | cakāmiyam, n. <>sa-kāmya. Acts performed in expectation of reward, opp. to niṣ-kāmiyam ; பயனைவிரும்பிச் செய்யும் கருமம். சாபாதிக்குச் சகாமியமே யேது. (வேதா.சூ.179). |
| சகாயதனம் | cakāya-taṉam, n. <>சகாயம் +. Grant-in-aid; உதவியாகக் கொடுக்கும் பணம். Mod. |
| சகாயம் | cakāyam, n. <>sahāya. 1.Help, aid, support, patronage; துணை. (பிங்.) 2. Cheapness, low or moderate price; 3. Relief, ease; improvement in health; |
| சகாயன் | cakāyaṉ, n. <>id. 1.Assistant, helper; உதவி செய்வோன். 2.Companion, friend; |
| சகாயி - த்தல் | cakāyi-, 11 v. tr. <>id. Loc. To assist, help; உதவிசெய்தல். To sell cheap; |
| சகாயி | cakāyi- n. See சகாயன். . |
| சகார்த்தத்திருதியை | cakārtta-t-tirutiyai, n. <>sahārtha+tṟtyā. (Gram.)The instrumental case in the sense of concomitance; உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம்வேற்றுமை. (பி.வி.6, உரை.) |
| சகாரம் | cakāram, n. <> M. šakāram. Abuse; ஏச்சு.Nā. |
| சகாரி | cakāri, n. <>šaka+ ari. Vikramāditya of Ujjayini, as the enemy of the šakas; [சகர்களின் பகைவன்] விக்கிரமாதித்தன். (W.) |
| சகாரி - த்தல் | cakāri-, 11 v. tr. <>M, šakāri. To abuse, revile; ஏசுதல். Nāṉ. |
| சகானா | cakāṉā, n. <>U. sahānā. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத.இராக.55.) |
| சகி 1 | caki, n. <>sakhi. Male companion; தோழன். சிந்தை கலந்த சகியாகச் சேர்ந்து (உத்தரரா.அனுமப்.45). |
| சகி 2 | caki, n. <>sakhī. Female companion, lady's maid, confidante; தோழி. |
| சகி - த்தல் | caki-, 11 v . tr.<>sah. 1.To bear, brook, tolerate, forbear; பொறுத்தல். (சூடா.) 2. To excuse, forgive; |
| சகித்தல் | cakittal, n. <>சகி -. (Vēdānta.) Treating pleasure and pain alike, one of camāti-caṭka-campattu, q.v.; சமாதிகட்கசம் பத்துக்களுள் சுகதுக்கங்களை ஒரு நிகராக அனுபவிக்குமது. அமர் செயுஞ் சுகதுக்காதியனுபவிப்பது சகித்தல் (கைவல்.தத்துவ.9). |
| சகித்துவம் | cakittuvam, n. <>sakhi-tva. Companionship, friendship; தோழமை. (யாழ்.அக.) |
| சகிதம் | cakitam, adv. <>sahita. Together, in company with; கூட. தன் சினேகிதன்சகிதம் வந்தான். |
| சகிதன் 1 | cakitaṉ n. <>id. One in company with another; உடன்கூடியவன். உமாசகிதாபோற்றி (சிவரக.கணபதிகுமர.4). |
| சகிதன் 2 | cakitaṉ n. <>cakita. Timid person, coward; அஞ்சி நடுங்குபவன். (சூடா.) |
| சகிப்பாளி | cakippāḷi, n. <>சகிப்பு+ஆள்-. One who bears with patience; one who forgives; பொறுமையுள்ளவன். |
| சகிப்பு | cakippu, n. <> சகி -. Bearing, sustaining, enduring, forgiving; பொறுக்கை. |
| சகியம் 1 | cākiyam, n. (மலை.) 1. cf. suvahā. A plant common in sandy tracts; See நிலப்பணை. . 2. cf. subhagāhvayā. Turmeric; 3. cf. sahakāra. Mango tree. See மா. |
| சகியம் 2 | cakiyam, n. <> sahya. The mountain in coorg where the Cauveri has its source; காவிரிநதி உற்பத்தியாகும் மலை. |
| சகுட்டகம் | cakuṭṭakam, n. cf. cakṣuṣyā. worm-killer. See ஆடுதீண்டாப்பாளை. (மலை.) . |
