Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகோதரன் | cakōtaraṉ, n. <>sahōdara. 1. Brother. உடன்பிறந்தவன். (சூத. ஞான. 7, 15.) 2. Son of the father's brother or mother's sister, cousin; |
| சகோதரி | cakōtari, n. <>sahōdarī. 1. Sister; உடன்பிறந்தாள். 2. Daughter of the father's brother or mother's sister cousin; |
| சகோரம் 1 | cakōram, n. <>cakōra. Cakora, the Greek partridge fabled to subsist on moonbeams, caccabis graca; நிலாமுகிப்புள். (பிங்.) |
| சகோரம் 2 | cakōram, n. cf. cakra. Cakra bird. See சக்கரவாகம். (திவா.) . |
| சகோரம் 3 | cakōram, n. 1. Crow-pheasant. See செம்போத்து. (திவா.) . 2. A species of large owl; 3. Shoe-flower. See செம்பரத்தை. (மலை.) |
| சங்கக்காணிக்கை | caṅka-k-kāṇikkai, n. <>சங்கம்2 +. Congregational contribution; சபைக்காணிக்கை. Chr. |
| சங்கக்காப்பு | caṅka-k-kāppu, n. <>சங்கம்3 +. Bracelet made of conch-shells worn by women; மகளிர் கையிலணியும் சங்குவளை. Parav. |
| சங்கக்குழையன் | caṅka-k-kuḻaiyaṉ, n. <>id. +. Siva, as wearing conch ear-ornaments; [சங்கினாலியன்ற காதணியையுடையவன்] சிவன். சங்கக்குழையனைத் தென்கருவாபுரித் தாணுவை. (திருக்கருவை. கலித். 56). |
| சங்கங்குப்பி | caṅkaṅ-kuppi, n. cf. šaṅkhinī +. Smooth volkameria. See பீநாறி சங்கு. (பதார்த்த. 259.) . |
| சங்கச்செய்யுள் | caṅka-c-ceyyuḻ, n. <>சங்கம் +. Classical poem of the sangam period; சங்ககாலத்துப் பாடல். |
| சங்கஞ்செடி | caṅka-ceṭi, n. prob. šaṅkhinī +. Mistletoe berry thorn, m. sh., Azima tetracantha; செடிவகை. (சங். அக.) . |
| சங்கட்டசதுர்த்தி | caṅkaṭṭa-caturtti, n. <>saṅkaṣṭa +. A fast observed in honour of Ganēša; விநாயகரைக் குறித்து அனுட்டிக்கப் பெறும் ஒரு விரதம். சங்கட்டசதுர்த்தி முறைமையிற் செய்து (விநாயகபு. 47, 6). |
| சங்கட்டம் | caṅkaṭṭam, n. <>saṅkaṣṭa. 1. See சங்கடம், 1. சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் (அருட்பா, 1, விண்ணப்பக்கலி. 348). 2. Uneasiness, sickness, bodily pain; 3. Death-throes; |
| சங்கடப்படலை | caṅkaṭa-p-paṭalai, n. <>சங்கடம்1 +. A barred gate at the entrance of a house or garden; இரும்புக்கம்பியாலான தடைவாசல். (J.) |
| சங்கடப்படு - தல் | caṅkaṭa-p-paṭu-, v. intr. <>id. +. [T. saṅkaṭapadu.] To be in trouble, to be distressed or grieved at heart; வேதனையுறுதல். Colloq. |
| சங்கடப்பாடு | caṅkaṭa-p-pāṭu, n. <>சங்கடப்படு-. [T.saṅkatapātu.] State of being in trouble or distress; வேதனையுறும் நிலை. Colloq. |
| சங்கடம் 1 | caṅkaṭam, n. <>saṅkaṭa. 1. Difficulty, trouble, straitened circumstances; வருத்தம். ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய (தேவா. 702, 2). 2. Narrow path; 3. See சங்கடப்படலை (J.) |
| சங்கடம் 2 | caṅkaṭam, n. <>Port. jangada. Ferry-boat of two canoes with a platform thereon; இரட்டைத்தோணி. (J.) |
| சங்கடாட்சம் | caṅkaṭāṭcam, n. <>saṅkaṭa + akṣa. The closing of eyes, as in distress; துன்பமிகுதியால் கண்ணைமூடுகை. (யாழ். அக.) |
| சங்கடி | caṅkaṭi, n. <>T. saṅkaṭi. Ragi porridge; கேழ்வரகுக்களி. (இந்துபாக. 83.) |
| சங்கடை 1 | caṅkaṭai, n. <>சாங்கடை. 1. The last moment of one's life, the moment of death ; மரணசமயம். (w.) |
| சங்கடை 2 | caṅkaṭai, n. See சங்கடம் 1,1. . |
| சங்கடைப்பன் | cankaṭaippaṉ, n. <>சங்கு2 +. A kind of cattle-disease; மாட்டு நோய்வகை. (மாட்டுவா. 67.) |
| சங்கணிதுறை | caṅkaṅi-tuṟai, n. <>id. + அணி +. The south bank of the river Tāmraparṇi at āḻvār-tirunakari; ஆழ்வார்த்திருநகரியில் தாமிரபருணியின் தென்கரை. பொருநற் சக்ஙணிதுறைவன் (திவ். திருவாய்.10, 3, 11). |
| சங்கத்தமிழ் | caṅka-t-tamiḻ, n. <>சங்கம்2 +. 1. Classical Tamil of the Sangam period; சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ். சங்கத்தமிழ் மாலை முப்பதும் (திவ். திருப்பா. 30). 2. Tamil works of the Sangam age; |
| சங்கத்தார் | caṅkattār, n. <>id. 1. Members of an assembly, academy, a society, council or committee; சபையோர். 2. Buddhist and Jain fraternity of monks; 3. The learned body of poets in Madura, in ancient times; |
