| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| சங்காரகாலத்துப்பு | caṅkārakālattuppu, n. perh. சங்காரகாலம் (=அமர்) + உப்பு. Salt taken from urine; அமரியுப்பு. (w.) | 
| சங்காரகாலம் | caṅkāra-kālam, n. <>samhāra +. Time of dissolution of the universe; ஊழிக்காலம். | 
| சங்காரதூதன் | caṅkāra-tūttaṉ, n. <>id. +. Angel of Destruction; அழித்தற்றொழிலுக்குரிய தேவதூதன். Chr. | 
| சங்காரம் 1 | caṅkāram, n. <>sam-hāra. 1. Destruction, annihilation; dissolution in general; அழிக்கை. (சூடா.) 2. Periodical destruction of the universe reducing it to the primitive Māyā, one of paca-kiruttiyam, q.v.; 3. Suppression, restraining; | 
| சங்காரம் 2 | caṅkāram, n. See சங்காரித்தம். (சூடா.) . | 
| சங்காரமுத்திரை | caṅkāra-muttirai, n. <>sam-hāra +. A hand-pose in which the thumb is kept erect and the other fingers are folded inward, assumed in the worship of šiva; கட்டைவிரல் நிற்க மற்றைநான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரவகை. (செந். x, 424). | 
| சங்காரமூர்த்தி | caṅkāra-mūrtti, n. <>id. +. šiva, the God of Destruction; அழித்தற்றொழிலைப் புரியுஞ் சிவன். சங்காரமூர்த்தி ஆறுமாக (சி. சி. 1. 47. மறை.). | 
| சங்காரன் | caṅkāraṉ, n. <>id. Destroyer; அழிப்பவன். அந்தகாசுர சங்காரனை (சிவரக. கத்தரிப்.15). | 
| சங்காரி | caṅkāri, n. perh. sam-hārī. nom. sing. of sam-hārin. Horse-tail millet. See குதிரைவாலி. (மலை.) . | 
| சங்காரித்தம் | caṅkārittam, n. prob. samhrta. Celestial cloud which rains flowers, one of catta-mēkam, q.v.; சத்தமேகங்களுள் பூவைப் பொழியும் மேகம். (பிங்.) | 
| சங்காவியத்துக்குப்பார் - த்தல் | caṅkāviyattukku-p-pār-, v. intr. <>சங்காவியம் +. To attempt by magic to relieve one who is panicstricken; பெரும்பயம் நீங்க மந்திரித்தல். (J.) | 
| சங்காவியம் | caṅkāviyam, n. prob. šaṅkā + bhaya. State of panic; அச்சத்தால நிகழும் அவச நிலை. (J.) | 
| சங்காளர் | caṅkāḷar, n. <>saṅga + ஆள்-. Lustful persons, as prostitutes; கலவியையே நாடுபவர். சங்காளர் சூது கொலைகாரர் (திருப்பு. 748). | 
| சங்கி 1 - த்தல் | caṅki-, 11 v. <>šaṅkā. tr. To doubt; சந்தேகித்தல்.-intr. intr. To hesitate; | 
| சங்கி 2 - த்தல் | caṅki-, 11 v. tr. prob. saṅkhyā. To honour, respect, regard; கனப்படுத்துதல். சவையில்வந் திங்குளோரைச் சங்கியாதகன்ற தூதை (பிரபோத 25, 37). | 
| சங்கி 3 | caṅki, n. <>saṅgī nom. sing. of saṅgin. That which is related, connected; சம்பந்தமுடையது. விஷயசங்கியாயிருக்கும் ஆணவதர்மம் (சி. சி. 2, 56, சிவாக்.). | 
| சங்கிதம் | caṅkitam, n. <>šaṅkita. That which is questioned or doubted; சந்தேகிக்கப்பட்டது. (சி. சி. 6, 5, சிவாக்.) | 
| சங்கிதை | caṅkitai, n. <>sam-hitā. 1. Collection, extensive compilation, any systematically arranged collection of texts or verses; விஷயத்தொகுதி. வாயுசங்கிதை. 2. A continuous hymnal text of the Vēda, formed out of the padas or individual words by proper phonetic changes; 3. The collection of mantras in Rg-vēda, etc.; 4. History; | 
| சங்கியை | caṅkiyai, n. <>saṅ-khyā. 1. Number; எண். (சங். அக.) 2. Calculation, reckoning; 3. Intellect; | 
| சங்கிரகக்கூர்மை | caṅkiraka-k-kūrmai, n. Sea-salt; கடலுப்பு. (w.) | 
| சங்கிரகணம் | caṅkirakaṇam, n. <>samgrahaṇa. Accepting, receiving; ஏற்றுக்கொள்ளுகை. (சங். அக.) | 
| சங்கிரகம் | caṅkirakam, n. <>saṅ-graha. Compendium, abridgment, epitome; சுருக்கம். தர்க்கசங்கிரகம். | 
| சங்கிரகி - த்தல் | caṅkiraki-, 11 v. tr. <>id. To abridge, summarise; சுருக்குதல். இம்மூன்று விருத்தத்தினானும் சங்கிரகித்துச் சொன்ன (சி. சி. 1, 14, சிவாக்.) | 
| சங்கிரந்தனன் | caṅkirantaṉaṉ, n. <>saṅkrandana. Indra; இந்திரன். (பிங்.) | 
| சங்கிரம் | caṅkiram n. perh. jāṅgala. Jungle, forest; காடு. (பிங்.) | 
| சங்கிரமசாதி | caṅkirama-cāti, n. See சங்கரசாதி. (யாழ். அக.) . | 
