Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கேதம் 2 | caṅkētam, n. Land assigned to a temple and made tax-free; கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம். Nā. |
| சங்கேதி | caṅkēti, n. A sub-sect among Brahmins; பிராமணருள் ஒருவகையினர். Loc. |
| சங்கை 1 | caṅkai, n. <>šaṅkā. 1. Doubt, hesitation, suspicion; ஐயம். சங்கையுந் துணிவும் (திவ். பெரியதி. 4, 5, 8). 2. Fear, terror, apprehension; 3. Evil spirit; |
| சங்கை 2 | caṅkai, n. <>samjā. 1. Motive, thought எண்ணம். சங்கையிற் சழக்கிலன் (கம்பரா. சம்பா. 28). 2. Custom, usage; |
| சங்கை 3 | caṅkai, n. <>samaṅgā. 1. Floating sensitive plant; வறட்சுண்டி. (யாழ். அக.) 2. Dried ginger; |
| சங்கை 4 | caṅkai, n. <>saṅkhyā. 1. Number; எண். சங்கை தணிக்குங் கொட்டாரம் (சிவதரு. சிவஞானதான. 70). 2. Measure, estimate; 3. Honour, esteem, reverence; |
| சங்கை 5 | caṅkai, n. <>jaṅghā. Shank, part of the leg between the ankle and the knee; கணைக்கால். திரண்டு நீண்ட சங்கையும் (திருவிளை. உக். 35). |
| சங்கைக்கேடு | caṅkai-k-kēṭu, n. <>சங்கை4 +. [M. šaṅkakkēṭu.] Disgrace, dishonour; அவமரியாதை. (w.) |
| சங்கைத்தாழ்ச்சி | caṅkai-t-tāḷcci, n. <>id. +. Disrepute; அபகீர்த்தி. (J.) |
| சங்கைமான் | caṅkaimāṉ, n. <>saṅkhyā-vān nom. of saṅkhyā-vat. A respectable person; கவுரவழள்ளவன். (w.) |
| சங்கைவான் | caṅkaivān, n. See சங்கைமான். . |
| சங்கைவிஷம் | caṅkai-viṣam, n. <>சங்கை1 +. Suffering caused by fear at the sight or touch of serpents; பாம்பைத் தொடுதல் பார்த்தல் முதலியவற்றால் தொன்றிய அச்சத்தலாகிய நோய். (சீவரட்.) |
| சங்கோசபரிவாரம் | caṅkōca-parivāram, n. <>saṅ-kōca +. A small company of men appointed by a king to receive guests; தக்கோரை உபசரித்தழைப்பதற்கென்று அரசனால் நியமிக்கப்பட்ட சிறுகூட்டத்தார். (சிலப். 28, 89, உரை.) |
| சங்கோசபிசுனம் | caṅkōca-picuṉam, n. <>saṅkōca-pišuna. saffron. Se குங்குமம். (மூ. அ.) . |
| சங்கோசம் 1 | caṅkōcam, n. <>id. 1. See சங்கோசபிசுனம். . 2. Turmeric; |
| சங்கோசம் 2 | caṅkōcam, n. <>saṅ-kōca. 1. Contracting, shrinking; சுருங்குகை. மாயையிதற்கிருதருமஞ் சங்கோச விகாச மென்றாம் (வேதா. சூ. 60). 2 Bashfulness, shyness, coyness, ticklishness; |
| சங்கோசனகாரி | caṅkōcaṉa-kāri, n. <>saṅkōcana +. Astringents; துவர்ப்புப்பொருள் (பைஷஜ.12.) |
| சங்கோபனம் | caṅkōpaṉam, n. <>saṅ-gōpana. Secrecy; மறைவு. (சங்.அக.) |
| சங்க்ஷேபம் | caṅkṣēpam, n. <>saṅ-ṣēpa. Abstract, epitome, compendium, abridgment; சுருக்கம். |
| சச்சடம் | cacaṭam, n. cf. kacaṭa. Lotus. See தாமரை. (மலை.) . |
| சச்சடி | caccaṭi, n. <>சந்தடி. Crowding, thronging of people; சனங்கள் திரண்டுகூடுகை. (J.) |
| சச்சந்தன் | caccantaṉ, n. <>satyan-dhara. Father of Cīvaka; சீவகனுடைய தந்தை. (சீவக.) |
| சச்சம் | caccam, n. <>satya. Truth, genuineness; உண்மை. (w.) |
| சச்சம்பிரதாயம் | caccampiratāyam, n. <>sat-sampradāya. Good custom or approved usage; நல்ல வரன்முறை. சச்சம்பிரதாயந் தாமுடையோர் கேட்டக்கால். (உபதேசரத். 58). |
| சச்சரவு | caccaravu, n. prob. jarjara. Quarrel, disturbance; கலகம். |
| சச்சரி | caccari, n. <>jharjhara. A kind of drum; வாத்தியவகை. கொக்கரையின் சசரியின் பாணியானை (தேவா. 722, 1). |
| சச்சரை 1 | caccarai, n. prob. jarjara. 1. See சச்சரவு. . 2. Broken piece; |
| சச்சரை 2 | caccarai, n. See சச்சரி. (நன். 273, மயிலை.) . |
| சச்சவுக்கம் | caccavukkam, n. Redupl. of சவுக்கம். [T. tcatccarvukamu.] Exact square; சரி சதுரம். |
