Word |
English & Tamil Meaning |
|---|---|
| சச்சற்புடம் | caccaṟpuṭam, n. <>caccatpuṭa. (Mus.) A variety of time-measure represented by one of paca-tāḷam, q. v.; இரண்டு குருவும் ஓர் இலகுவும் ஒரு புலுதமுமாக எட்டு மாத்திரைக்கொண்ட தாளவகை. (பரத. தாள. 11.) |
| சச்சனம் | caccaṉam, n. perh. rakṣaṇa. Protection, watch; காவல். (யாழ். அக.) |
| சச்சனர் | caccaṉar, n. <>saj-jana. Worthy, virtuous people; ஒழுக்கத்திற் சிறந்த நல்லோர். |
| சச்சாயிரு 1 - த்தல் | caccā-iru-, v. intr. <>சச்சு1 +. To be of inferior quality, as tobacco; புகையிலை முதலியன தாழ்ந்ததாயிருத்தல். (J.) |
| சச்சாயிரு 2 - த்தல் | caccāy-iru-, v. intr. <>சச்சு2 +. Colloq. 1. To be crowded; நெருக்கமாயிருத்தல். 2. To be in confusion; |
| சச்சாரம் | caccāram, n. <>T. satjjāramu <>sāmajāgāra. Elephant-stable; யானைக்கூடம். வாசமுறு சச்சாரமீதென்னை . . . மத்தகசமென வளர்த்தாய். (தாயு. மௌனகுரு. 1). |
| சச்சிக்காரம் | cacci-k-kāram, n. <>sarjikākṣāra. Impure carbonate of soda; உப்புவகை. |
| சச்சிதம் | caccitam, n. <>sajjita. State of being fully decorated or dressed; அலங்கரித்து வைக்கை. (யாழ். அக.) |
| சச்சிதானந்தம் | caccitāṉantam, n. <>sat + cit + ānanda. Existence, knowledge and bliss, the threefold attributes of the Supreme Spirit; உண்மை அறிவு ஆனந்தம் எனப் பரம்பொருட் குரிய முக்குணங்கள். |
| சச்சிதானந்தன் | caccitāṉantaṉ, n. <>id. + id. +. The Supreme Spirit, as having the threefold attributes of existence, knowledge and bliss; உண்மை அறிவு ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய பரம்பொருள். |
| சச்சிதானந்தை | caccitāṉantai, n. <>id. + id. +. The Supreme šakti, as having the threefold attributes of existence, knowledge and bliss உண்மை அறிவு ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய சத்திசொரூபம். அகண்டாகார சச்சிதானந்தையை யறியாதபேர் (சி. சி. 1, 48, சிவாக்.). |
| சச்சு 1 | caccu, n. <>T. tcaccu. 1. Inferior quality of articles, as tobacco leaves; தாழ்ந்த தரமான புகையிலை முதலியன. (J.) 2. Chaff; |
| சச்சு 2 | caccu, n. prob. சச்சரவு. 1. Crowd, throng, bustle, confusion; சந்தடி. 2. Irksome-ness; |
| சச்சு 3 | caccu, n. <>cacu. Bird's beak; பறவை மூக்கு. (w.) |
| சச்சு 4 | caccu, n. <>சற்று. Littleness, smallness; கொஞ்சம். சச்சில் அடங்காது. (சங். அக.) |
| சச்சு 5 | caccu, n. A kind of water mimosa. See நீர்ச்சுண்டி. (மலை.) . |
| சச்சுருவம் | cacuruvam, n. <>tad-rūpa. [Tu. sadrūpa.] Exact resemblance or likeness. See தத்ரூபம். Colloq. . |
| சச்சை | caccai, n. <>carcā. 1. Research, investigation, deliberation, discussion; ஆராய்ச்சி. 2. Repeated reading, recitation; |
| சச்சையன் | caccaiyaṉ, n. <>sattā. God, as Reality; உண்மைப்பொருளானவன். சச்சையனே மிக்கதண்புனல் விச்சையனே (திருவாச. 6, 31). |
| சசகதி | caca-kati, n. <>šaša +. A hare-like pace of horse, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஐந்தனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை. (திவா.) |
| சசகம் | cacakam, n. <>šašaka. See சசம். (சங். அக) . |
| சசசசவெனல் | caca-caca-v-eṉal, n. n. Onom. expr. signifying the blowing of the wind; காற்றின் ஒலிக்குறிப்பு. வாயுவுக்குச் சசசசவான ஒலியும் (சி. சி. 2, 65. மறைஞா.). |
| சசபரம் | caca-param, n. perh. kāca + bhara. Kaus, a large and coarse grass. See நாணல். (L.) . |
| சசம் | cacam, n. <>šaša. Hare, rabbit; முயல். (திவா.) |
| சசம்பரி | cacampari, n. Castor plant. See ஆமணக்கு. (மலை.) . |
| சசமதம் | caca-matam, n. prob. šaša +. Musk; கஸ்தூரி. (மூ. அ.) |
| சசவிடாணம் | caca-viṭāṇam, n. <>id. +. See சசவிஷாணம். (w.) . |
| சசவிஷாணம் | caca-viṣāṇam, n. <>id. _ viṣāṇa. Hare's horn, a term for illustrating an impossibility; முயற் கொம்பு. [இல்பொருட்கு உதாரணமாகக் காட்டப்பதுவது.] (வேதா. சூ. 57, உரை.) |
| சசன் | cacaṉ, n. <>id. (Erot..) Man of hare-like nature, one of three āṭavar-cāti, q.v.; முயற்சாதியாடவன். (கல்லா. 7, மயிலேறும். உரை.) |
| சசாங்கன் | cacāṉ kaṉ, n. <>šašāṅka. Moon, as hare-marked; [முயற்கறையுடையவன்] சந்திரன். |
| சசாபம் | cacāpam, n. perh. šāriba. A kind of Indian sarsaparilla. See சிறுநன்னாரி. (மலை). . |
