Word |
English & Tamil Meaning |
---|---|
சத்திமுகம் | catti-mukam, n. <> šakti-mukha. Royal mandate; அரசனது ஆணைப்பத்திரம். சாலாபோகமும் தேவதானமும் சத்திமுகமின்றி விலக்கப் பெறார். (T. A. S. i, 9). |
சத்தியக்கடுதாசி | cattiya-k-kaṭutāci, n. <> சத்தியம்1+. Affidavit; பிரமாணப்பத்திரிகை. (J.) |
சத்தியங்கேள் - தல் [சத்தியங்கேட்டல்] | cattiyaṅ-kēḷ-, v. intr. <>id. +. To put one on oath; பிரமாணம் வாங்குதல். (W.) |
சத்தியசந்தன் | cattiya-cantaṉ, n. <> satya-sandha. Truthful man; உண்மை பேசுபவன். |
சத்தியசந்தை | cattiya-cantai, n. <> satya-sandha. Truthful woman; உண்மை பேசுபவள். |
சத்தியசம்பன்னன் | cattiya-campaṉṉaṉ, n. <> satya +. See சத்தியசந்தன். . |
சத்தியஞ்செய் - தல் | cattiya-cey-, v. intr. <> சத்தியம்1+. To swear, take oath, as in a court of justice; பிரமாணம் பண்ணுதல். |
சத்தியஞானம் | cattiya-āṉam, n. <> satya+. True, valid knowledge; மெய்யுணர்வு. (மணி. 27, 286, உரை.) |
சத்தியநாதர் | catti-nātar, n. <>id. +. Name of a great Siddha; நவநாதசித்தருள் ஒருவர். (சது.) |
சத்தியநிருவாணம் | cattiya-niruvāṇam, n. <> sadyah+. See சத்தியோநிர்வாணதீட்சை. (சி. சி. 8, 4.) . |
சத்தியப்பிரமாணம் | cattiya-p-piramāṇam, n. <> சத்தியம்1+. 1. Veracity, truth; உண்மை. 2. Taking oath, swearing, as of witnesses; |
சத்தியப்பிரமாணிக்கம் | cattiya-p-piramāṇikkam, n. <> id. +. See சத்தியப்பிரமாணம். (W.) . |
சத்தியப்பொருள் | cattiya-p-poruḷ, n. <> id. +. Reality; உள்பொருள். (சி. போ. பா. 6. பக்.114, சுவாமிநா.) |
சத்தியபாமை | cattiyapāmai, n. <> Satya-bhāmā. A favourite wife of Kṟṣṇa; கண்ணன் உகந்த தேவியருளொருத்தி. (பாகவத.10. 25, 1.) |
சத்தியம் 1 | cattiyam, n. <> satya. 1. Truth, veracity, sincerity; உண்மை. (திவா.) 2. Oath, swearing; 3. (Buddh.) The fourfold truths, viz., tukkam, tukkōṟpatti, tukkanivāraṇam, tukka-nivāraṇamārkkam; |
சத்தியம் 2 | cattiyam, n. A species of scammony swallow-wort. See குறிஞ்சா. (மூ. அ.) |
சத்தியம்பண்ணு - தல் | cattiyam-paṇṇu-, v. intr. <> சத்தியம்1+. See சத்தியஞ்செய்-. . |
சத்தியயுகம் | cattiya-yukam, n. <> id. +. Krtayuga, as the Age of Truth; [உண்மையே நிகழ்ந்த யுகம்] கிருதயுகம். |
சத்தியலோகம் | cattiya-lōkam, n. <> id. +. An upper world, abode of Brahmā, seventh of mēl-ēḻ-ulakam, q.v.; மேலேழுலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம். (பிங்.) |
சத்தியவசனம் | cattiya-vacaṉam, n. <> id. +. 1. True statement; உண்மைமொழி. 2. Truthfulness; |
சத்தியவந்தன் | cattiyavantaṉ, n. <> satya-vantah nom. pl. of. satya-vat. See சத்தியசந்தன். . |
சத்தியவாசகம் | cattiya-vācakam, n. <> சத்தியம்1+. See சத்தியவசனம். . |
சத்தியவாதி | cattiya-vāti, n. <> satya-vādī nom. sing. of satya-vādin. See சத்தியசந்தன். . |
சத்தியவான் | cattiyavāṉ, n. <> satyavān nom. sing. of satya-vat. 1. See சத்தியவந்தன். . 2. The husband of Sāvitrī; |
சத்தியவிரதன் | cattiya-virataṉ, n. <> satya+vrata. 1. One who scrupulously adheres to truth, as under a vow; உண்மைபேசுதலையே விரதமாக உடையவன். 2. Dharmaputra, the eldest of the five Pāṇdavas; |
சத்தியவேதம் | cattiya-vētam, n. <> id. +. The Bible; விவிலியநூல். Chr. |
சத்தியான் | cattiyāṉ, n. See சத்திதரன். சத்தியான் றாடொழா தார்க்கு. (இன். நாற். 1). . |
சத்தியானிருதம் | cattiyāṉirutam, n. <> satya+anṟta. Commerce, trade, as mixed with truth and falsehood; [மெய்யும் பொய்யும் கலந்தது] வாணிகத்தொழில். சத்தியானிருதம் வாணிகவிருத்தி (காஞ்சிப்பு.ஒழுக். 37). |
சத்தியோசாதம் | cattiyōcātam, n. <>sadyō-jāta. 1. A face of šiva which looks westward, one of civaṉ-ai-m-mukam, q.v.; சிவன் ஐம்முகங்களுள் மேற்கு நோக்கியது. சத்தியோசாதத்திற் காமிக மாதியைந்தும் (சைவச. பொது. 331) 2. A šaiva mantra; |