Word |
English & Tamil Meaning |
---|---|
சத்து 4 | cattu, int. <> T. K. saddu. Expr. signifying 'silence!'; அமைதியாயிருக்க வழங்குங் குறிப்புச்சொல் (கோயிலொ.) |
சத்து 5 | cattu n. A mineral poison; அவுபல பாஷாணம். (மூ. அ.) |
சத்துக்கொடு - த்தல் | cattu-k-koṭu-, v. intr. <> சத்து1+. To communicate power, strength, tone; வலிமையுண்டாக்குதல். |
சத்துச்சாரணை | cattu-c-cāraṇai, n. See சத்திசாரணை. (யாழ். அக.) . |
சத்துப்பை | cattu-p-pai, n. <> சத்து2+. Bag for flour of parched grain; சத்துமா முதலியன வைக்கும் பை. |
சத்துமா | cattu-mā, n. <> id. +. Flour of parched grain, especially rice, generally used in times of fasting; வறுத்த அரிசியின் மா. |
சத்துமொத்தெனல் | cattu-motteṉal, n. Onom. expr. signifying repeated sound, as of kicking, beating, pounding grain; ஓர் ஒலிக்குறிப்பு. Loc. |
சத்துராதி | catturāti, n. cf. šatru+arāti. See சத்துருவாதி. Loc. . |
சத்துரு | catturu, n. <> šatru. Foe, enemy, adversary; பகைவன். சத்துரு வார்த்தையொன்றிலதால் (சிவரக. ஆயுத்தேவ. 3). |
சத்துருக்கன் 1 | catturukkaṉ, n. perh. catur. A horse which has four curl-marks on its breast. மார்பில் நான்கு சுழிகளுள்ள குதிரை. (அசுவசா.19.) |
சத்துருக்கன் 2 | catturukkaṉ, n. See சத்துருக்கனன். சத்துருக்கன்னெனச் சாற்றினன் நாமம் (கம்பரா. திருவவ.123). . |
சத்துருக்கனன் | catturukkaṉaṉ, n. <> šat- Youngest brother of Rama; இராமனுடைய கடைசித் தம்பி. |
சத்துருசங்காரம் | catturu-caṅkāram, n. <> šatru +. Destruction of foes; பகைவரை அழிக்கை. சத்துருசங்கார வேலா. |
சத்துருத்தானம் | catturu-t-tāṉam, n. <>id. +. (Astrol.) The sixth house from the ascendant, as being inimical to cātakaṉ; [சாதகனுக்குப் பகையிடம்] இலக்கினத்துக்கு ஆறாம் வீடு. (லிமே. உள். 236, உரை.) |
சத்துருதுரந்தரன் | catturu-turantaraṉ, n. <>id. +. One who subdues his foes; பகைவர்களை வெல்பவன். வென்றிதானுடையான் றென்னன் சத்துருதுரந்தரன். (இறை.18, 149, உதா.) |
சத்துருநாமத்தீ | catturu-nāma-t-tī, n. perh. id.+. A mineral poison; பாஷாணவகை. |
சத்துருபட்சத்தார் | catturu-paṭcattār, n. <>id. +. Hostile side or party; பகையினத்தவர். வீமன் . . . சத்துருபட்சத்தாரை விநாசஞ் செய்து (பாரதவெண். 782, உரைநடை). |
சத்துருபாஷாணம் | catturu-pāṣāṇam, n. <> id. +. Yellow zedoary. See நிர்விஷம். (W.) |
சத்துருவாதி | catturu-vāti, n. <>id. + Foe, enemy; பகைவன். Loc. |
சத்துவகர் | cattuvakar, n. <> sat-tva. Angels gifted with the power of performing miracles, a celestial order; அற்புதங்களை நிகழ்த்தவல்ல தேவதூதர். R. C. |
சத்துவகுணம் | cattuva-kuṇam, n. <>id. +. Goodness or virtue, one of mu-k-kuṇam, q.v.; முக்குணங்களுட் சிறந்ததாய் நற்காரியங்களிலேயே நோக்கம் உண்டாக்குவதான குணம். (குறள், கடவுள், பரி, அவ.) |
சத்துவம் | cattuvam, n. <> sat-tva. 1. Existence; உளதாந்தன்மை. 2. Essence, essential principle; 3. Nature, natuiral quality or disposition; 4. Strength, power, ability, vigour; 5. (Dram.) External signs of emotions, as tears, erection of hairs on the body, one of the essential etements in dramatic representation; 6. See சத்துவகுணம். 7. Animal, creature; |
சத்துவரம் 1 | cattuvaram, n. <> sa-tvaram. Haste, hurry; விரைவு. |
சத்துவரம் 2 | cattuvaram, n. prob. catvara. Dais, pial; வேதிகை. (யாழ். அக.) |
சத்துவாரி | cattuvāri, n. <> catvārimšat. Longsight, as usually occurring in the fortieth year of a person; [(பெரும்பாலும் ஒருவனுடைய) நாற்பது (வயதில் வருவது)] வெள்ளெழுத்து. Loc. |
சத்துவாலம் 1 | cattuvālam, n. perh. sa-dvāra. (யாழ். அக.) 1. The sacrificial pit; ஓமகுண்டம். 2. Pregnancy; |
சத்துவாலம் 2 | cattuvālam, n. prob. šād-vala. Darbha grass; தருப்பைப்புல். (சங். அக.) |
சத்துவேது | cattu-v-ētu, n. <> sat+hētu. (Log.) True cause; நேர்மையான காரணம். (சங். அக.) |
சத்தை | cattai, n. <> sat-tā. 1. Being, existence; உளதாந்தன்மை. 2. Effect, use; 3. See சத்து 1,4, 5. |
சதக்கல் | catakkal, n. <> சறுக்கல். Marsh, mire; சதுப்புநிலம். Vul. |