Word |
English & Tamil Meaning |
---|---|
சதம் 2 | catam, n.<> chada. (பிங்.) 1. Leaf; இலை. 2. Feather |
சதம் 3 | catam, n. cf. šada. Vegetable plant pruned to prevent overgrowth; cropped grain; அறுபட்ட பயிர். (W.) |
சதம் 4 | catam, n. perh. šašvata. That which is perpetual, eternal; நித்தியமானது. ஊருஞ்சதமல்ல வுற்றார்சதமல்ல (பட்டினத். திருவேகம்பமா.13). |
சதம் 5 | catam, n. prob. kṣata. End, termination; இறுதி. (அக. நி.) |
சதமகன் | cata-makaṉ,. n. <> šata-makha. See சதக்கிரது. சதமகனுடல மெல்லாங் காதுளானல்லே னென்றான். (திருவிளை. விறகு. 39). . |
சதமன்யு | cata-maṉyu, n. <> šata-manyu. See சதக்கிரது. . |
சதமுனை | cata-muṉai, n. <> சதம்1+. See சதகோடி, 2. (W.) . |
சதமூலை 1 | cata-mūlai, n. <> šata-mūlī. A common climber with many thick fleshy roots. See தண்ணீர்விட்டான். (தைலவ. தைல. 28.) |
சதமூலை 2 | cata-mūlai, n. Remote corner; மிகவொதுக்கான மூலை. Loc. |
சதயம் | catayam, n. <> šatabhiṣaj. The 24th nakṣatra, part of Aquarius; கும்பராசியின் கூறான இருபத்துநான்காம் நட்சத்திரம். (பிங்.) |
சதர்கர்ச்சு | catar-karccu, n. <> U. sādir+ U. kirc. Remission or allowance made by the government, of a certain percentage of the revenue raised from a village, for repairing tanks, giving alms to mendicants, and other incidental expenses; கிராமவருமானத்திலிருந்து ஏரிமராமத்து முதலியவற்றின் பொருட்டு இராசாங்கத்தார் விட்டுக்கொடுக்கும் தொகை. (R. T.) |
சதர்வாரித்து | catar-vārittu, n. <> id. + U. wārid. (R. T.) 1. See சாதல்வார். . 2. Charge formerly levied on ryots for supplying the public office with ink, paper, oil and the like; |
சதரதாலத்து | catar-atālattu, n. <> U. sadr + U. adālat. Chief court of justice; பிரதான நியாயஸ்தலம். (C. G.) |
சதரமீன் | catar-amīṉ, n. <> id. + U. amīn. The name given to the subordinate judge during Muhammadan rule; நியாயாதிபதிக்கு மகமதியராட்சியில் வழங்கிய பெயர். |
சதருத்திரீயம் | cata-ruttirīyam, n. <> šata-rudrīya. A Vēdic hymn addressed to Rudra or šiva in His hundred aspects; உருத்திரமூர்த்திக்கு உரிய வேதமந்திரம். |
சதவல் | cataval, n. cf. சதசதப்பு. 1. Damp, marshy land; சதுப்பு நிலம். (சங். அக.) 2. Rubbish; |
சதவீரியம் | catavīriyam, n. <> šata-vīrya. White Bermuda grass. See வெள்ளறுகு. (மலை.) |
சதவீரு | catavīru, n. <> šata-bhīru. Arabian jasmine. See மல்லிகை. (மலை.) |
சதவுருத்திரம் | cata-v-uruttiram, n. <> šata-rudra. See சதருத்திரீயம். சதவுருத்திரத்தினாலே முக்கணா ரமுதையாட்டி (குற்றா. தல. திருமால்.149). |
சதளக்காரன் | cataḷa-k-kāraṉ, n. perh. சதளம்+. Man of large family; பெருங் குடும்பக்காரன். Loc. |
சதளம் | cataḷam, n. cf. sadas. Multitude; கூட்டம். சனசதளம். (R.) |
சதனம் 1 | cataṉam, n. <> chadana. See சதம். (பிங்.) . |
சதனம் 2 | cataṉam, n. <> sadana. House; வீடு. அச் சதன மேவருந் தபோதனன் (பாரத. அருச்சுனன்றீர். 61). |
சதா 1 | catā n. 1. cf. Pkt. jahāja. 1. Canoe, boat; மரக்கலம். (திவா.) 2. Defect in timber; decay in fruit; rottenness; 3. Delay; procrastination, as of a business; |
சதா 2 | catā, adv. <> sadā. Always, continually, perpetually; எப்பொழுதும். சதாவின் மொழியால் (திருப்பு.186). |
சதாக்கினி | catākkiṉi, n. perh. sadāgni. Scorpion, as always having a fiery sting; [எப்பொழுதும் தீயைப்போன்ற கொடுக்குடையது] தேள். (சங். அக.) |
சதாகதி | catā-kati, n. <> sadā-gati. Wind as being in perpetual motion; [இடைவிடாமற் சஞ்சரிப்பது] காற்று. சதாகதி மைந்தனும் (பாரத. புட்ப.15). |
சதாகாலம் | catā-kālam, adv. See சதா. . |
சதாங்கம் | catāṅkam, n. <> šatāṅga. Chariot, car; இரதம். (சங். அக.) |
சதாசார்வகாலம் | catā-cārva-kālam, adv. <> sadā+sarva+. See சதா. Loc. . |
சதாசாரம் | catācāram, n. <> sad-ācāra. Practice of the good or virtuous men; good old custom; approved usage; நல்லோரொழுக்கம். சதாசாரம் விசாரணையே (வேதா. சூ.146). |
சதாசிவத்தி | catācivatti, n. prob. sadā-šiva-šakti. Alum; சீனக்காரம். (மூ. அ.) |