Word |
English & Tamil Meaning |
---|---|
சதுர்த்தர் 2 | caturttar, n. <> catura. Clever, able persons; சமர்த்தர். (யாழ். அக.) |
சதுர்த்தி | caturtti, n. <> caturthī. 1. The fourth titī in a lunar fortnight; நான்காந் திதி. விநாயக சதுர்த்தியில் (விநாயகபு. 38, 9). 2. Dative case; 3. An observance on the fourth day of wedding; |
சதுர்த்திகை | caturttikai, n. <> caturthikā. 1. A weight = 1/4 palam; காற்பலம். (தைலவ. தைல. 28.) 2. See சதுர்த்தி, 1. Colloq. |
சதுர்த்தியறை | caturtti-y-aṟai, n. <> சதுர்த்தி+. Bed-room in which consummation takes place on the fourth night of marriage; விவாகத்தில் நான்காநாளிரவு மணமகனும் மணமகளுங் கூடியுறையும் அறை. (அகநா. 86, உரை.) |
சதுர்ப்பதம் | catur-p-patam, n. See சதுர்ப்பாதம். சதுர்ப்பத நாகங் கிந்துக்கின மென்று (விதான. பஞ்சாங்க. 29). . |
சதுர்ப்பாகம் | catur-p-pākam, n. <> catur+bhāga. 1. Land held on favourable tenure paying only one-fourth of the revenue due to Government; செலுத்தற்குரிய அரசிறையிற் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானியநிலம்.(C. G. 93.) 2. A grant of alienation of one-fourth share of Government revenue; |
சதுர்ப்பாடு | catur-p-pāṭu, n. <>id. +. See சதுரப்பாடு (J.) . |
சதுர்ப்பாதம் | catur-p-pātam, n. <> catuṣ-pāda. 1. (Astrol.) See சதுஷ்பாதம், 3. . 2. Four major sections of šivāgamas relating to cariyai, kiriyai, yōkam, āṉam; |
சதுர்ப்புயன் | catur-p-puyaṉ, n. <> catur-bhuja. Lit., the four-armed. 1. Viṣṇu; [நான்கு புயங்களையுடையவன்] திருமால். 2. šiva; |
சதுர்ப்பேதி | caturppēti, n. See சதுர்வேதி. இருபதின்மர் சதுர்ப்பேதிகளுக்குப் பிரமதேயங் கொடுப்பதற்கும். (S. I. I. i, 151). . |
சதுர்முகன் | catur-mukaṉ, n. <> catur +. Lit., the four-faced. 1. Brahmā; [நான்கு முகங்களையுடையவன்] பிரமன். சதுர்முகன் றாதையென்றுந்தீபற (திருவாச.14,6). 2. Arhat; |
சதுர்யுகம் | catur-yukam, n. <>id. +. 1. The four cosmic ages viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam; கிருதயுகம் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்ற நான்கு யுகங்கள். 2. Mahāyuga, as the aggregate of the four Yugas; |
சதுர்வருணம் | catur-varuṇam, n. <>id. +. The four castes viz., Brahmin, Kṣatriya, Vaišya, šūdra; பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற நால்வகைக் குலம். |
சதுர்விதோபாயம் | catur-vitōpāyam, n. <> catur-vidha+upāya. Four-fold policies or expedients for administering a kingdom, mentioned in treatises on the ancient Hindu polity viz., cāmam, tāṉam, pētam, taṇṭam; அரசுபுரிவோர்க்கென்று நீதிநூல்களிற் கூறப்பட்டுள்ள சாமம் தானம் பேதம் தண்டம் என்ற நால்வகை உபாயம். (சூடா.) |
சதுர்விம்சகம் | catur-vimcakam, n. <> catur-vimšaka. An aggregate of twenty-four; இருபத்துநான்கு கொண்டது. (W.) |
சதுர்வேதம் | catur-vētam, n. <> catur +. The four Vēdas, viz., ṟig-vēda, Yajur-vēda, Sāma-vēda and Atharva-vēda; இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்கள். |
சதுர்வேதி | catur-vēti, n. <> catur-vēdī nom. sing. of catur- vēdin. Brahmin well-versed in all the four vēdas; நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணன். விச்ணுதாஸச் சதுர்வேதி. (S. I. I. ii, 521). |
சதுரக்கம்பம் | catura-k-kampam, n. <> சதுரம்1+. Square pillar; நாற்கோணமாயமைந்த தூண்வகை. |
சதுரக்கல் | catura-k-kal, n. <>id. +. Square brick; சதுரவடிவான செங்கல். |
சதுரக்கள்ளி | catura-k-kaḷḷi, n. <> id. +. [K. M. caturakaḷḷi.] Square spurge, s.tr., Euphorbia antiquorum; கள்ளிவகை. (பதார்த்த. 367.) |
சதுரகராதி | catur-akarāti, n. <> catur +. Tamil Dictionary by Beschi in the 18th c. consisting of 4 parts viz., peyar-akarāti, poruḷ-akarāti, tokai-y-akarāti, toṭai-y-akarāti; பெயரகராதி பொருளகராதி தொகையகராதி தொடையகராதி என்ற நாற்பிரிவுகளுடையதாக 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவரியற்றிய அகராதி. |
சதுரங்கசேனை | caturaṅka-cēṉai, n. <> சதுரங்கம்+. A complete army consisting of four divisions, viz., elephants, chariots, cavalry and infantry; கஜ ரத துரக பதாதி என்னும் நான்கு பகுதிகளையுடைய சேனை. சதுரங்கசேனையுடனே வந்ததோர் வாழ்வும் (தாயு. தேசோமயா. 3). |