Word |
English & Tamil Meaning |
---|---|
சதையண்டம் | catai-y-aṇṭam, n.<> id. +. Scrotal elephantiasis; பீசநோய் வகை. (M. L.) |
சதையம் | cataiyam, n.<> šatabhiṣaj. The 24th nakṣatra. See சதயம். சதையமீன் கடவுளும் (பாரத. குருகுல. 72). |
சதையல் | cataiyal, n.<> சதை4-. Bamboo splits; மூங்கிற் பிளாச்சு. Nā. |
சதையொட்டி | catai-y-oṭṭi, n. <> சதை1+. A plant; பூடுவகை. (சங். அக.) |
சதைவலி | catai-vali, n.<> id. +. Muscular rheumatism, myalgia; சதையில் வலியுண்டாக்கும் நோய்வகை. (M.L.) |
சதைவளர்ச்சி | catai-vaḷarcci, n.<> id. +. Polypus; சதைவளரும் நோய்வகை. (M. L.) |
சதைவளர்ப்பு | catai-vaḷarppu, n.<> id. +. See சதைப்படர்த்தி. (M. L.) . |
சதைவுகாயம் | cataivu-kāyam, n. <> சதை3-+. Contusion; நசுங்கலால் உண்டாகுங் காயம். (இங். வை. 311.) |
சதைவைத்தவள் | catai-vaittavaḷ, n.<> சதை1+. A barren woman; மலடானவள். Loc. |
சதோகநாதர் | catōka-nātar, n. perh. sadēha+. A siddha, one of nava-nāta-cittar, q.v.; நவநாதசித்தருள் ஒருவர். (சது.) |
சதோகரு | catōkaru, n. See சதேகரு. (w.) . |
சதோகுரு | catōkuru, n. See சதேகரு. (w.) . |
சதோடம் | catōṭam, n.<> sa-dōṣa. That which has flaws or defects; குற்றத்துடன் கூடியது. சகுணமெனச் சதோடமென வவையிரண்டில் (திருவிளை. மாணிக்க. 66). |
சந்த | canta, adj. <> It. santo. Saintly; பரிசுத்தமான. R. C. |
சந்தக்கவி | canta-k-kavi, n. <> சந்தம்2+. See சந்தப்பாட்டு. சொன்ன சந்தக்கவி யாவருஞ் சொல்லுவர் (தனிப்பா.i, 171, 24). . |
சந்தக்குழம்பு | canta-k-kuḻampu, n.<> சந்தம்3+. Scented sandal paste; வாசனையூட்டிக் குழைத்த சந்தனம். சந்தகுழம்பினிலூறு கஞ்சத்தியல் பின் (கொக்கோ. பாயி. 5). |
சந்தக்குழிப்பு | canta-k-kuḻippu, n.<> id. +. Rhythmic movement of a stanza expressed in conventional symbols; சந்தச்செய்யுளின் ஓசை வாய்பாடு. |
சந்தக்கேடு | canta-k-keṭu, n. <> சந்தம்1+. A flaw in rubies; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. சந்தக்கேடு நீள்வெய்ய கீற்றென்ன வகைபடு குற்றம் (திருவாலவா. 25, 14). |
சந்தகபுட்பம் | cantaka-puṭpam, n. cf. candana-puṣpa. Cloves; கிராம்பு. (மலை.) |
சந்தகம் 1 | cantakam, n.<> T. tjantika. A kind of pastry cooked in steam and forced like vermicelli through a mould; இடியப்பம். (w.) |
சந்தகம் 2 | cantakam, n. prob. candaka. Delight, joy; சந்தோஷம். (யாழ். அக.) |
சந்தகன் | cantakaṉ, n.<> candaka. Moon; சந்திரன். (யாழ். அக.) |
சந்தகை | cantakai, n.<> சந்தகம்1. Mould or colander for iṭi-y-appam; இடியப்பக்குழல். (w.) |
சந்தகைப்பலகை | cantakai-p-palakai, n.<> சந்தகை+. See சந்தகை. (w.) . |
சந்தசு | cantacum, n.<> chandas. 1. Metre; யாப்பு. 2. Science of Vēdic prosody, one of six vētāṅkam, q.v.; 3. Vēda; |
சந்தஞ்சம் | cantacam, n.<> san-damša. 1. (Nāṭya.) One of the hand-poses appropriate to men; ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.); 2. A hell where thieves or dacoits are punished by being thrown into boiling iron-cauldron, flies hovering about and molesting them; |
சந்தடி | cantaṭi, n.<> T. sandadi. 1. Bustle, stir, clamour, tumult, uproar; இரைச்சல். ஊரிலே சந்தடியடங்கவில்லை. 2. Dense crowd of people, throng ; |
சந்தடைப்பன் | cantaṭaippaṉ, n.<> சந்து1+ அடைப்பன். A disease of cattle; மாட்டுநோய் வகை. (மாட்டுவா. 69.) |
சந்தணி | cantaṇi, n. See சந்தனம். (மலை.) . |
சந்தணுகி | cantaṇuki, n. <> சந்து1+. Snake, as frequenting out-of-the-way corner or interstices in walls; இடுகிய சந்துகளில் வாழும் பாம்பு. Nā. |
சந்தத்தாண்டகம் | canta-t-tāṇṭakam, n.<> சந்தம்2+. A kind of rhythmic tāṇṭakam verse; சந்தவடியும் தாண்டகவடியும் விரவி ஓசை கொண்டு வருஞ் செய்யுள். (யாப். வி. 94, பக். 455.) |
சந்ததம் | cantatam, adv. <> santatam. Always, perpetually, for ever; எப்பொழுதும். சந்ததமுஞ் சிந்தித்தே (மாறனலங். 663). |
சந்ததி | cantati, n.<> santati. 1. Descendant, heir; வழித்தோன்றல். சந்ததி யெனக்கு நீயே (பிரபோத. 2, 33). 2. Son; 3. Lineage, pedigree; |