Word |
English & Tamil Meaning |
---|---|
சந்தனக்குடம் | cantaṉa-k-kuṭam, n.<> id. +. Ceremony of anointing a Hindu idol as šāstā, or the grave of Muhammadan saint with sandal paste, the pot containing it being carried to the place in procession; விசேடகாலங்களில் சந்தனம் நிறைந்த குடத்தை ஊர்வலஞ் செய்வித்து ஐயனார் முதலிய தெய்வங்கட்கும் மகமதியப்பெரியோர் சமாதிகட்கும் செய்யும் அபிஷேகம். Colloq. |
சந்தனக்கும்பா | cantaṉa-k-kumpā, n.<> id. +. Goblet of gold, silver or bell-metal to keep sandal paste for distribution; கரைத்த சந்தனம் வைப்பதற்கு உரிய பாத்திரவகை. |
சந்தனக்குழம்பு | cantaṉa-k-kuḻampu, n.<> id. +. Sandal paste; அரைத்த சந்தனக்கூட்டு. வரைச் சந்தனக்குழம்பும். (திவ். இயற். 2, 76). |
சந்தனக்குறடு | cantaṉa-k-kuṟaṭu, n.<> id.+. [M. candanakkuṟaṭu.] 1. See சந்தனக்கட்டை. . 2. Platform where idol is anointed with sandal paste; 3. Cunbical or oblong block of sandalwood marked with the numbers 3,12,10,100, one on each side, the number which turns up when it is thrown being looked for in a book for divining the future; |
சந்தனக்குறை | cantaṉa-k-kuṟai, n.<> id. +. Small blocks of sandalwood used in preparing scented paste; கலவைச்சாந்தில் உபயோகப்படுத்தும் சந்தனக்கட்டைத்துண்டு. சந்தனக் குறையொடு சாந்திற்குரியவை. (பெருங். மகத.17, 139). |
சந்தனக்கூட்டு | cantaṉa-k-kūṭṭu, n.<> id. +. [M. candanakkūṭṭu.] Perfumery ground with sandal ; கலவைச்சந்தனம். |
சந்தனக்கோரை | cantaṉa-k-kōrai, n. prob. id.+. A kind of fragrant sedge; கோரைவகை. (J.) |
சந்தனச்சாணை | cantaṉa-c-cāṇai, n.<> id. +. See சந்தனக்கல். Nā. . |
சந்தனச்சாந்து | canmtaṉa-c-cāntu, n.<> id. +. See சந்தனக்கூட்டு. சந்தனச்சாந்திட் டன்ன (பெருங். மகத. 7, 109). . |
சந்தனச்சாரல் | cantaṉa-c-cāral, n.<> id. +. Mountain slope or hilly tract noted for sandalwood trees; சந்தனமரங்கள் நிறைந்த மலைச் சரிவு. சந்தனச்சாரற் பெருவரை யடுக்கத்து (பெருங். இலாவாண. 20, 44). |
சந்தனச்சேறு | cantaṉa-c-cēṟu, n.<> id. +. See சந்தனக்குழம்பு. சந்தனச்சே றாடிய மேனி. (பரிபா.7, 74, உரை). . |
சந்தனச்சோலை | cantaṉa-c-cōlai, n.<> id. +. Grove of sandalwood trees; சந்தனமரங்கள் நிறைந்த உத்தியானம். சந்தனச் சோலைப் பந்தா டுகின்றார் (திருக்கோ.107). |
சந்தனஞ்சாத்து - தல் | cantaṉa-cāttu-, v. intr. <> id.+. [ M. candanacāttu.] 1. To anoint with sandaal paste, as an idol; சந்தனக்காப்பிடுதல். Colloq. 2. To besmear the body with sandal paste; |
சந்தனத்திரணை | cantaṉa-t-tiraṇai, n.<> id. +. Lump of sandal paste; சந்தனக்கட்டி. (w.) |
சந்தனத்திரி | cantaṉa-t-tiri, n.<> id. +. Wick or thin stick coated with sandal or other perfumed paste for diffusing odour while burning, joss-stick; ஊதுவர்த்தி. (J.) |
சந்தனத்தூள் | cantaṉa-t-tūḷ, n.<> id. +. See சந்தனப்பொடி. . |
சந்தனத்தேய்வை | cantaṉa-t-tēyvai, n.<> id. +. See சந்தனக்குழம்பு. சாதிலிங்கமுஞ் சந்தனத் தேய்வையும் (பெருங். உஞ்சை. 41, 130). |
சந்தனநறுநீர் | cantaṉa-maṟu-nīr, n.<> id. +. Scented rose-water mixed with sandal paste ; சந்தனங்கலந்த பனிநீர். சந்தனநறுநீர் மண்ணுறுத் தாட்டி (பெருங். உஞ்சைக். 34, 188). |
சந்தனப்பலகை | cantaṉa-p-palakai, n.<> id. +. Well-polished seats made of sandalwood; சந்தனமரத்தாலான மணைப்பலகை. சந்தனப் பலகையுஞ் சந்தப் பேழையும் (பெருங். உஞ்சைக். 57, 34). |
சந்தனப்பில்லை | cantaṉa-p-pillai, n.<> id. +. [M. candanappulla.] Colloq. 1. Light yellow colour of cattle; மாடுகளிற் காணப்படும் ஒருவகை மஞ்சள் நிறம். 2. Cattle having light yellow colour; |
சந்தனப்பீடிகை | cantaṉa-p-pīṭikai, n.<> id. +. See சந்தனப்பலகை. சந்தனப்பீடிகைச் சார்வணை யேறி (பெருங். உஞ்சைக். 37, 15). . |
சந்தனப்பூச்சு | cantaṉa-p-pūccu, n.<> id. +. Smearing the body with sandal paste; உடலிற் சந்தனம் பூசுகை. |
சந்தனப்பொட்டு | cantaṉa-p-poṭṭu, n.<> id. +. A circular mark of sandal paste, worn on the forehead; சந்தனக் குழம்பால் நெற்றியில் வைக்கும் பொட்டு. |
சந்தனப்பொடி | cantaṉa-p-poṭi, n.<> id. +. Sweet-scented sandalwood powder; வாசனைச் சந்தனத் தூள். Colloq. |