Word |
English & Tamil Meaning |
---|---|
சந்தனம் 1 | cantaṉam, n. <> candana. 1. Sandalwood tree, s.tr., santalum album; சந்தனமரம். வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் (நாலடி, 180). 1. Sandal paste; |
சந்தனம் 2 | cantaṉam, n.<> syandana. Car, chariot; தேர் மணிச்சந்தனத் தேற்றியே (பாரத.குருகுல.124) |
சந்தனமண்டபம் | cantaṉa-maṇṭapam, n.<> சந்தனம்1+. Temple-room where stones are fixed for grinding sandal; அரைப்பதற்குச் சந்தனக்கற்கள் பதித்திருக்குங் கோயில்மண்டபம். |
சந்தனமாமணி | cantaṉa-māmaṇi, n. perh. id.+. Oblong feather-nerved sebesten. see நறுவிலி. (L.) . |
சந்தனமிழை - த்தல் | cantaṉam-iḻai-, v.intr. <> id. +. To grind sandal; சந்தனம் அரைத்தல். Colloq. |
சந்தனவத்தர் | cantaṉa-v-attar, n.<> id. +. Sandal attar; சந்தனக்கட்டையிலிருந்து இறக்கிய வாசனைத் திராவகம். |
சந்தனவிரை | cantaṉa-virai, n. perh. id.+. Langsat of the āṉaimalai hills. see தேவதாளி.(L.) . |
சந்தனவில்லை | cantaṉa-villai, n. <>id. +. Sandal tablet, small cake of sandal paste; சந்தன உருண்டை. |
சந்தனவெற்பு | cantaṉa-veṟpu, n.<> id. +. Potiya-malai, as the mountain noted for sandal trees; [சந்தனமரம் உண்டாகும் மலை] பொதியமலை.(திருவிளை.பழியஞ்.23.) |
சந்தனவேங்கை | cantaṉa-vēṅkai, n.<> id. +. Red sanders. see செஞ்சந்தனம்.(L.) . |
சந்தனவேம்பு | cantaṉa-vēmpu, n.<> id. +. Chittagong wood. See மதகரிவேம்பு. (L.) . |
சந்தனாதி | cantaṉāti, n.<> candana + ādi. 1. See சந்தனாதித்தைலம். . 2. Indian kino tree; |
சந்தனாதித்தைலம் | cantaṉāti-t-taliam, n.<> id.+id.+. Fragrant medicated oil having sandal as the chief ingredient; சந்தனழதலிய பொருள்களினின்று வடிக்கும் தைலம். |
சந்தனாதியுண்டை | cantaṉāti-y-uṇṭai, n. <> id.+id.+. A medicinal pill having sandal as the essential ingredient; சந்தனமிகுதியாகச் சேர்ந்த ஒருவ்கை மருந்துக்குளிகை. (W.) |
சந்தனாபிஷேகம் | cantaṉāpiṣēkam, n.<> id. + abhi-ṣēka. Anointing an idol with sandal paste; கடவுளது திருமேனிக்குச் சந்தனத்தால் செய்யும் அபிஷேகம். |
சந்தனு | cantaṉu, n.<> Santanu. A king of the lunar race, father of Bhīṣhma; வீடுமற்குத் தந்தையான சந்திரகுலத்தரசன். (பிங்.) |
சந்தனுமுன்பெற்றோன் | cantaṉu-muṉ-peṟṟōṉ, n.<> id. +. Bhīṣma, the eldest son of šantanu; [சந்தனுவின் முதற் புதல்வன்] வீடுமன். (சூடா.) |
சந்தனுமுன்மைந்தன் | cantaṉu-muṉ-maintaṉ, n.<> id. +. See சந்தனுமுன்பெற்றேன்.(பிங்.) . |
சந்தா | cantā, n.<> U. candā. Money. subscription; பத்திரிகை முதலியவற்றுக்குச் செலுத்த வேண்டும் கட்டணம். Mod. |
சந்தாதார் | cantātār, n.<> U. candā-dār. Subscriber; சந்தாக்கொடுப்பவன். Mod. |
சந்தாபம் | cantāpam, n.<>san-tāpa. 1. Scorching, burning; சுடுகை. (திவா.) 2. Distress, affliction; 3. One of eight kinds of narakam, q.v.; 4. Repentance, confession, penitence; |
சந்தாமப்பம் | cantāmappam, n. Madar. See எருக்கு. (மலை.) . |
சந்தாயம் | cantāyam, n.<> sam-ud-āya. 1.Management of lands, etc., by the proprietors themselves. See சஞ்சாயம், 3. Loc. . 2. Anything held in common by villagers. See சமுதாயம், 5. (R. T.) |
சந்தாளர் | cantāḷar, n.[K.santāḷa.] Santals, a tribe inhabiting the skirts of the Rajmahal hills and speaking a language slightly akin to the Dravidian tongue; திராவிடபாஷைக்குச் சிறிது தொடர்புள்ள ஒரு பாஷையைப் பேசுபவரும் ராஜமஹால் மலைச்சாரலிலுள்ளவருமான ஒரு சாதியார். Loc. |
சந்தானக்கூர்மை | cantāṉa--k-kūrmai, n. prob. sandhāna. +. Salt produced by evaporation; அட்டுப்பு. (யாழ்.அக.) |
சந்தானகரணி | cantāṉa-karaṇi, n.<> sandhāna-karaṇī, 1. Medicament which reunites and heals limbs cut off or broken அற்ற உறுப்பைப் பொருத்தும் மருந்து. (பிங்) 2. South Indian mahua. See இலுப்பை. (பிங்.) 3. Bermuda grass. See அறுகு. (மலை.) 4. Indian birthwort. See பெருமருந்து. (மலை.) |
சந்தானகுரவர் | cantāṉa-kuravar, n.<> santāna+. The four šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, viz..,Meykaṇṭa-tēvar,Aruṇanti-civācivācāriyar, Maṟaiāṉa-campamtar,Umāpati-civācāriyar, as tracing their succession from šiva; சைவசித்தாந்தத்தைப் பரவச்செய்த மெய்கண்டதேவர் அருணந்திசிவாசாரியர் மறைஞானசம்பந்தர் உமாபதி சிவாசாரியர் என்ற ஆசிரியர் நால்வர். |