Word |
English & Tamil Meaning |
---|---|
சந்திக்கோணம் | canṭi-k-kōṇam, n.<> சந்தி+. An ornamental piece in a chariot; தேரின் உறுப்புக்களுள் ஒன்று. சந்திக்கோணமு மந்திர வாணியும் (பெருங். உஞ்சைக். 58, 51). |
சந்திகம் | cantikam, n. prob. A variety of caṉṉipātam; சன்னிநோய்வகை. (சீவரட்.) |
சந்திகை | cantikai, n.<> T. tjantika. A conffection; பணிகாரவகை. (இந்துபாக. 59.) |
சந்திகையுரல் | cantikai-y-ural, n. <> சந்திகை+. A colander for preparing cantikai; சந்திகைபிழியுங் கருவி. (இந்துபாக. 59.) |
சந்தித்தம் | cantittam, n. <> san-digdha. That which is in doubt; சந்தேகிக்கப்பட்டது. சந்தித்தமாயிருக்கின்ற வஸ்துவில். (சி.சி.2, 59, ஞானப்.). |
சந்திப்பாடு | canti-p-pāṭu, n. <> சந்தி+. Mishap supposed to be caused by a demon at the junction of streets and other haunted places; தெருச்சந்தி முதலியவற்றிலுள்ள பேய்களால் ஏற்படும் கோளாறு. (W.) |
சந்திப்பு | cantippu, n. <>சந்தி-, 1. Meeting, visiting; எதிர்கை. 2. Juncture, connection, union; 3. Junction of rivers, roads, railroads, etc.; 4. Visiting presents; |
சந்திபண்ணு - தல் | canti-paṇṇu-, v. intr.<> சந்தி+. To perform cantiyā-vantaṉ am; சந்தியாவந்தனஞ் செய்தல். (சிலப். 13, 43, அரும்.) |
சந்திமறித்தல் | canti-maṟittal, n. <> சந்தி+. Averting the displeasure of malignant deities in times of epidemics by making offerings at the cross roads; கொள்ளைநோய்க்காலங்களில் தெருச்சந்திகளிற் கொடைகொடுத்துத் துர்த்தேவதைகளைச் சாந்தப்படுத்துகை. Loc. |
சந்திமான் | cantimāṉ n. A chief noted for his liberality, one of seven iṭai-vaḷḷalkaḷ, q.v.; இடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். (பிங்.) |
சந்திமிதி - த்தல் | canti-miti-, v. intr.<> சந்தி+. 1. To take a child to the cross roads in an auspicious time in its fourth month; நான்காமாதத்தில் நல்லவேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்குத் தூக்கிச் செல்லுதல். நாலாகுமதியிற் சந்திமிதிப்பது நடத்தி (திருவிளை. உக்கிர. 27). 2. To step on the cross roads in an auspicious time, when first going out after sickness, especially small-pox; |
சந்திமுடி - த்தல் | canti-muṭi-, v. intr. <> சந்தி+. To finish religious duties; நியமநிட்டைகளை நிறைவேற்றுதல். (யாழ்.அக.) |
சந்தியக்கரம் | canti-y-akkaram, n.<> சந்தி+. Diphthongs, viz..,' ē', 'ai', 'ō' and 'au'; இரண்டு உயிரெழுத்துக்கள் கூடி அமைவனவாகிய ஏ, ஐ, ஒ, ஔ என்னும் எழுத்துக்கள். (பி. வி. 5, உரை.) |
சந்தியாகாலம் | cantiyā-kālam, n.<> san-dhyā+. Evening, dusk; மாலைநேரம். |
சந்தியாம்சம் | cantiyāmcam, n.<> id. +. amša. The period at the end of each yuga; யுகசந்திக்காலம். |
சந்தியாமடம் | cantiyā-maṭam, n.<> id. +. Stone-building beside a tank or river where religious duties are performed; நித்தியவழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம். சந்தியா மடத்தேகித் தபோதனர் (திருவாலவா.63, 10). |
சந்தியாமண்டபம் | cantiyā-maṇṭapam, n.<> id. +. See சந்தியாமடம். . |
சந்தியாராகம் | cantiyā-rākam, n.<> id. +. Crimson colour of the evening sky; செவ்வானம். (W.) |
சந்தியாவந்தனம் | cantiyā-vantaṉam, n.<> id. +. Morning, noon and evening prayers; காலை உச்சி மாலைகளில் வேதமந்திரங்களாற் செய்யும் வழிபாடு. |
சந்தியாவந்தனை | cantiyā-vantaṉai, n.<> id. +. See சந்தியாவந்தனம்.(W.) . |
சந்தியில்நில் - தல் [சந்தியில் நிற்றல்] | cantiyil-nil-, v. intr. <> சந்தி1+. Lit.., to stand at the cross roads. To be in a forlorn condition; [தெருச்சந்தியில் நிற்றல்] நிர்க்கதியாயிருத்தல். |
சந்தியில்போடு - தல் | cantiyil-pōṭu-, n.<> id. +. See சந்தியிலிழு-. . |
சந்தியில்விடு - தல் | cantiyil-viṭu-, v. tr. <> id. +. Lit.., to leave one at the cross roads. To desert, as one's family; [தெருச்சந்தியில் ஒருவனை விடுதல்] நிர்க்கதியானநிலையிற் கொண்டுவந்து விடுதல். |
சந்தியில்வை - த்தல் | cantiyil-vai-, v. tr. <> id. +. See சந்தியில்விடு -. Colloq. . |
சந்தியிலிழு - த்தல் | cantiyil-iḻu-, v.tr. <> id.+. Lit.., to drag one to the cross roads. To expose publicly to ridicule and shame; [தெருச்சந்தியில் ஒருவனைப் பற்றிக்கொணர்தல்] ஒருவன் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி நிந்தைக்கிடமாக்குதல். |