Word |
English & Tamil Meaning |
---|---|
சந்திரசிலை | cantira-cilai, n.<> candra +. See சந்திரகாந்தம். . |
சந்திரசுத்தஸ்புடம் | cantira-cutta-sputam, n.<> id. +. (Astron.) Moon's geocentric longitude or true position; வானத்திற் சந்திரன் நிற்கும் உண்மைநிலை. (செந். viii, 218.) |
சந்திரசுவணம் | cantiracuvaṇam, n. A mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (சங்.அக.) |
சந்திரசூடன் | cantira-cūṭaṉ, n, <> candracūda. See சந்திரசேகரன். . |
சந்திரசேகரன் | cantira-cēkaraṉ n. <> candra-šēkhara. šiva, as having the moon on His crown; [சந்திரனை முடியிற் கொண்டவன்] சிவன். சந்திரசேகர னமருந் தானங்கள் (பெரியபு. கோச்செங். 14). |
சந்திரஞானம் | cantira-āṉam, n. <> candra-jāna. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.) |
சந்திரத்தீவு | cantira-t-tīvu, n. <> candra +. An island to the north or kuruvaruṭam; குரு வருடத்திற்கு அணித்தாக வடதிசையிலுள்ள தீவு. (சி. போ.பா. 2, 3, பக். 208.) |
சந்திரதரிசனம் | cantira-taricaṉam, n. <> id.+. 1. Ceremony of showing the moon to a child for the first time in an auspicious evening; குழந்தைக்குக் சுபவேளையிற் சந்திரனை முதன் முதற் காட்டுஞ் சடங்கு. (W.)) 2. Sighting of the moon in the sky for the first time after newmoon; |
சந்திரதிசை | cantira-ticai, n. <> id. +. North, as kubēra's quarter; [குபேரனது திசை] வடக்கு. (திவா.) |
சந்திரதிலகம் | cantira-tilakam, n. <> id. +. 1. See சந்தனப்பொட்டு. (J.) . 2. See சந்தனம், 1. (திவா.) |
சந்திரநாகம் | cantira-nākam, n. <> id. +. (Astron.) The dragon's head or ascending node; இராகு. (சங். அக.) |
சந்திரநாடி | cantira-nāṭi, n. <> id. +. Nymphae, Labia; பெண்குறிவாயினிற் படிந்திருக்கும் ஜவ்வு. (இங். வை.) |
சந்திரப்பிரபர் | cantira-p-pirapar, n. <> id. +. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
சந்திரப்பிரபை | cantira-p-pirapai, n.<> id. +. 1. Moon's rays; moonlight; நிலவு. 2. Ornament of gold set with precious stones, worn on the left side of the head by women; 3. Moon-shaped vehicle for an idol in a festival: |
சந்திரப்பிறை | cantira-p-piṟai, n. <> id. +. Loc. 1. Crescent-shaped necklace of women; மகளிரணியும் பிறைபோன்ற கழுத்தணி. 2. See சந்திரப்பிரபை, 2. |
சந்திரபாணி | cantira-pāṇi, n. Prob. id.+. Diamond; வயிரக்கல். சந்திரபாணி தகைபெறு கடிப்பிணை. (சிலப். 6, 104). |
சந்திரபாவலி | cantira-pāvali, n. <> id.+. [Tu. candrabāvali.] Moon-shaped ear-ornament worn by women; மாதர்கள் காதில் அணியும் சந்திரவடிவான ஓராபரணம். Colloq. |
சந்திரபிம்பம் | cantira-pimpam, n. <> id. +. Disc or orb of the moon; சந்திரமண்டலம். |
சந்திரபீசம் | cantira-pīcam, n. Cochoneal insect.. See இந்திரகோபம். (மூ. அ.) . |
சந்திரபுடம் 1 | cantira-puṭam, n. <> candra+puṭa. (Med.) Calcination for medical purpose, done in moonlight; நிலவில்வைத் தெடுக்கும் மருந்துப்புடம். |
சந்திரபுடம் 2 | cantira-puṭam, n. <> id.+sphuṭa. 1. (Astron) Moon's longitude; வானத்திற் சந்திரன் தோன்றும் நிலை. (W.) 2.(Astron) See சந்திரசுத்தஸ்புடம். |
சந்திரபூரம் | cantira-pūram, n. <> id. +. A superior kind of camphor; பச்சைக்கர்ப்பூரம். (மூ. அ.) |
சந்திரம் | cantiram, n. <> candra 1. Camphor, gum camphor; கர்ப்பூரம். (மூ. அ.) 2. Gold; 3. The ninth of the 15 divisions of night; 4. The fifth nakṣatra; 5. Water; |
சந்திரமண்டலம் | cantira-maṇṭalam, n. <> id. +. 1. Orb or disc of the moon; சந்திரனது வட்டம். சந்திரமண்டலம்போற் றாமோதரன் கையில் . . . ஏறி (திவ். நாய்ச். 7, 4). 2. The region or sphere of the moon believed to be above the sun's region; 3. (Yōga.) Mood-centre in the central portion of the skull, believed to be the seat of parā-šakti; |