Word |
English & Tamil Meaning |
---|---|
சந்ததிமுட்டு - தல் | cantati-muṭṭu-, v. intr. <> சந்ததி+. To become heirless or issueless; வமிசமற்றுப்போதல். |
சந்தப்பா | canta-p-pā, n.<> சந்தம்2+. See சந்தப்பாட்டு. சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா (தனிப்பா.ii, 239, 564). . |
சந்தப்பாட்டு | canta-p-pāṭṭu, n.<> id. +. 1. Stanza of four lines with four to twenty-six syllables to a line; நான்கெழுத்துமுதல் இருபத்தாறெழுத்துவரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை. (திவா.) 2. See சந்தவிருத்தம் |
சந்தப்பாணம் | cantappāṇam, n. prob. sandarbhaṇa. A kind of salve applied to boils or tumours; புண்கட்டிக்கு இடும் ஒருவகைக் கூட்டு மருந்து. (J.) |
சந்தம் 1 | cantam, n. prob. chanda. 1. Beauty; அழகு. (சூடா.) 2. Colour, hue; 3. [T. candamu.] Shape, form; 4. Pleasure, happiness; 5. [T. candamu.] Manners, habits; |
சந்தம் 2 | cantam, n. <>chandas. 1. Musical flow, rhythmic movement f verse; செய்யுளின் வண்ணம். 2. Vēdic prosody; 3. The vēda; 4. Stanza; verse; 5. See சந்தப்பாட்டு. பண்பாய பகர்சந்தம் (யாப்.வி.94, பக்.447). 6. Opinion, view; |
சந்தம் 3 | cantam, n. of. candana Sandal; சந்தனம். (பிங்.) |
சந்தம் 4 | cantam, n. of. sandhi. Hole; துவாரம். கன்னசந் தங்களி னிற்கவி யாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i, 171, 24). |
சந்தம் 5 | cantam, n. A mineral poison; கற்பரிபாஷாணம். (யாழ். அக.) |
சந்தமாமா | canta-māmā, n.<> canda+. [ T. tcandamāma, K. candamāma.] 1. Uncle moon; சந்திரன். Nurs. 2. A term used by dancing girls in addressing the pimp who helps them in their profession; 3. (Drama.) A term used by clown on stage in addressing a person with shom he converses; |
சந்தயம் | cantayam, n.<> san-dēha. 1. Doubt; சந்தேகம். சந்தயந் தீரீர் (மாறனலங். 303, உரை). 2. (Rhet.) Figure of speech which consists in expressing a doubt; |
சந்தர்த்தாரை | cantar-t-tārai, n.<> santata+dhārā. Incessant rain, continuous downpour; இடைவிடாத மழை. Loc. |
சந்தர்ப்பணை | cantarppaṇai, n.<> san-tarppaṇa. Feast given to Brahmins on religious or festive occasions; சமாராதனை. (தைலவ. தைல. 43.) |
சந்தர்ப்பம் | cantarppam, n.<> san-darbha. 1. Circumstance, opportunity; சமயம். 2. Context; |
சந்தரி | cantari, n. cf. sundarī. Basil. See துளசி. (மலை.) |
சந்தவடி | canta-v-aṭi, n.<> சந்தம்2+. (Pros.) A metrical line in which the letters may range in number from 4 to 26; நான்கு முதல் இருபத்தாறுவரையும் உள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி. (யாப். வி. 95, பக். 455.) |
சந்தவாக்கு | canta-vākku, n. perh. சொந்தம்+. 1. Peculiar characteristics, habits and tendencies; சுயகுணம். Colloq. 2. Low habits, meanness of disposition or manners, as in person of low descent; |
சந்தவிருத்தம் | canta-viruttam, n.<> சந்தம்2+. Stanza in viruttam metre with a uniform rhythmic movement; சந்தக்குழிப்பின்படி அமைந்த செய்யுள். |
சந்தன் | cantaṉ, n. A liberal chief, one or seven iṭai-vaḷḷalkaḷ, q.v.; இடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். (பிங்.) |
சந்தனக்கட்டை | cantaṉa-k-kaṭṭai, n.<> சந்தனம்1+. Block of sandalwood; அரைத்தற்குரிய சந்தனமரக்கட்டை. Colloq. |
சந்தனக்கல் | cantaṉa-k-kal, n.<> id. +. Stone for grinding sandal; சந்தனம் அரைக்குங்கல். |
சந்தனக்களி | cantaṉa-k-kaḷi, n.<> id +. Sandal paste; சந்தனக்குழம்பு. சந்தனக்களியும் பூவும் (சீவக.1719). |
சந்தனக்காப்பு | cantaṉa-k-kāppu, n.<> id. +. Anointing an idol with sandal paste; சந்தனத்தைக் கடவுளின் திருமேனியில் அப்புகை. |
சந்தனக்கிண்ணம் | cantaṉa-k-kiṇṇam, n.<> id. +. [ M. candanakkiṇṇam.] Cup, as of silver, used for distributing sandal paste; கரைத்த சந்தனம் வைத்தற்குரிய பாத்திரவகை. |
சந்தனக்கிண்ணி | cantaṉa-k-kiṇṇi, n.<> id. +. See சந்தனக்கிண்ணம். . |