Word |
English & Tamil Meaning |
---|---|
சந்தோகன் | cantōkaṉ, n. <> chandō-ga. 1. Brahmin belonging to the sāma-vēda sect; சாமவேதத்துக்கு உரியவன். 2. God, as One who can be realised only through Vēdas; |
சந்தோடம் | cantōṭam, n. <> san-tōṣa. See சந்தோஷம். சந்தோடமோ டடக்கன்றனைத் தான் பார்த்திடலோடும் (பிரபோத. 5, 27). |
சந்தோபிசிதம் | cantōpicitam, n. See சந்தோவிசிதி. (திவா.) . |
சந்தோபிசிதி | cantōpiciti, n. See சந்தோவிசிதி. (W.) . |
சந்தோவிசிதி | cantōviciti, n.<> chandōviciti. Treatise on prosody, especially Vēdic; வேதத்தின் சத்தங்களை உணர்த்தும் நூல் (சி. போ. பா.1,1, பக். 62.) |
சந்தோஷம் | cantōṣam, n.<> san-tōṣa. 1. Pleasure, delight; மகிழ்ச்சி. 2. Satisfaction, gratification ; 3. Present; |
சந்தோஷி - த்தல் | cantōṣi-, 11 v. intr.<> id. 1. To rejoice; மகிழ்தல். 2. To be gratified; |
சந்நத்தம் | cannattam, n. See சன்னத்தம். . |
சந்நத்தன் | cannattaṉ, n. See சன்னத்தன். . |
சந்நதம் | cannatam, n. See சன்னதம். . |
சந்நிகிதம் | cannikitam, n.<> san-ni-hita. That which is near or proximate; சமீபமானது. (மணி.14, 29, உரை.) |
சந்நிதானம் | cannitāṉam, n. See சன்னிதானம். . |
சந்நிதி | canniti, n. See சன்னிதி. . |
சந்நிதித்துவாரம் | canniti-t-tuvāram, n. <> சந்நிதி+. Aperture in the wall of a temple through which the deity can be seen even when the door is shut ; கோயிற்கதவு தாளிட்டிருக்குங்கால் மூலவிக்கிரகத்தைத் தரிசிப்பதற்கு உதவியாகத் திருமதிலில் அமைக்கப்பட்ட புழை. Loc. |
சந்நிபாதம் | cannipātam, n. See சன்னிபாதம். . |
சந்நியசி - த்தல் | canniyaci-, 11 v. tr. & intr . See சன்னியசி-. . |
சந்நியாசம் | canniyācam, n.<> san-nyāsa. See சன்னியாசம். . |
சந்நியாசயோகம் | canniyāca-yōkam, n. <> id.+. 1. Complete renunciation as a means to the jīvātman becoming one with paramātman, சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுதற்கு அடிப்படையாகும் சர்வசங்கபரித்தியாகம். 2. Configuration of planets at birth of a person, indicating that he is destined to become a caṉṉiyāci; |
சந்நியாசி | canniyāci, n. See சன்னியாசி. . |
சந்நிரோதனம் | cannirōtaṉam, n. See சன்னிரோதனம். . |
சந்நிவேசம் | cannivēcam, n. See சன்னிவேசம். . |
சப்சப்பெனல் | cap-cap-p-eṉal, n. 1. Onom. expr. signifying (a) insipidity; (b) rebuke, reproof; (c) silence, hush உருசியின்மைக் குறிப்பு: அதட்டற்குறிப்பு. (W.): சத்தத்தை அமர்த்தற் குறிப்பு.(W.) |
சப்தக்கிரந்தி | capta-k-kiranti, n. <> saptan+. (šaiva.) The seven principles in metaphysics, viz., mān, akaṅkāram, paca-taṉmāttirai; மான், அகங்காரம், பஞ்சதன்மாத்திரை என்னும் ஏழுதத்துவங்கள் (சித். சா. ஞான.10.) |
சப்தசந்தானம் | capta-cantāṉam, n. <> id.+. Frame resulting from seven kinds of great deeds viz., taṭāka-p-piratiṣṭai, taṉa-niṭcēpam, akkirakāra-p-piratiṣṭai, tēvālaya-p-piratiṣṭai, nantāvaṉa-p-piratiṣṭai, pirapanta-nirmāṇam, cattira-p-piratiṣṭai; தடாகப்பிரதிஷ்டை, தனநிட்சேபம், அக்கிரகாரப்பிரதிஷ்டை, தேவாலயப்பிரதிஷ்டை, நந்தவனப்பிரதிஷ்டை. பிரபந்தநிர்மாணம், சத்திரப்பிரதிஷ்டை என்னும் எழுவகையான பெருங்காரியங்களைச் செய்தலால் ஏற்படுங் கீர்த்தி. |
சப்தசமுத்திரம் | capta-camuttiram, n. <> id.+. The seven circular concentric oceans. See எழுகடல். . |
சப்தசரி | captacari, n.<>sapta-sarī. A kind of necklace having seven strands; ஏழுசரமுள்ள கழுத்தணிவகை. சப்தசரியொன்றிற் கோத்தமுத்து வட்டமும் (S. I. I. ii, 143). |
சப்தசாகரம் | capta-cākaram, n. <> saptan+. See சப்தசமுத்திரம். . |
சப்தசுரம் | capta-curam, n. <> id. +. (Mus.) The seven notes of the gamut. See ஏழிசை. . |
சப்ததாளம் | capta-tāḷam, n. <> id. +. (Mus.) Seven common varieties of time-measure. See சத்ததாளம். . |
சப்ததுவீபம் | capta-tuvīpam, n. <> id. +. The seven ring-shaped continents. See ஏழுதீவு. . |
சப்தநதி | capta-nati, n. <> id. +. The seven sacred rivers. See சத்தநதி. . |
சப்தபங்கி | captapaṅki, n. <> sapta-bhaṅgī. The seven-fold formula of the doctrine of qualified predication viz., 'perhaps it is', 'perhaps it is not', 'perhaps it is and is not', 'perhaps it is not predicable', 'perhaps it is, and yet not predicable', 'perhaps it is not, and not predicable, 'perh உண்டாம்; இல்லையாம்; உண்டும் இல்லையுமாம்; சொல்லொணாதது£ம்; உண்டுமாம் சொல்லொணாதது£ம்; இல்லையுமாம் சொல்லொணாதது£ம்; உண்டும் இல்லையுமாம் சொல்லொததுமாம் எனச் சைனர் கூறும் எழுவகையாத முறை. (சி. போ. பா. பக். 40.) |