Word |
English & Tamil Meaning |
---|---|
சப்தபதார்த்தம் | capta-patārttam, n.<> saptan+. 1. The seven categories of Indian logic viz., tiraviyam, kuṇam, kiriyai, cāmāṉiyam, vicēṭam, camavāyam, apāvam; திரவியம், குணம், கிரியை, சாமானியம், விசேடம், சமவாயம், அபாவம் என்ற எழுவகைப் பொருள்கள். 2. (Jaina.) The seven categories of metaphysics, viz., oīvam, nirccīvam, caṟcīvam, nirccaraṉ, āciravam, pantam, mōṭcam; |
சப்தபதி | capta-pati, n. <> sapta-padī. A marriage rite in which the bridegroom pronounces certain mantras and leads the bride seven steps round the sacred fire; விவாகத்தில் தீவலம்வருகையில் மணமகன் மணமகளை மந்திரபூர்வமாக ஏழடி எடுத்துவைக்கச் செய்யும் சடங்கு. |
சப்தபாதாளம் | capta-pātāḷam, n. <> saptan+. The seven divisions of the nether world viz., atalam, vitalam, cutalam, mahātalam, iracātalam, talātalam, pātāḷam; அதலம், விதலம், சுதலம், மஹாதலம், இரசாதலம், தலாதலம், பாதாளம், என்னும் கீழேழுலகங்கள். |
சப்தபுரி | capta-puri, n. <> sapta-puri. The seven sacred cities. See சத்தபுரி. . |
சப்தம் 1 | captam, n.<> šabda See சத்தம். . |
சப்தம் 2 | captam, n.<> saptan. See சத்தம். . |
சப்தமண்டலம் | capta-maṇṭalam, n.<> id. +. The seven regions of the universe viz., mēka-maṇṭalam, cūriya-maṇṭalam, cantiramaṇṭalam, naṭcattira-maṇṭalam, மேகமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம், நட்சத்திரமண்டலம், கிரகமண்டலம், துருவமண்டலம். (விஷ்ணு புராணம்.) |
சப்தமருத்து | capta-maruttu, n. <> id.+. The seven winds of the universe residing in the capta-maṇṭalam viz., āvakam, piravakam, camvakam, utvakam, vivakam, parivakam, parāvakam; முறையே எழுவகை மண்டலங்களிலும் உள்ள ஆவகம்.பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்ற ஏழு வாயுக்கள். (விஷ்ணு புராணம்.) |
சப்தராசிகம் | capta-rācikam, n. <> sapta-rāšika. (Math.) The Rule of Seven, a kind of compound proportion; கணிதவகை. |
சப்தவர்க்கம் | capta-varkkam, n. <> saptan+. The seven elements constituting a Government according to the Hindu polity, viz., aracu, paṭai, kuṭi, kūḻ, amaiccu, naṭpu, araṇ அரசு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு.அரண் என்ற அரசியற்குரிய ஏழுறுப்புக்கள். 2. See சத்தவருக்கம், 1. |
சப்தவேதி | captvēti, n.<> šabda-vēdhin. The art of shooting at an unseen object, judging its position by sound; ஒலியின் மூலம் பொருளை இலக்காகவைத்து அம்பு எய்யும் வித்தை. |
சப்தாகபாராயணம் | captāka-pārāyaṇam, n. <> சப்தாகம்+. See சத்தாகம். Colloq. . |
சப்தாகம் | captākam, n. <> saptāha. See சத்தாகம். Colloq. . |
சப்தாங்கம் | captānkam, n. See சப்தவர்க்கம், 1. . |
சப்தார்த்தம் | captārttam, n. <> šabda+ artha. Literal meaning. See சத்தார்த்தம். Colloq. . |
சப்தி | capti, n. <> U. zabti. (Legal) Attachment. See ஜப்தி. . |
சப்திசெய் - தல் | capti-cey-, v. tr. <> சப்தி+. (Legal) To attach property, to distrain; வரிமுதலியவைகட்கு ஈடாகச் சொத்துக்களை அதிகாரிகள் சர்க்கார்வசப்படுத்துதல். |
சப்தியிலிரு - த்தல் | capti-y-il-iru-, v. intr. <> id. +. (Legal) To be under sequestration or attachment; பொருள்கள் கோர்ட்டின் அதீனத்திலிருத்தல். |
சப்நிவீஸ் | capnivīs, n. <> U. sabnivīs. Writer, scribe; இராயசக்காரன். |
சப்பங்கம் | cappaṅkam, n. See சப்பங்கி. (M. M.) . |
சப்பங்கி 1 | cappaṅki, n. <> Chin. zhi-pankwe. Japan; ஜப்பான் ராச்சியம். (W.) |
சப்பங்கி 2 | cappaṅki, n. cf. . சோப்பளாங்கி Slow, dull person; மந்தன்.(J.) |