Word |
English & Tamil Meaning |
---|---|
சப்பன்னம் | cappaṉṉam, n. <> Pkt. cappanaca <> ṣaṭ-pacāšat. [K. Tu. cappanna.] The number 56; ஐம்பத்தாறு. சப்பன்னபாஷை. (W.) |
சப்பாணி 1 | cappāṇi, n. 1. See சப்பணம். (w.) . 2. Cripple, lame person; |
சப்பாணி 2 | cappāṇi, n. prob. sa-pāṇi. [T. tsappaṭla, K. cappaṭi.] Clapping hands; கைகொட்டுகை. செங்கீரைதால் சப்பாணி. (இலக். வி. 806). |
சப்பாணிகொட்டு - தல் | cappāṇi,-koṭṭu-, v.intr. <> சப்பாணி+. To clap hands, as infants in play ; கைசேர்த்துக்கொட்டுதல். மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி.). |
சப்பாணிப்பருவம் | cappāṇi-p-paruvam, n. <> id. +. Section of piḷḷai-t-tamiḻ, பிள்ளைத்தமிழில் பிரபந்தத்துக்கு உரிமைபூண்ட குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம். |
சப்பாணிமாடன் | cappāṇi,-māṭaṉ, n. <> சப்பாணி+. A demon ; நொண்டிப்பேய்வகை. (J.) |
சப்பாத்தி 1 | cappātti, n. cf. Port. sabot. [T. capātu.] See சப்பாத்துக்கள்ளி. . |
சப்பாத்தி 2 | cappātti, n. <> U. capātī. Thin cake of unleavened bread; ரொட்டிவகை. |
சப்பாத்திக்கள் | cappātti-k-kaḷ, n. <> சப்பாத்தி +. Purgative prepared from prickly-pear; கள்ளியிலிருந்து சித்தந் செய்யும் பேதிமருந்து வகை. |
சப்பாத்திக்கள்ளி | cappātti-k-kaḷḷi, n. See சப்பாத்துக்கள்ளி. . |
சப்பாத்து 1 | cappāttu n. <> Port. capato. cf. U. capāt. Shoes of European pattern; ஐரோப்பியர் தரிப்பதுபோன்ற சோடுவகை. |
சப்பாத்து 2 | cappāttu, n. cf. japā China rose .sh., Hibiscus rosa sinensis; செம்பரத்தைச் செடி. (L.) |
சப்பாத்து 3 | cappāttu, n. See சப்பாத்துக்கள்ளி. . |
சப்பாத்துக்கட்டை | cappāttu-k-kaṭṭai, n. <> சப்பாத்து1+. Wooden sandals; பாதரட்சைக் கட்டை. |
சப்பாத்துக்கள்ளி | cappāttu-k-kaḷḷi n.<> சப்பாத்தி+. 1. Common prickly-pear, s.tr.,Opuntia dillenii; கள்ளிவகை. 2. Prickly-pear, with yellow and crimson flowers, 1. sh., Opuntia monocanta; |
சப்பாத்துப்புழு | cappāttu-p-puḻu, n.<> id. +. [T. ṭsappātipurugu.] Cochineal. See இ¤ந்திரகோபம். . |
சப்பி 1 | cappi, n. [Tu. jabbu.] Chaff; பதர். (J.) |
சப்பி 2 | cappi, n.<> சப்ப-. Eater; சப்புகிறவன். |
சப்பிக்கொடு - த்தல் | cappi-k-koṭu-, v. tr.<> id. +. To chew food and give it to a child, as a mother; வாயிலிட்டுப் பதபடுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல். (W.) |
சப்பிட்டுப்போ - தல் | cappiṭṭu-p-pō-, v. intr. prob. சப்பை+. To become insipid or stale; உருசியற்றுப்போதல். அந்தப் பழம் சப்பிட்டுப்போயிற்று. To become disheartened; |
சப்பியம் | cappiyam, n.<> sabhya. Propriety of speech, as observed in society; [சபைக்குத் தக்கது] நெறிப்பட்ட பேச்சு. (இலக். அக.) |
சப்பியர் | cappiyar, n. <> id. Members of an assembly; சபையோர். |
சப்பிரதிபாசாக்கிரம் | cappiratipā-cākkiram, n.<> sa-pratibhā+. (šaiva.) The waking state of the soul capable of full enjoyment; விஷயங்களை அனுபவிக்கவல்ல ஆன்மாவின் சாக்கிரநிலை. (சி. சி. 4, 33, சிவாக்.) |
சப்பிரம் | cappiram, n. See சப்பரம். . |
சப்பிரமஞ்சம் | cappira-macam, n. <> சப்பிரம்+. Testered bedstead; மேற்கட்டமைந்த சிங்காரக் கட்டில். சப்பிரமஞ்ச கோளகைமீ திருந்து (தனிப்பா.i, 385, 36). |
சப்பு 1 - தல் | cappu-, 5 v. tr. prob. carv. 1. To masticate, chew, as betel or tobacco; மெல்லுதல். 2. To mumble in eating; to munch; 3. [T. tcapparicu, K. jabbisu, M. cappu.] To sip, suck; |
சப்பு 2 - தல் | cappu-, 5 v. intr. cf. carpaṭa. [U. capaṭā.] 1. To be bent, pressed in; to become flat; அதுங்குதல். பாத்திரம் சப்பிவிட்டது. 2. To be reduced; to subside; |
சப்பு 3 | cappu, n. <> E. soap; [ T. sabbu.] சவுக்காரம். Loc. |
சப்புச்சவறு | cappu-c-cavaṟu, n. Redupl. of சப்பு. Refuse, rubbish; உபயோகமின்றிக் கழிக்கப்பட்ட பொருள். Loc. |
சப்பெனல் | cap-p-eṉal, n. Onom. expr. signifying insipidity; சாரமின்மைக் குறிப்பு. உப்பில்லாப் பண்டம் சப்பென்றிருக்கும். |