Word |
English & Tamil Meaning |
---|---|
சப்பை 1 | cappai, n. cf. carpaṭa. [K. cappe.] 1. [M. cappa.]that which is flattened; சப்பட்டையானது. 2. That which is insipid or tasteless; 3. [T. tjabbu, K. Tu. jabbu.] That which is weak, learn emaciated; 4. That which is useless; 5. That which is despicable, mean or low; 6. [T. tjabba.] Hips, haunch, shoulder-blade; |
சப்பை 2 | cappai, n.<> T. tcappa. Loc. A spar of wood placed for the wheels of a car to run smooth in a sandy road; தேரின் சக்கரம் தரையிற்புதையாமலோடும்படி அதனடியில் இடப்படும் மரத்துண்டு. 2. Rafter; 3. A chip of wood; |
சப்பை 3 | cappai, n. <> U. chāpā. [T. tcappa, K. Tu. Cappe.] A seal; முத்திரை. Colloq. |
சப்பைக்கட்டுக்கட்டு - தல் | cappai-k-kaṭṭu-k-kaṭṭu v. intr. <> சப்பை+. To defend and support a person, especially when his actions or words are open to criticism ; குற்றங்குறைகளைத் தாங்கிப் பேசுதல். |
சப்பைக்காய் | cappai-k-kāy, n. <> id. +. Flat fruit, as some mangoes; தட்டையான மாங்காய் முதலியன.(J.) |
சப்பைக்கால் | cappai-k-kāl, n. <> id. +. Club-foot; வளைவான கால். சப்பைக்கா லண்ணன் பெருவயிறன். (தனிப்பா. i, 35, 66). |
சப்பைக்கோலா | cappai-k-kōlā, n. prob. id.+. Halfbeak, sea-fish, silvery, striped, Hemirhampus georgii; கடல்மீன்வகை. |
சப்பைச்சலங்கை | cappai-c-calaṅkai, n. prob.id.+. An ornament of tiny bells for children; குழந்தைகளணியும் சதங்கயணிவகை. Nā. |
சப்பைத்திருக்கை | cappai-t-tirukkai, n. prob. id.+. Sea-fish, olive, disc twice as broad as long, myliobatis nieuhofii; கடல்மீன் வகை. |
சப்பைத்துணி | cappai-t-tuṇi, n. <> id. +. [M. cappattuṇi.] Coarse or inferior cloth; மட்டமான துணி. Loc. |
சப்பைநிலம் | cappai-nilam, n. <> id. +. Barren tract of land; பயனற்ற பாழ்நிலம். Colloq. |
சப்பைநோவு | cappai-nōvu, n. <> id. +. See சப்பைவீக்கம். . |
சப்பைப்பிடிப்பு | cappai-p-piṭippu, n. <> id. +. Rheumatism in the hips, hip-gout; இடுப்புப் பக்கத்தில் உண்டாம் வாதவகை. Colloq. |
சப்பைமூக்கு | cappai-mūkku, n. <> id. +. [M. cappamūkku.] Flat pug-nose; தட்டையான நாசி. |
சப்பைமூஞ்சி | cappai-mūci, n. <> id. +. Person or animal with flat or unshapely face; தட்டையான முகமுள்ள-வன்-வள்- து. Colloq |
சப்பையெலும்பு | cappai-y-elumpu, n. <> id. +. Hip bone; இடுப்புப்புறமுள்ள எலும்பு. |
சப்பைவாக்கு | cappai-cākku, n. <> id. +. See சப்பட்டைவாக்கு. Loc. . |
சப்பைவாய் | cappai-vāy, n. <> id. +. Mouth with lips short or shrunk; உதடுகள் சிறிது உள்ளடங்கிய வாய். Colloq. |
சப்பைவீக்கம் | cappai-vīkkam, n. <> id. +. Anthrax fever; கால்நடை வியாதிவகை. |
சப்ராசி | caprāci, n. <> U. caprāsī. Liveried peon, orderly, as wearing a badge; வில்லைச் சேவகன். (C. G.) |
சப்ஜா | capjā, n. <> U. sabza. 1. Iron-grey, as the colour of a horse; கருமயிலை நிறம். 2. Sweet basil. See திருநீற்றுப்பச்சை. |
சப்ஜாசேலை | capjā-cēlai, n. <> id. +. A kind of silk cloth worn by women; ஒருவகைப் பட்டுச்சேலை. Loc. |
சப்ஜாடா | capjāṭā, adv. <> U. sāfjādā. Completely ; முழுவதும். Loc. |
சப்ஜி | capji, n. <> U. sabzī. Greens ; கீரை வகைகள். Loc. |
சபக்கத்தொடர்ச்சி | capakka-t-toṭarcci, n. <> sa-pakṣa+. (Log.) Affirmative statement of invariable concomitance illustrated by an affirmative example; சபக்கத்தினின்று எடுத்துக் காட்டும் வியாத்தி. (மணி. 29, 72.) |
சபக்கம் | capakkam, n. <> sa-pakṣa. (Log.) An instance in which the major term is found concomitant with the middle term, as kitchen when fire is the major term; நெருப்புண்மை துணியப்பட்ட அடுக்களைபோலத் துணியப்பட்ட பொருள் முன்பு வெளியான இடம். சபக்கத்துண்டாதலும் (மணி. 29. 123). |
சபட்சம் | capaṭcam, n. See சபக்கம். . |
சபதக்காரன் | capata-k-kāraṉ, n. <> šapatha+. One who bets or takes a vow; சூளுறவு செய்வோன். Colloq. |