Word |
English & Tamil Meaning |
---|---|
சபாகாரியம் | capā-kāriyam, n. <> id. +. Business transacted by an assembly; சபையோர் செய்யும் காரியம். (T. A. S. i, 249.) |
சபாகுசுமம் | capā-kucumam, n. <> japā+. Cemparattai flower; செம்பரத்தைமலர். (சி. சி. 2, 67, சிவாக்.) |
சபாசனம் | capācaṉam, n. <> sabhājana. Honour done to a person; ஒருவனுக்குச் செய்யும் மரியாதை. (சங். அக.) |
சபாசு | capācu, int. See சபாஷ். சபாசென்று மெச்சிக் கொடுக்கு மதிகாரமே (திருவேங். சத. 41). |
சபாத்தியட்சன் | capāttiyaṭcaṉ, n. <> sabhā-adhyakṣa. President of an assembly; அவைத்தலைவன். |
சபாதாம்பூலம் | capā-tāmpūlam, n. <> id. +. Betel, areca-nuts, etc., distributed at a public meeting or at a marriage; விவாகமுதலிய காலங்களில் வந்துள்ள சனங்களுக்கு வழங்கும் வெற்றிலை முதலியன. Colloq. |
சபாநாதன் | capā-nātaṉ, n. <> id. +. 1. See சபாத்தியட்சன். . 2. See சபாபதி. |
சபாநாயகன் | capā-nāyakaṉ, n. <> id. +. 1. See சபாத்தியட்சன . 2. See சபாபதி. |
சபாபதி | capā-pati, n. <> sabhā-pati, Naṭarāja, as the Lord of the sacred hall at Chidambaram; [சிதம்பர சபையின் அதிபதி] நடராசமூர்த்தி. |
சபாமண்டபம் | capā-maṇṭapam, n. <> sabhā+. Assembly-room, public hall; சபைகூடும் மண்டபம். |
சபாமணி | capāmaṇi, n. <> U. chipā'onī. See சபாவணி. . |
சபாமூப்பன் | capā-mūppaṉ, n. <> sabhā+. [M. sabhāmūppan.] Churchwarden; மாதாகோயிலின் முதன்மை ஸ்தானீகன். R. C. |
சபாரஞ்சகம் | capā-racakam, n. <> id. +. That which is pleasing to an audience, as a speech; சபையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது. |
சபாரஞ்சிதம் | capā-racitam, n. <> id. +. See சபாரஞ்சகம். . |
சபாவணி | capāvaṇi, n. <> U. chipā'onī. (C. G.) 1. Embezzlement ; ஒப்படைப்பொருளை அபகரித்துக்கொள்ளுகை. 2. Non-mention in the records of a piece of land with a view to evade payment of revenue; |
சபாஷ் | capāṣ, n. <> U. shābāsh. Expression signifying 'well done!' 'bravo!' 'excellent!', a term of cheering; 'மிகநன்று' எனப் பொருள்படும் குறிப்புச்சொல். |
சபி 1 - த்தல் | capi-, 11 v. tr. <> šap. To curse, utter an imprecation; சாபமிடுதல். தலைஅயற்று விழுகவெனச் சபித்தா ரன்றே (உத்தரரா. திக்குவி. 94). |
சபி 2 - த்தல் | capi-, 11 v. tr. <> jap. To recite, as mantras; to pray; மந்திரத்தை யுச்சாரணஞ் செய்தல். |
சபிகர் | capikar, n. <> sabhika. Members of an assembly; சபையோர். |
சபிண்டர் | capiṇṭar, n. <> sa-piṇda. Agnates up to the seventh degree, as participating in piṇṭam } offered to a common ancestor, sometimes extended to certain maternal relations also; பிதிர்ப்பிண்டம் இடுதற்குறிய ஏழுதலைமுறைக்குட்பட்ட ஞாதியர். |
சபிண்டி | capiṇṭi, n. See சபிண்டீகரணம். அத்தலத்திற் செயத்தகுந் சபிண்டி. (சேதுபு. சங்கரபாண். 55). |
சபிண்டீகரணம் | capiṇṭī-karaṇam, n. <> sapiṇdī-karaṇa. šrāddha, usually performed on the 12th day after death for the purpose of including the deceased among the manes; பிதிர்க்களுக்குரிய கிரியை இறந்தவனுக்கும் உரிமையாதற் பொருட்டு பெரும்பாலும் இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யபடுஞ் சிராத்தம். (திருவானைக். கோச்செங்.15.) |
சபினம் | capiṉam, n. cf. jaṭilā. Sweet flag. See வசம்பு.(மலை.) . |
சபீசதீட்சை | capīca-tīṭcai, n. <> sa-bīja+. (šaiva.) A mode of initiation in which the guru gives a properly qualified and learned disciple instructions on routine religious duties, a kind of kiriyāvati, q.v.; அறிவொழுக்கங்களில் சிறந்துள்ள உத்தமசீடர்க்குச் சைவசமயாசார கருமங்களைச் செய்துவரும்படி உபதேசிக்கும் கிரியாவதிதீட்சைவகை. (சி. சி. 8, 3, சிவாக்.) |
சபீசை | capīcai, n. See சபீசதீட்சை. (சி. சி. 8, 4, ஞானப்.) . |
சபீனம் | capīṉam, n. See சபினம். (சங். அக.) . |
சபேடிகை | capēṭkai, n. <> capēṭikā. Slapping; கைத்தலத்தால் அறைகை. Loc. |
சபேதா | capētā, adj. <> U. safetā. White; வெண்மையான. Loc. |
சபை | capai, n.<> sabhā. 1. Assembly, meeting, congregation, society, association; கூட்டம். (பிங்.). 2. See சபாமண்டலம். Colloq. 3. Common meeting place. See அம்பலம். 4. Temple-halls in which šiva performs His dance, as the kaṉaka-capai at Chidambaram; 5. Church, congregation. See திருச்சபை. Chr. |