Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பன்னகிருகஸ்தன் | campaṉṉa-kirukastaṉ, n. <> id. +. Lit., worthy householder. Unreliable person, used ironically ; [தகுதியுள்ள வீட்டுக்காரன்] நாணயமற்றவன். |
சம்பன்னம் | campaṉṉam, n. <> sam-panna. Completeness, perfection; நிறைவு. (யாழ்.அக.) |
சம்பன்னன் | campaṉṉaṉ, n. <> id. 1. Prosperous or wealthy man; சம்பத்துள்ளவன். நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய் (பட்டினத். திருவேகம்ப. 21). 2. One well endowed, as with good qualities--usually last member in compound words; |
சம்பா 1 | campā, n. cf. šamb. 1. [T. sambāvulu, K. sambe, M. cambā.] A superior kind of paddy; உயர்தர நெல்வகை. (மலை.) 2. Boiled rice mixed with pepper powder, cumin, etc., offered to deity in temples; |
சம்பா 2 | campā, n. (W.) 1. A game with four little shells on circles drawn on a board or on the ground; வட்டமாகக் கோடுகிழித்து நான்கு சிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு. 2. One of the fails of shells in the campā game; 3. [K. jambu.] Breadth of four fingers, hand-breadth; |
சம்பாக்கட்டளை | campā-k-kaṭṭaḷai, n. <> சம்பா+. Provision for oblations of campā rice in a temple; ஆலயத்திற் சம்பாநெற்சாதங்கொண்டு சுமிக்கு நிவேதனஞ் செய்விக்கும் ஏற்பாடு. Loc. |
சம்பாகம் 1 | campākam, n.<>sam-pāka. That which is properly cooked; நன்றாய்ச் சமைத்தது. (W.) |
சம்பாகம் 2 | campākam, n. cf. சம்வாகம். Country ; நாடு. (யாழ்.அக.) |
சம்பாடணம் | campāṭaṇam, n. See சம்பாஷணம். . |
சம்பாடணை | campāṭaṇai, n. See சம்பாஷணை. (இலக். அக.) . |
சம்பாடம் | campāṭam, n. <> T. sampāṭamu. Weighing a jewel with inlaid lac, precious stones, etc. ; ஆபரணத்தை அதனிடமுள்ள அரக்கு முதலியவற்றோடு நிறுக்கை. Loc. |
சம்பாத்தியம் | campāttiyam, n. <> sampādya. Acquisition, earnings; பொருள் ஈட்டுகை. |
சம்பாதனம் | campātaṉam, n. <> sampādana. See சம்பாத்தியம். . |
சம்பாதனை | campātaṉai, n. <> id. See சம்பாத்தியம். Loc. . |
சம்பாதி 1 - த்தல் | campāti-, 11 v. tr. sam-pad. To earn, acquire, secure; தேடிப்பெறுதல். |
சம்பாதி 2 - த்தல் | campāti, n. <> Sampāti. A vulture-king, elder son of Aruṇa and brother of Jaṭāyu; அருணனது மூத்த புத்திரனும் சடாயுவின் சகோதரனுமாகிய கழுகரசன். சம்பாதியிருந்த சம்பாதி வனமும் (மணி.3, 54). |
சம்பாதிபுரம் | campāti-puram, n. <> id. +. Vaithisvarankoil, a town in Tanjore District, named after Sampāti who worshipped šiva at this place; சம்பாதியாற் பூசிக்கப்பெற்ற வந்தீச்சுவரன்கோயில் என்னுஞ் சிவதலம். (சங். அக.) |
சம்பாபதி | campāpati, n. 1. The tutelary goddess of Jambūdvīpa; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை. சம்பாபதிதன் னாற்ற றோன்ற (மணி. 6, 190). 2. Kāviri-p-pūm-paṭṭiṉam, as the of Campāpati; |
சம்பாபுரம் | campā-puram, n. <> Campā. +. The capital of the Aṅga; அங்கதேசத்தின் இராசதானி. (யாழ்.அக.) |
சம்பாரங்கூட்டு - தல் | campāraṅ-kūṭṭu-, v. intr. <> சம்பாரம்+. To mix curry-stuffs; கறிக்குக் கூட்டுவர்க்கஞ் சேர்த்தல். Loc. |
சம்பாரப்புளி | campāra-p-puḷi, n. <> id. +. Tamarind mixed with curry-stuffs; கூட்டுவர்க்கம் சேர்த்த புளி. |
சம்பாரப்பொடி | campāra-p-poṭi, n. <> id. +. Curry-powder; கறிகூட்டுவர்க்கம். |
சம்பாரம் | campāram, n. <> sam-bhāra. 1. Curry-stuffs ; கூட்டுவர்க்கம். சம்பாரங் கணக்கவிட்ட நாய்க்கறியும் (தனிப்பா.ii, 19, 41). 2. Spiced a diluted butter-milk, used as a drink; 3. Beam supporting the rafters; |
சம்பாரவல்லி | campāra-valli, n. Red vine m.cl., Vitis indica; கொடிவகை. (L.) |
சம்பாரி | campāri, n. <> jambha+ari. 1. Indra, as the vanquisher of an Asura named Jambha ; [சம்பன் என்ற அசுரனைக் கொன்றவன்] இந்திரன். 2. Agni, the fire-god; |
சம்பால் | campāl, n. cf. sam-bhāra. [T. sambāru.] A kind of savoury dish or preparation ; பச்சடிவகை. (W.) |