Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பு 4 | campu, n. See சம்புகம். (பிங்.) . |
சம்பு 5 | campu, n.<> jambīra. See சம்பீரம், (திவா.) . |
சம்பு 6 | campu, n.<> campū. A literary composition in mixed prose and verse; செய்யுளும் வசனமும் விரவிவரும் பிரபந்தவகை. |
சம்பு 7 | campu, n. See சம்பம். சம்புக்கு ஏன் செய்கிறாய். Loc. |
சம்பு 8 | campu n. See சம்பம் (அக. நி.) . |
சம்புகம் | campukam, n. <> jambuka. Fox, jackal; நரி. பல சம்புகங்க டுதி சொல்ல (பாரத. வேத். 53). |
சம்புகானா | campukāṉā, n. <> U. jamkāna. Carpet; விரிப்பாக உபயோகப்படும் இரத்தினகம்பளம். Loc. |
சம்புகேச்சுரம் | campukēccuram, n. <> Jambukešvara. A šiva shrine. See ஆனைக்கா. . |
சம்புச்சயனம் | campu-c-cayaṉam, n. <> சம்பு+. Banyan, as the couch of Vishnu ; [விஷ்ணுவின் படுக்கை.] ஆல். (மூ. அ.) |
சம்புடம் | campuṭam, n. <> sam-puṭa. 1. Small round metal casket ; சிறுசெப்பு. 2. Volume, part of a book; 3. (Nāṭya.) A posture in sitting, one of nine iru-k-kai, q.v.; |
சம்புத்தி | camputti, n. <> sam-buddhi. (Gram.) Vocative singular; ஒருமைவிளி. (பி. வி. 5, உரை.) |
சம்புத்தீவு | campu-t-tīvu, n. <> jambū-dvīpa. One of the annular continents. See நாவந்தீவு. (மணி. 17, 62.) . |
சம்புநதி | campu-nati, n. <> jambū-nadī. A river. See சாம்புநதம். (W.) . |
சம்புநாவல் | campu-nāval, n. <> சம்பு+. 1. Rose-apple m.tr.,Eugenia jambos; பெருநாவல். (பதார்த்த. 739.) See சம்புமலாக்கா. |
சம்புபட்சம் | campu-paṭcam, n.<> சம்பு+. (šaiva.) The manifestations of šiva functioning in the universe of pure māyā, viz.., Catācivaṉ and Makēcaṉ, dist. fr. aṇu-paṭcam; சுத்தமாயைப் பிரபஞ்சத்தில் தொழில்புரியும் சிவபேதங்கள். (சி. போ. பா. 2, 4, பக்.223.) |
சம்புமலாக்கா | campu-malākkā, n.<> சம்பு+. Malay apple s.tr., Eugenia malaccensis; நாவல்வகை. |
சம்புரோட்சணம் | campurōṭcaṇam, n. <> sam-prōkṣaṇa. Purificatory ceremony, as in a temple; சுக்திக்காகக் கோயில்களிற் செய்யுஞ் சடங்கு. |
சம்புரோட்சணை | campurōṭcaṇai, n. See சம்புரோட்சணம். . |
சம்புவராயர் | campuvarāyar,` n. A title among the Vaṉṉiya and Kaḷḷa castes; வன்னியர் கள்ளர்களின் பட்டப்பெயர். |
சம்புளி | campuḷi, n. See சம்பளி .(J.) . |
சம்பூகம் | campūkam, n. <> šambūka. A bivalve shell; கிளிஞ்சில்வகை . |
சம்பூர்த்தி | campūrtti, n.<> sam-pūrtti, See சம்பூரணம், 1, 2. Loc. . |
சம்பூரணம் | campūraṇam, n. <> sam-pūrṇa. 1. Fulness, completion; நிறைவு. 2. End, termination; 3. Abundance, plenty 4. (Mus.) See சம்பூரணராகம். (சிலப். 13, 106, உரை.) 5. Name give to a female child by parents who have had enough of female children and wish to have no more; |
சம்பூரணராகம் | campūraṇa-rākam, n. <> id. +. (Mus.) Primary melody-type, as containing all the notes of the gamut ; எல்லா ஸ்வரங்களும் அமைந்த இராகம். |
சம்பூலமாலிகை | campūla-mālikai, n. prob. sampūjā+ mālikā. A kind of fancy letter written by the bride's friends to the bridegroom and bride; புதுமணவாட்டிக்கும் மணவாளனுக்கும் பெண்ணின் தோழிகள் எழுதும் வினோத எழுத்து. (யாழ். அக.) |
சம்பை 1 | campai, n. See சம்பு, 1. . |
சம்பை 2 | campai, n. perh. சாம்பு-. 1. [M. cambu.] See சம்பைச்சரக்கு. . 2. cf. šambara. Fish; |
சம்பை 3 | campai, n. <> šampā. Lightning ; மின்னல். (பிங்.) |
சம்பை 4 | campai, n. <> jhampā. See சம்பைத்தாளம். சம்பைக்கு லகுவநுதுரிதந் துரிதமாம் (பரத. தாள. 21). |
சம்பை 5 | campai, n. perh. Luxuriant growth; செழிப்பு. |
சம்பைக்குத்தகை | campai-k-kuttakai, n.<> சம்பை+. Fish-lease; மீன்குத்தகை.( W.) |
சம்பைக்கொங்காணி | campai-k-koṅkāṇi, n.<> சம்பை+. Rain-proof covering made of elephant grass ; சம்பங்கோரையாற் பின்னிய மழை தாங்கும் போர்வை. (W.) |