Word |
English & Tamil Meaning |
---|---|
சமயக்கோட்பாடு | camaya-k-kōṭpāṭu, n. <> சமயம்+. Religious beliefs, tenets, doctrines; மதக்கொள்கை. |
சமயகருமம் | camaya-karumam, n. <> id. +. see சமயாசாரம். . |
சமயகவடன் | camaya-kavaṭaṉ, n. <> id. +. kapaṭa. A hypocrite who acts as occasion suits him; time-server; சமயத்திற்கேற்றபடி நடக்கும் வஞ்சகன். Loc. |
சமயகாரியம் | camaya-kāriyam, n. <> id. +. See சமயாசாரம். . |
சமயங்கடத்து - தல் | camayaṅ-kaṭattu-, v. intr. <> id. +. Loc. 1. To while away time; வீண்காலம் போக்குதல். 2. To be postponing; |
சமயச்சந்துக்கட்டு | camaya-c-cantu-k-kaṭṭu, n. <> id. +. Critical time; unlucky conjunction of circumstances; time of difficulty ; நெருக்கடியான சமயம். Colloq. |
சமயசத்திரம் | camaya-cattiram, n. <> id. +. chatra. Umbrella signifying success in religious disputations; மதவாதத்தில் வெற்றிக்கு அறிக்குறியாக கொண்ட குடை. (கோயிலொ. 49.) |
சமயசந்தோஷி | camaya-cantōṣi, n. <> id. +. One who pleases ro cheers at an opportune moment ; காலம்பார்த்துக் களிப்பை உண்டாக்குவோன். Loc. |
சமயசாத்திரம் | camaya-cāttiram, n. <> id. +. See சமயநூல். . |
சமயத்தறுவாய் | camaya-t-taṟuvāy, n. <> id. +. The most proper occasion, critical juncture; தக்க காலம். Colloq. |
சமயத்தார் | camayattār, n. <> id. Followers of a religious system; ஒருமதத்தைச் சார்ந்தவர். அன்றென்ப வாறு சமயத்தார் (வள்ளுவமா. 9). |
சமயதத்துவம் | camaya-tattuvam, n. <> id. +. The fundamental doctrines of a religion; மதத்தின் அடிப்படையான உண்மைகள். (மணி.10, 80, உரை.) |
சமயதருமம் | camaya-tarumam, n. <> id. +. See சமயதத்துவம். . |
சமயதி | cama-yati, n. <> sama+yati. (Mus.) A metrical composition in which all the lines are of uniform length; எல்லா அடிகளும் ஒத்த அளவினாய் வரும் இசைப்பாட்டுவகை. |
சமயதிவாகரர் | camaya-tivākarar, n. <> samaya. +. Vāmaṉa-muṉivar, commentator on Nīlakēci, a Jaina work in Tamil; நீலகேசியென்னும் சைனநூலின் உரைகாரராகிய வாமனமுனிவர். |
சமயதீட்சை | camaya-tīṭcai, n. <> id. +. (šaiva.) A mode of religious initiation admitting a person into the fold of saivaism, one of three tīṭcai, q.v.; தீட்சை மூன்றனுள் சைவசமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது. (சைவச. மாணாக். 5, உரை.) |
சமயநிந்தை | camaya-nintai, n.<> id. +. Blasphemy; மததூஷணம். |
சமயநிலை | camaya-nilai, n. <> id. +. (W.) 1. See சமயக்கோட்பாடு. . 2. Religion as pratise by its professors or adherents; |
சமயநூல் | camaya-mūl, n. <> id. +. Sacred book of a religion; மதசாஸ்திரம். |
சமயப்பற்று | camaya-p-paṟṟu, n. <> id. +. Love of one's own religion; மதாபிமானம். |
சமயப்போர் | camaya-p-pōr, n. <> id. +. Religious controversy; மதச்சண்டை. |
சமயப்போலி | camaya-p-pōli, n. <> id. +. A travesty of religion; போலிமதம். (W.) |
சமயபத்திரம் | camaya-pattiram, n. <> id. +. Deed of agreement; உடன்படிக்கைப் பத்திரம். என்றுபண்ணின தர்மஸ்தாபன சமயபத்திரம் (S. I. I. I, 84). |
சமயபதார்த்தம் | camaya-patārttam, n. <> id. +. (šaiva.) The eight-fold doctrinal principles viz., pati, pacu, pācam, patikiruttiyam, pacu-karumam, pacu-pōkam, mutticātaṉam, mutti; சைவசமயத்தார் கொள்ளற்குரிய பதி, பசு, பாசம், பதிகிருத்தியம், பசுகருமம், பசுபோகம், முத்திசாதனம், முத்தி என்ற எண்வகைப் பொருள்கள். (சைவப். 67.) |
சமயபேதம் | camaya-pētam, n. <> id. +. 1. Diversity of religion ; மதவேறுபாடு. 2. Unseasonbleness, inopportune moment; 3. Evil time; |
சமயபேதி | camaya-pēti, n. <> id. +.bhēdī nom. sing. of bhēdin. Heretic, schismatic; புறச்சமயத்தான். (யாழ். அக.) |
சமயபோதனை | camaya-pōtaṉai, n. <> id. +. 1. Religious instruction; மதக்கொள்கைகளை உணர்த்துகை. 2. See சமயக்கோட்பாடு. |
சமயம் | camayam, n.<> samaya. 1. Time; காலம். 2. Critical moment; suitable or proper opportunity; 3. Leisure; 4. Creed or religious system; 5. (šaiva.) See சமயதீட்சை. சமய விசேட நிர்வாணம் (சி. சி. 8, 5). 6. Text-book, as of a religion; 7. Agreement, contract; 8. Established usage, convention; |