Word |
English & Tamil Meaning |
---|---|
சமர்த்தி 4 | camartti, n. See சமசை. (யாழ். அக.) . |
சமர்த்து | camarttu, n. <> samartha. Ability, skill; திறமை. 2. சமர்த்தாற்று மாற்றல் (அரிச். பு. இந்திரா. 46). |
சமர்ப்பணம் | camarppaṇam, n. <> samarppaṇa. Dedication, votive offering; கடவுளர் பெரியோர்களுக்கு காணிக்கை முதலாயின அளிக்கை. |
சமர்ப்பணை | camarppaṇai, n. See சமர்ப்பணம். . |
சமர்ப்பி - த்தல் | camarppi-, 11 v. tr. <> samarppi. To offer, as to God; to dedicate, as a book; கடவுளர் பெரியோர்களுக்குக் காணிக்கை முதலாயின அளித்தல். ஈசனிடத் தெப்பொருளுஞ் சமர்ப்பித்து (ஞானவா. அருச்.13). |
சமரகேசரி | camara-kēcari, n. <> samara +. A great warrior, as lion in battle; [போரில் சிங்கம் போன்றவன்] பெருவீரன். சமரகேசரித் தெரிஞ்ச கைக்கோளரில் கூத்தன் நிகளங்கனும் (S. I. I. v. 233). |
சமரகோலாகலன் | camara-kōlākalaṉ, n. <> id. +. One who revels in battle; போரில் விருப்பமுடையவன். (Insc.) |
சமரங்கபூபதி | camaraṅka-pūpati, n. <> id. + raṅga +. Winner of many battles, hero of many fights; பலபோரில் வெற்றிபெற்ற அரசன். Loc. |
சமரங்கம் | cama-raṅkam, n. <> id. + id. A battle-field, arena; போர்க்களம். Loc. |
சமரசம் | camaracam, n. <> sama-rasa. 1. Equality, harmony, identity; 1. ஒற்றுமை. வேதாந்த சித்தாந்த சமரச சுபாவமிதுவே (தாயு. பரிபூரணா. 5). 2. Impartiality; |
சமரசமாய் | camaracam-āy, adv. id. +. Satisfactorily; அனுகூலமாய். அவர்கள் வழக்கு சமரசமாய் முடிந்தது. |
சமரசர் | camaracar, n. <> id. 1. Companions, friends; நண்பர். (R.) 2. Impartial arbiter; |
சமரதன் | cama-rataṉ, n. <> sama-ratha. Warrior in chariot who engages another warrior in an equal fight, one of four tēr-vīrar, q.v.; பிறிதொரு தேர்வீரனொடு தோலாமற் போர்புரிய வல்ல தேர்வீரன். சமரதப் பதிகள் (பாரத. அணிவ. 2). |
சமரதி | cama-rati. n. <> sama +. (Erot.) A mode of sexual enjoyment; கலவிவகை. |
சமரபுங்கவன் | camara-puṅkavaṉ, n. <> samara +. Lit., bull in battle. A great warrior; [யுத்தத்தில் காளைபோன்றவன்] பெருவீரன். |
சமரபுரி | camara-puri, n. <> id. +. Tiru-p-pōrūr in Toṇṭai- nāṭu; தொண்டைநாட்டிலுள்ள திருப்போருரென்னுந் தலம். சமரபுரியாய் தாலேலோ (திருப்போ. சந். பிள்ளைத். தாலப்.1). |
சமரம் 1 | camaram, n. <> samara. Battle, fight; போர். இலங்கையிலெழுந்த சமரமும் (சிலப். 26, 238). |
சமரம் 2 | camaram, n. cf. šslala. Porcupine; முள்ளம்பன்றி. (நிகண்டு.) |
சமரம் 3 | camaram, n. <> camara. 1. Yak; 1. கவரிமா 2. A kind of fly-flapper, chowry; |
சமரவி | cama-ravi, n. <> sama +. (Astron.) Sun's true longitude at the middle of an eclipse; கிரகணமத்தியநாலத்தைக் குறிக்கும் சூரியஸ்புடம். (று.) |
சமராத்திரம் | cama-rāttiram, n. <> id. +. Equinox, time when day and night are equal; பகலிரவுகள் நாழிகையளவில் ஒத்தநாள். (W.) |
சமரி 1 | camari, n. cf. samara. Durgā, as the Goddess of War; [போருக்குரிய தெய்வம்] துர்க்கை. (பிங்.) |
சமரி 2 | camari, n. <> K. camaḷi <> saimhikēya. Snake; பாம்பு. (யாழ். அக.) |
சமரிக்கேசு | camari-k-kēcu, n. <> E. summary +. A judicial enquiry conducted summarily ; சுருக்கமாக விசாரணை செய்யப்படும் வழக்கு. Loc. |
சமரேகை | cama-rēkai, n. <> sama +. Equatorial line; பூமத்தியரேகை. (W.) |
சமலம் | camalam, n.<> sa-mala. 1. Ordure, refuse; 1. மலம். 2. Impurity |
சமலன் | camalaṉ, n. <> id. Soul, as being with malam; [மலத்தோடு கூடியவன்] சீவான்மா. சமலர்க்குப் பாசந் தடுத்து (சைவச. ஆசா. 23). |
சமலாவத்தை | camalāvattai, n. <> id. + avasthā. (šaiva.) Condition of the soul when it is subject to malam; ஆன்மாமலத்தோடு கூடியிருக்கும்பொழுது அடையும் நிலை. (சி. சி. 4, 36, மறைஞா.) |
சமவசரணம் | camavacaraṇam, n. <> samavašaraṇa. (Jaina.) Heavenly pavilion erected by the Gods at a distance of 5000 bow-lengths above the earth for receiving sacred instructions from kēvali, the perfected soul; கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்குடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசாரணச்சருக்கம். (மேருமந்) |
சமவயசு | cama-vayacu, n. <> sama +. Equal age; ஒத்த பிராயம். Colloq. |
சமவர்த்தி | camavartti, n. <> sama-vartī nom. sing. of sama-vartin. Yama, as impartial; [நடுநிலையில் இருப்பவன்] யமன். (யாழ். அக.) |