Word |
English & Tamil Meaning |
---|---|
சமவாகாரம் | camavākāram, n. <>sam-avā-kāra. (Drama.) Species of drama in three acts representing the heroic deeds of gods or demons, one of ten rūpakam, q.v. ; தேவாசுரர்களுடைய வீரச்செயல்களைக் காட்டுவதாய் மூன்றங்கங்களைக்கொண்ட ரூபகவகை. (சிலப்.பக்.84.) |
சமவாசம் | cama-vācam, n. <>sama +. See சகவாசம் (W.) . |
சமவாதசைவம் | cama-vāta-caivam, n. <>id. +. (šaiva.) A šaiva sect which holds that a liberated soul becomes equal to šiva; மூத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக்கொள்ளும் சைவமதபேதம். (சி.சி.6, 7, சிவஞா.) |
சமவாயம் | camavāyam, n. <>sam-avāya. 1. Assemblage, collection, aggregate; கூட்டம். (சூடா.) (Log.) Intimate relation, as that of a genus and its species, quality and its object, a part and the whole, action and the agent, etc., one of six caṉṉikariṭam, q.v.; |
சமவாயிகாரணம் | camavāyi-kāraṇam, n. <>samavāyin +. material cause; முதற்காரணம். (சி.சி.1, 18, ஞானப்.) |
சமவிருஷ்டி | cama-viruṣṭi, n. <>sama + vṟṣṭi. Moderate rain; நடுத்தரமான மழை. (W.) |
சமவிலை | cama-vilai, n. <>id. +. Moderate price ; ஏற்றமில்லாத நடுத்தர விலை. (W.) |
சமவெடுப்பு | cama-v-eṭuppu, n. <>id. +. (Mus.) A variety of eṭuppu, q.v., in which the song begins on the principal beat of the time-measure; குரலும் தாளமும் ஒப்ப ஆரம்பிக்கும் எடுப்பு வகை. |
சமவேதசமவாயம் | cama-vēta-camavā-yam, n. <>sam-avēta +. (Log.) Intimate relation of an object with that which is intimately united with another, one of six caṉṉikariṭam, q.v.; சன்னிகரிடம் ஆறனுள் நீக்கமின்றியிருப்பதனோடு நெருங்கியுள்ள சம்பந்தம், (தருக்கசங்.நியாய.31.) |
சமவேதம் | camavētam, n. <>sam-avēta. Inseparably associated object; பிறிதோடு நீக்கமின்றியிருக்கும் பொருள். முதல்வன் ... சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் (சி.போ.சிற்.2, 4). |
சமழ்தல் | camaḻ-, 4 v. intr. cf. sam-ard. To be distressed; வருந்துதல். தையலாய் சமழாதுரையென்றதே (சீவக.1000). |
சமழ்த்தல் | camaḻ-, 11 v. intr. cf. id. 1. To grieve; to be in distress; வருந்துதல். அம்மையிற் செய்தன விம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்ப தென்னே (தேவா.1200, 4). 2. To be ashamed; 3. To get worsted; to suffer in comparison; |
சமழ்ப்பு | camaḻppu, n. <>சமழ்-. 1. Distress; வருத்தம். (சூடா.) 2. shame; 3. See சமழ்மை |
சமழ்மை | camaḻmai, n. <>id. Dishonour, disgrace; இழிவு. பொங்குநீர் ஞாலஞ் சமழ்மையாக் கொண்டுவிடும் (நாலடி, 72). |
சமற்காரம் | camaṟkāram, n. See சமத்காரம் . . |
சமன் 1 | camaṉ, n. <>sama. 1. See சமம், 5. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118) . 2. (Mus.) Middle tone; 3. Nearness ; |
சமன் 2 | camaṉ, n. <>šamana. yama; யமன். (பிங்.) |
சமன் 3 | camaṉ, n. See சம்மன். . |
சமன்கட்டு - தல் | camaṉ-kaṭṭu-, v. intr. <>சமன் +. (W.) 1. To tie a cord on the mark of a steelyard for equipoising; துலாக்கோலின் வரையில் கயிற்றை நிறுத்துதல். 2. To counter-poise with a like weight or quantity; |
சமன்சங்கலிதம் | camaṉ-caṅkalitam, n. <>id. +. Series of even numbers, as 2, 4, 6, 8, 10, etc.; இரட்டையிலக்கங்களின் வரிசைத் தொடர். (V.) |
சமன்சாரிசெய் - தல் | camaṉ-cāri-cey-, v. intr. <>சமன்+. To serve summons; சம்மன் உத்திரவு நிறைவேற்றுதல். Colloq. |
சமனகாரி | camaṉa-kāri, n. <>šamana + kārin. Sedative; நோய்களைத் தணித்து உடலைக் குளிரும்படி செய்யும் மருந்து. (பைஷஜ.) |
சமனபுரி | camaṉa-puri, n. <>id. +. Yama's city; யமபுரம். |
சமனம் | camaṉam, n. <>šamana. 1. Calming, subsiding, soothing, allaying; தணியச்செய்கை. பசி சமனமாயிற்று. 2. (šaiva.) šiva's function of veiling, designed to keep the souls engrossed in the experiences of the world. See திரோபவம். (வேதா. சூ. 47.) 3. Sweet flag. See வசம்பு. (மலை.) 4. Worm-killer. See வூடுதின்னாப் பாளை. (மலை.) |