Word |
English & Tamil Meaning |
---|---|
சமயம்பார் - த்தல் | camayam-pār-, v. intr. <> சமயம்+. To watch for a suitable opportunity; தக்ககாலத்தை எதிர்பார்த்திருத்தல். |
சமயமதம் | camaya-matam, n. <> id. + mada. Bigotry, fanaticism, மதவெறி. (W.) |
சமயமானம் | camaya-māṉam, n. <> id. +. See சமயப்பற்று. சன்னியாசிக்குஞ் சாதிமானஞ் சமயமானம் விடாது. (W.) |
சமயமிரு - த்தல் | camayam-iru-, v. intr. <> id. +. To sit in state, as a king; ஒலக்கமிருத்தல். பெண்சாராத தெனவே சமயமிருக்கும் மண்டபமாம் (சீவக. 2370, உரை). |
சமயமுதல்வி | camaya-mutalvi, n. <> id. +. Pārvatī, as the Supreme Being of the šāktas; [சக்திமதத்தின் இறைவி) உமை. (பிங்.) |
சமயலங்கனம் | camaya-laṅkaṉam, n. <> id. + laṅghana. Transgression of religious principles; மதக்கோட்பாட்டை மீறுகை. சமயலங்கனமுந் தெய்வ நிந்தையுஞ் செய்தனர் (பெரியபு. திருநாவுக். 83) |
சமயவாதம் | camaya-vātam, n. <> id. +. Religious disputation or controversy; மதம் பற்றிய தருக்கம். |
சமயவாதி | camaya-vāti, n. <> id. +. Exponent of a religion; தன் சமயத்தை நிறுவும் பொருட்டு வாதிப்பவன்.சமயவாதிக டத்த மதங்களை (திருவாச. 4, 52). |
சமயவாற்றல் | camaya-v-āṟṟal, n. <> id. +. Force of a word, signification; சொல்லாற்றல். (தொல்.சொல்.1, சேனா.) |
சமயவிகற்பம் | camaya-vikaṟpam, n. <> id. +. See சமயபேதம், சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும் (பெருங். உஞ்சைக். 32, 4). |
சமயாசமயம் 1 | camayācamayam, n. <> id. + a-samaya. Proper and improper time; தக்கதும் தகாதுமான காலங்கள். சமயாசமயந் தெரிந்து நடக்கவேண்டும். |
சமயாசமயம் 2 | camayācamayam, n. <> Redupl. of சமயம். Proper time; உரிய காலம். சமயாசமயத்துக்கு உதவவேண்டும். Colloq. |
சமயாசாரம் | camayācāram, n. <> samaya +ā-cāra. Systematised religious practice, ritual; மதத்திற்குரிய ஒழுக்கம். |
சமயாசாரியர் | camayācāriyar, n. <> id. +ā-cārya. (šaiva.) Great men who established a religion, especially the four saivaite saints viz., Appar, Campantar, Cuntarar and Māṇikkavācakar; சைவமதத்தை நிலைநாட்டின் அப்பர், சம்பந்தர், சுந்தரர். மாணிக்கவாசகர் என்ற சிவனடியார். |
சமயாதீதம் | camayātītam, n. <> id. + atīta. The supreme being, as transcending all religions; [சமயங்கடந்தது] பரம்பொருள். சமயாதீதப் பழம்பொருளை. (தாயு. காடுங்கரையும்.2). |
சமயி | camayi, n. <> samayī nom. sing. of samayin. 1. Religionist, sectarian; மதஸ்தன். தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும் (மணி. 28, 86). 2. (šaiva.) One who has been initiated by the camaya-tīṭcai; |
சமயோசிதம் | camayōcita, n. <> samaya+ucita. Suitability to occasion; சமயத்துக்குப் பொருத்தம். |
சமர் 1 | camar, n. <> samara. War, battle, fight; போர். (திவா.) |
சமர் 2 - த்தல் | camar-, 11 v. intr. <> சமர். To fight, make war; பொருதல். சமர்க்க வல்லாயேல் (விநாயகபு.74, 249). |
சமர் 3 | camar, n. See சமரம். (யாழ். அக.) . |
சமர்ச்சனம் | camatccaṉam, n. <> sam-arccana. Worshipping, offering obeisance; வழிபடுகை. Loc. |
சமர்த்தம் | camarttam, n. <> smārta. Rites prescribed by the Smrtis; ஸ்மிருதிகளில் விதிக்கப்பெற்ற சடங்கு. சமர்த்தமென்றும் புகழ்ந் தெவரு மேத்துந் தருமம் (கூர்மபு. அழற்கரும. 5). |
சமர்த்தன் | camarttaṉ, n. <> samartha. Clever, capable man; வல்லவன்.சமர்த்தமுரத்து விடுவார் (இரகு. மீட்சி. 23). |
சமர்த்தனம் | camarttaṉam, n. <> samarthana. Justification, reconciliation; பொருந்துமாறு காட்டுகை. |
சமர்த்தாளி | camarttāḷi, n. <> samartha + ஆள்-. See சமர்த்தன். Loc. . |
சமர்த்தி 1 - த்தல் | camartti-, 11 v. tr. <> samarth. To justify and establish, as a theory; பொருந்துமாறு காட்டுதல். |
சமர்த்தி 2 | camartti, n. <> sam-rddhi. Fulness, plenitude; நிறைவு. Colloq. |
சமர்த்தி 3 | camartti, n. <> samartha. 1. Clever, capable woman; வல்லவன். 2. A girl who has attained the age of puberty; |