Word |
English & Tamil Meaning |
---|---|
பாண்டித்தியம் | pāṇṭittiyam n. <>pāṇditya. Scholarship, proficiency; கல்வித்திறம். |
பாண்டிநாடு | pāṇṭi-nāṭu n.<>பாண்டி+. The Pāṇdya country of south India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, one of the 56 See tēcam , q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு. பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச, 2, 118). |
பாண்டிப்பிழுக்கை | pāṇṭi-p-piḻukkai n. A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 12.) |
பாண்டிமண்டலம் | pāṇṭi-maṇṭalam n. <>பாண்டி+. See பாண்டிநாடு. (Insc.) பாண்டி மண்டலசதகம். |
பாண்டிமாங்காய் | pāṇṭi-māṅkāy n. prob. id.+. An inferior variety of mango; மட்டமான மாங்காய்வகை. Nā. |
பாண்டியம் 1 | pāṇṭiyam n. <>id. See பாண்டிநாடு. (W.) . |
பாண்டியம் 2 | pāṇṭiyam n. cf. பாண்டில். 1. Bull; எருது. செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38, 32). 2. Agriculture; ploughing; |
பாண்டியன்மதிவாணனார் | pāṇṭiyaṉmativāṇaṉār n. <>பாண்டியன்+. A Pāṇdya king, author of a dramatic treatise in Tamil; நாடகத்தமிழ்நூல் செய்த ஒரு பாண்டியவரசன். (சிலப். உரைச்சிறப். பக். 10.) |
பாண்டியவீடு | pāṇdiya-vīṭu n. See பாண்டவர்வீடு. . |
பாண்டியன் | pāṇṭiyaṉ n. <>pāṇdya. King of the ancient Pāṇdya country; பாண்டியநாட்டு வேந்தன். (சிலப். 17, 5.) |
பாண்டில் 1 | pāṇṭil n. 1. Circle; வட்டம். (திவா.) பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங்குறு. 310). 2. Bowl of a lamp; 3. Small bowl or cup; 4. A pair of cymbals; 5. Horse-drawn chariot; 6. Two-wheeled cart; 7. Felly of the wheel of a chariot; 8. Circular bedstead or cot; 9. Glass, mirror; 10. Circular piece of hide used in making a shield; 11. Country, territory, 12. Saddle; 13. Bull; 14. Taurus of the zodiac; 15. Stand of a lamp; standard; |
பாண்டில் 2 | pāṇṭil n. <>bhāṇdīra. 1. Siris. See வாகை. (மலை.) 2. Batavian orange. 3. Bamboo. |
பாண்டில்விளக்கு | pāṇṭil-viḷakku n. <>பாண்டில்+. Standard-lamp; கால்விளக்கு. பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் (பதிற்றுப். 47, 6). |
பாண்டிவடம் | pāṇṭi-vaṭam n. <>bhāṇdīra-vaṭa. A place where Krṣṇa grazed his cattle; கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம். பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னையுய்த்திடு மின் (திவ். நாய்க்.12, 7). |
பாண்டிவரி | pāṇṭi-vari n. An ancient tax; முற்காலத்துள்ள வரிவகை. (S. I. I. iv, 79.) |
பாண்டிவேளாளன் | pāṇṭi-vēḷāḷaṉ n. <>பாண்டி+. 1. A sub-sect or the Vēḷāḷa caste in Madura District; மதுரை ஜில்லாவிலுள்ள வேளாளரில் ஒருவகை உட்பிரிவினர். Madu. 2. Vēḷāḷas of the Pāṇdya country, settled in Travancore; |
பாண்டிற்காசு | pāṇṭiṟ-kācu n. <>பாண்டில்+. A piece of jewelry, known as vatta-k-kācu; வட்டக்காசு என்ற ஆபரணவகை (ஐங்குறு. 310.) |
பாண்டு | pāṇṭu n. <>pāṇdu. 1. Whiteness, paleness; வெண்மை. (W.) 2. Jaundice; 3. Anaemia; 4. Dropsy, ascites; 5. Father of the Pāṇdava princes; 6. A common wayside weed. |
பாண்டுக்கல் | pāṇṭu-k-kal n. prob. பண்டு+. Menhir. See பட்டவன்குறி. (M. M. 667.) |