Word |
English & Tamil Meaning |
---|---|
பாண்டுகம் | pāṇṭukam n. <>pāṇdaka. See பாண்டுரம். (யாழ். அக.) . |
பாண்டுகம்பளம் | pāṇṭu-kampaḷam n. <>pāṇdu-kampala. (Buddh.) Indra's throne of marble; இந்திரன் ஆசனம். இந்திரன் பாண்டு கம்பளந் துளக்கியதாதலின் (மணி. 14, 29). |
பாண்டுச்சிலந்தி | pāṇṭu-c-cilanti n. <>பாண்டு+. A spider; சிலந்திவகை. (சீவரட். 353.) |
பாண்டுமைந்தர் | pāṇṭu-maintar n. <>id.+. The Pāṇdavas; பாண்டவர். (திவா.) |
பாண்டுரம் | pāṇṭuram n. <>pāṇdura. (W.) 1. Whiteness, paleness; வெண்மை. 2. Jaundice; |
பாண்டுராகம் | pāṇṭu-rākam n. <>pāṇdu+. Whiteness; வெண்மை. (யாழ். அக.) |
பாண்டுருவன் | pāṇṭuruvaṉ n. <>bhāṇda+rūpa.. Huge person or thing; பெரியவுருவுள்ள-வன்- வள்-து. (J.) |
பாண்டுரேட்சு | pāṇṭurēṭcu n. <>pāṇdura+ikṣu. A kind of white sugar-cane; வெண்கரும்பு. (மூ. அ.) |
பாண்டுரை | pāṇṭurai n. perh. pāṇdurā Trumpet-flower tree. See பாதிரி. (மூ. அ.) . |
பாண்டுரோகம் | pāṇṭu-rōkam n. <>பாண்டு+. A group of diseases, including jaundice, anaemia, dropsy; நோய்வகை. Colloq. |
பாண்டுலா | pāṇṭulā n. perh. pāṇdu-phala. Snake gourd. See புடல். (மலை.) . |
பாண்டுவியாதி | pāṇṭu-viyāti n. <>பாண்டு+. See பாண்டுரோகம். Colloq. . |
பாண்டை | pāṇṭai n. <>பாண்டல். Bad smell, as of rotten fish; துர்நாற்றம். (W.) |
பாண்டைநாறி | pāṇṭai-nāṟi n. <>பாண்டை+. 1. A woman with offensive smell; கெட்ட நாற்றம் வீசுகின்ற பெண். (W.) 2. An angry or peevish person; |
பாண்பாட்டு | pāṇ-pāṭṭu n. <>பாண்+. (Puṟap.) A theme in which bards skilled in lute sing funeral songs in honour of the warriors that fell fighting in a battle-field after slaying the elephants of the enemy; யானையை யெறிந்து போரிற்பட்ட வீரர்க்கு யாழ்வல்ல பாணர் சாப்பண் பாடித் தம்ழுரிமைசெய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 7, 11.) |
பாண்மகன் | pāṇ-makaṇ n. <>பாண்+. Man of the Pāṇar caste; பாணன். பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையின் யாழினம். (மணி. 18, 17). |
பாண்மை | pāṇmai n. <>id. 1. Characteristics of a paṇaṉ; பாணன்தன்மை. (சீவக. 2515, உரை.) 2. Submissiveness; |
பாணகப்பாடி | pāṇaka-p-pāṭi n. <>பாணன்3+அகம்+. The country of the Bāṇās. See வாணசப்பாடி. (Insc.) . |
பாணந்தொடு - த்தல் | pāṇan-toṭu- v. intr. <>பாணம்1+. 1. To discharge arrows; அம்பெய்தல். (W.) 2. To seek to ruin one; 3. To pour out abusive language; to revile; |
பாணபத்திரன் | pāṇapattiraṉ n. <>Bāṇabhadra. A minstrel who was patronised by the Pāṇdya and Cēra kings ; பாண்டியனாலும் சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப்பெற்றவரும் இசைவல்ல பண்மரபினருமாகிய ஒரு பெரியார் பண்டரு விபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான் (திருவிளை விறகு.24). |
பாணம் 1 | pāṇam n. <>bāṇa. 1. Arrow; அம்பு. (பிங்.) 2. Rocket, fireworks; 3. of. கணை3. Long pepper. See திப்பிலி. (தைலவ. தைல.) 4. A species of conehead, 1. sh., Strobilanthes sessilis; 5. A worm. See இராமாயணம். |
பாணம் 2 | pāṇam n. <>bhāṇa. A drama in one act, one of ten rūpakam, q.v.; ரூபகம் பத்தனுள் ஒரு அங்கத்தையுடையதும் கதையைக்கூறுவது மான நாடகவகை (சிலப். 3, பக். 84, அடிக்குறிப்பு.) |
பாணம் 3 | pāṇam n. perh. varṇa. Silk cloth; பூம்பட்டு. (சூடா.) |
பாணம்பழை | pāṇampaḻai n. A shrub. See மேகவண்ணக்குறிஞ்சி. (சங். அக.) . |
பாணர்மாலையர் | pāṇar-mālaiyar n. <>பாண்+. Women of the Pāṇar caste; பாண்குலமகளிர். மாலையங் குழல்சேர் பாணர்மாலையர் (திருவாலவா, 54, 26). |
பாணல் | pāṇal n. Betel leaf; வெற்றிலை. (சங். அக.) |
பாணலி | pāṇali n. <>T. bāṇali. [K. bāṇale.] Frying pan; பொரிக்குஞ் சட்டி. |
பாணலிங்கம் | pāṇa-liṅkam n. <>bāṇa+. A kind of šiva liṅkam, See வாணலிங்கம். (சங். அக.) . |
பாணன் 1 | pāṇaṉ n. <>பாண். [M. pāna.] 1. An ancient class of Tamil bards and minstrels; பாடல்வல்ல ஒரு சாதி. கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91). 2. See பாணான். (W.) |