Word |
English & Tamil Meaning |
---|---|
பாததரிசனம் | pāta-taricaṉam n. <>id.+. 1. Interview with a great person; பெரியோரைத் தரிசிக்கை. (W.) 2. A festival in šiva temples; |
பாததாடனம் | Pāta-tāṭaṉam n. <>id.+. Kicking; காலுதை. |
பாததாமரை | pāṭa-tāmarai n. <>id.+. See பாதகமலம். (W) . |
பாததாரி | pāta-tāri n. <>id.+ dārī. See பாதவெடிப்பு. (யாழ்.அக) . |
பாததிராணம் | pāta-tirāṇam n. <>id.+ trāṇa. See பாதரட்சை (யாழ். அக.) . |
பாததீட்சை | pāṭa-tīṭcai n. <>id.+. A mode of initiation. See திருவடிதிட்சை. |
பாததீர்த்தம் | Pāta-tīrttam. n. <>id.+. Water used in ceremonially washing the feet of a guru, considered sacred; ஆசிரியரின் திருவடிகளைச் சுத்திசெய்த நீர். (W.) |
பாததூளி, | pāta-tūḷi n. <>id.+. Dust of the feet of great persons; பெரியோரின் அடிப்பொடி. ஏத்துவார்க ளுழக்கிய பாததூளிபடுதலால் (திவ். பெரியாழ். 4, 4, 6). |
பாதப்படி | pāta-p-paṭi n. <> id.+. Footstool; அடிவைக்கும் பீடம். |
பாதப்பிரகாரம் | pāta-p-pirakāram n. <>id.+ prahāra. See பாததாடனம். . |
பாதப்பிரட்சாளனம் | pāṭa-p-piraṭcāḷa-ṉam n. <>id.+. Washing the feet; கால்களையலம்புகை. |
பாதபங்கயம் | pāta-paṅkayam n. <>id.+. See பாதகமலம். நின் பாதபங்கயமே தலைக்கணியாய் (திவ்.திருவாய், 9, 2, 2) . |
பாதபங்கயமலை | pāta-paṅkaya-malai n. <>பாதபங்கயம்+. A mountain near Rājagrha in Magadha, believed to retain Buddha's footprint; மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை. பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாத பங்கயமலை யெனும்பெயர்த் தாயது(மணி, 10, 68). |
பாதபதுமம் | pāta-pātumam n. <>பாதம்1¢+. See பாதகமலம். (W.) . |
பாதபம் | pātapam n. <>pāda-pa. See பாதவம். (பிங்.) . |
பாதபரிசம் | pāta-paricam n. <>பாதம்1+. 1. Touching a superior's feet; திருவடிபடுகை. (W.) 2. A mineral poison. |
பாதபற்பு | pāta-paṟpu n. <>id.+ padma. See பாதகமலம். நின்செம்மா பாதபற்புத் தலைசேர்த்து (திவ்.திருவாய், 2,9,1). . |
பாதபன்மம் | pāta-paṉmam n. <>id.+. See பாதகமலம். (W.) . |
பாதபாசம் | pāta-pācam n. <>id.+. A foot-ornament; காலணிவகை. (S. I. I. v, 236.) |
பாதபீடம் | pāta-pīṭam n. <>id+. See பாதபீடிகை, 1. . |
பாதபீடிகை | pāta-pīṭikai n. <>id.+. 1. Pedestal bearing the shape of Buddha's feet; புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம். பாதபீடிகை பணிந்தன ளேத்தி (மணி. 6, 12). 2. Footstool; |
பாதபுஷ்பம் | pāta-puṣpam n. <>id.+. See பாதகாணிக்கை. (S. I.I.ii,431.) . |
பாதபூசை | pāta-pūcai n. <>id.+. Worshipping the feet of a guru or other revered person by washing and adorning them with flowers; குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை. |
பாதபேதரோகம் | pāta-pēta-rōkam n. <>id.+ bhēda+. See பாதவெடிப்பு. (பைஷஜ.279.) . |
பாதம் 1 | pātam. n. <>pāda. 1. Foot, as of a person or animal, one of five karumēntiriyam, q. v.; கருமேந்திரியம் ஐந்தனூள் ஒன்றாகிய கால். பாதக்காப்பினள் பைந்தொடி (சிலப்.14¢, 23). 2. Leg, support, as of an article of furniture; 3. Step, foot-print; 4. Foot-measure; 5. (Pros.) Unit of mertrical measure; line of stanza; 6. Base, as of mountain a tree; 7. Quarter; 8. Quadrant of a circle; 9. A fourth part of the duration of nakṣatra; 10. (šaiva.) Path of salvation, of which there are four, viz., cariyā-pātam, kiriyā-pātam, yōka-pātam, āṉa-pātam; 11. Presence of a great person; |
பாதம் 2 | pātam n. <>pāthas. Water; நீர். (பிங்.) |
பாதம் 3 | pātam n. <>pāta. 1. Imprint of God's grace; சத்திநிபாதம். பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் (திருமந்.1437). 2. Moon's ascending node; 3. Planets' node; 4. (Astron) A kind of yōkam, |