Word |
English & Tamil Meaning |
---|---|
பாயக்கட்டு | pāya-k-kaṭṭu n. Village headman; கிராமாதிகாரி. பாயக்கட்டு பல பட்டையிற் சோலையப்பப் பிள்ளையோ (விறலிவிடு.) |
பாயகாரி | pāya-kāri n. <>U. pā-a-kāri. Temporary cultivator, one who cultivates the land of another for a stipulated term, obtaining a certain share of the crop; குறிப்பிட்ட காலம் வரை குடிவாரத்துக்கு உழுபவன் (C. G.) |
பாயசம் | pāyacam n. <>pāyasa. 1. A semi-liquid food prepared of milk, rice, sago, etc., mixed with sugar or jaggery; பால் அரிசி சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது. 2. A plant. See பாற்சொற்றி. (சூடா.) |
பாயதானம் | pāyatāṉam n. <>pāyasānna. Rice boiled in milk; பாலன்னம். பொற்புறு பாயதானம் புளிப்புறு ததியின் போனம் (சிவதரு.பரம. 37) |
பாயம் | pāyam n. prob. பாய்-. 1. Sexual desire; புணர்ச்சிவிருப்பம். பிணவொடு பாயம் போகாது (பெரும்பாண். 342). 2. That which is pleasing to the mind; |
பாயல் 1 | pāyal n. <>பாய்-. 1. Bedding; மக்கட்படுக்கை. (பிங்.) 2. Sleep; |
பாயல் 2 | pāyal n. <>பா 2-. [T. pāya.] Half; பாதி. (பிங்.) |
பாயல்கொள்(ளு) - தல் | pāyal-koḷ. v. intr. <>பாயல்1+. To sleep; உறங்குதல். பழவிறன் மூதூர் பாயல்கொண்டுநாள் (மணி. 7, 63). |
பாயலுணர்த்து - தல் | pāyal-uṇarttu-. v. tr. id.+. To awaken, rouse from sleep; துயிலெழுப்புதல். (ஐங்குறு.200, உரை.) |
பாயாசம் | pāyacam n. Corr. of பாயசம். Colloq. . |
பாயியாசாரம் | pāyiyācāram n. A kind of agreement in cultivation (R. F.); விவசாய நிபந்தனை வகை. |
பாயிரம் | pāyiram n. perh. பாசுரம். 1. Preface, introduction, preamble, prologue; முகவுரை. (நன். 1) செறுமனத்தார் பாயிரங் கூறி (பழமொ. 165). 2. Synopsis, epitome; 3. Origin; history; |
பாயிழு - த்தல் | pāy-iḻu- v. intr. <>பாய்2+. See பாய்வலி-. (W.) Naut. . |
பாயிறக்கு - தல் | pāy-iṟakku- v. intr. <>id.+. To let down sail; கப்பற்பாயை மடக்குதல். |
பாயு | pāyu n. <>pāyu. Anus, fundament; குதம். பதங்கை பாயு வுபத்தமென்று (ஞானா. 9, 17). |
பாயுடுக்கையர் | pāy-uṭukkaiyar n. <>பாய்2+. A class of Jaina ascetics, clad in mats; பாயை உடுத்துக்கொள்ளும் சமணத்துறவி வகையினர். (தேவா.) |
பாயுரு | pāyuru n. <>pāyu. See பாயு. (பிங்.) . |
பாயெடு - த்தல் | pāy-eṭu- v. intr. <>பாய்2+. See பாய்வலி-. (W.) . |
பார் 1 - த்தல் | pār- 11. v. tr. [K. pāru M. pārkka.] 1. To see, look at, view, notice, observce; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65). 2. To examine, inspect, search into, scrutinise; 3. To know; 4. To look for, expect; 5. To desire, long for; 6. To search for, seek; 7. To worship; 8. To estimate, value; 9. To heed, pay attention to; 10. To look after, take care of, manage, superintend; 11. To peruse, look through, revise; 12. To treat, administer medicine; 13. To charm away by incantations exorcise; 14. To intend, design, attempt, purpose, aim at; 15. To look at with compassion; |
பார் 2 | pār n. <>பர- 1. Expanse; பரப்பு. தேர்ப்பார். (சூடா.) 2. Central platform of a chariot; 3. Long bar of the body of a cart; 4. Earth; 5. Earth, as an element; 6. Land, country; 7. Hard ground; 8. Rock, rocky stratum, shelf of rock; 9. Bank, border, ridge; 10. Pearl bank; 11. Group of parterrers; 12. Stratum, layer, bed; 13. Obstruction, obstacle; 14. The fourth nakṣatra. See உரோகிணி. (திவா.) |