Word |
English & Tamil Meaning |
|---|---|
| பார் 3 | pār n. <>பரு-மை. Bulk, size; பருமை. (சீவக. 224.) |
| பார் 4 | pār n. <>பார்ப்பான். (அக. நி.) 1. [T . pārudu.] Brahman; மறையோன். 2. Buddha; |
| பார் 5 | pār n. cf. மாறு. Turn, time; தடவை. ஒருபார் வந்துவிட்டுப்போ. (J.) |
| பார்க்க | pārkka part. <>பார்-. A participle of comparison meaning `than`; உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல். அவைகளிலும் பார்க்கப் பிரீதியிகும்படி (கோயிற்பு. திருவிழா. 22, உரை). |
| பார்க்கட்டு - தல் | pār-k-kaṭṭu- v. intr. <>பார்2+. To put up ridges enclosing fields for dry cultivation; புன்செய்க்கு வரம்பிடுதல். (W.) |
| பார்க்கவம் | pārkkavam n. <>bhārgava. A secondary Purāna, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. |
| பார்க்கவன் | pārkkavaṉ n. <>Bhārgava. 1. Lit., a descendant of Bhrgu. [பிருகுவின் வழித் தோன்றல்]. . 2. Venus; 3. Parašurāma; |
| பார்க்கவஸ்பத்தியம் | pārkkavaspattiyam n. <>bārhaspatya. The 11th of the 15 divisions of night; இரவின் 15 முகூர்த்தங்களுள் பதினொன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.) |
| பார்க்கவி 1 | pārkkavi n. <>Bhārgavī. 1. Lakṣmī; இலக்குமி. பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென (மனோன். iii, சிவகாமி. 49). 2. Pārvatī; 3. Small chiretta. See வெள்ளறுகு. (மலை.) |
| பார்க்கவி 2 | pārkkavi n. <>bhārgī. Beetlekiller. See சிறுதேக்கு, 2. (மலை). . |
| பார்க்கிலும் | pārkkilum part. See பார்க்க. Colloq. . |
| பார்க்குச்சு | pārkkuccu n. <>E. Barracks, a line of houses built for soldiers; பாட்டாளச்சேவகர்கள் குடியிருக்கக் கட்டிய சிறுவீட்டுவரிசை.Colloq. |
| பார்க்குருமாடு | pārkkuru-māṭu n. Bargur cattle, used for ploughing; உழவுக்குபயோகப்படும் மாட்டுவகை (G. Tp. D. I, 20.) |
| பார்கஸ்பத்தியமும் | pārkaspattiyam n. See பார்க்கவஸ்பத்தியம். (சங்.அக.) . |
| பார்ச்சட்டம் | pār-c-caṭṭam n. <>பார்2+. See பார்2, 3. . |
| பார்சவம் 1 | pārcavam n. <>pāršva. (யாழ். அக.) See பார்சுவம், 2, 4. . |
| பார்சவம் 2 | pārcavam n. perh. பரிசு1. Reward; பரிசு. (யாழ்.அக.) |
| பார்சி | pārci n. <>U. pārsī. 1. Parsee; பாரசீக சாதியான். 2. (Mus.) A persian tune; 3. Persia; |
| பார்சிக்கஞ்சாங்கோரை | pārci-k-kacāṅ-kōrai n. <>பார்சி+. Persian tulsi, s.sh., Melissa officinalis; செடிவகை. |
| பார்சிவாதுமை | pārci-vātumai n. <>id.+. Common almond. See வாதுமை. (L.) . |
| பார்சுவகிரகணம் | pārcuva-kirakaṇam n. <>pāršva+. Partial eclipse; குறைக்கிரகணம். (பஞ்.) |
| பார்சுவம் | pārcuvam n. <>pāršva. (யாழ். அக.) 1. Side of the body; விலாப்பக்கம். 2. Side; 3. Support; 4. Circle; |
| பார்சுவர் | pārcuvar n. <>Pāršva. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் (திருக்கலம். காப்பு, உரை.) |
| பார்சுவவாயு | pārcuva-vāyu n. <>pāršva. Paralysis; பக்கவாதம். |
| பார்த்தசாரதி | pārtta-cārathi n. <>Pārtha-sārathi. Krṣṇa, Arjuna`s charioteer; [அர்ச்சுனன் தேர்ப்பாகன்] கண்ணபிரான். Colloq. |
| பார்த்தன் | pārttaṉ n. <>Pārtha. Arjuna; அருச்சுனன். (பாரத.அருச்சுனன்றீர்.44) |
| பார்த்திபன் | pārttipaṉ n. <>pārthiva. See பார்த்திவன். பார்த்திப குமரன் சேர்ந்தான் (சீவக. 1683). . |
| பார்த்திவ | pārttiva n. <>id. The 19th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பத்தொன்பதாவது. |
| பார்த்திவம் | pārttivam n. <>id. 1. That which pertains to the earth; பூமிசம்பந்தமானது. 2. Income derived from lands; 3. Earth; |
