Word |
English & Tamil Meaning |
|---|---|
| பால்பிடிபதம் | pāl-piṭi-patam n.<>பால்பிடி-. Stage of grain being in the milk ; பயிர்க்கதிரிற் பால் உண்டாந் தருணம் . |
| பால்பொழி - தல் | pāl-poḻi- v. intr. <>பால்+. To be prosperous; to overflow with milk and honey ; செழிப்பாயிருத்தல் அந்த நடு பால் பொழிகிறது . |
| பால்மடி | pāl-maṭi n. <>id.+. Udder teeming with milk ; நிரம்பக் கறக்கக்கூடிய கால் நடைகளின் மடி . |
| பால்மடியழற்சி | pāl-maṭi-y-aḻaṟci n. <>பால்மடி. Diseased condition of the udders garget ; பசு முதலியவற்றின் முலைக்காம்பு வெடித்திருக்கை . (M.L.) |
| பால்மணம் | pāl-maṇam n. <>பால்1+. 1. Smell of milk; பாலின் வாசனை. 2. Smell of rice-gruel at a proper stage of boiling; 3. Smell of milk of a suckling child; 4. Odour emitted from fully developed pustules of smallpox ; |
| பால்மர - த்தல் | pāl-mara- v. intr. <>id.+. See பால்மறு-. . |
| பால்மரம் | pāl-maram n. <>id.+. Sappy tree ; பாலுள்ள மரம். (W.) |
| பால்மற - த்தல் | pāl-maṟa- v. intr. <>id.+. To be weaned ; குழந்தை பால்குடிப்பதைத் தவிர்தல். |
| பால்மறு - த்தல் | pāl-maṟu- v. intr. <>id.+. 1. See பால்மற-. . 2. To get dry of milk ; |
| பால்மறை | pāl-maṟai n. A defect in cattle ; தொழுமறை. (மாட்டுவா.19) . |
| பால்மாறிக்கை | pāl-māṟikkai n. <>பால்மாறு2 + Idleness, sluggishness ; சோம்பியிருக்கை (யாழ்.அக.) |
| பால்மாறு 1 - தல் | pāl-māṟu- v. intr. <>பால்1+. Loc. 1. To become dry of milk ; பால்வற்றிப்போதல். 2. To be weaned ; |
| பால்மாறு 2 - தல் | pālmāṟu- v. intr. <>T. pālumālu. 1. To be lazy ; சோம்பியிருத்தல். எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும், உடுக்கைக்குப் பால்மாறிய தாசியும் கெடுவர். 2. To fail, backslide ; |
| பால்மீன் | pāl-mīṉ n. <>பால்1+. Milkfish, brilliant glossy blue, attaining 3 ft. in length, chanous salmoneus ; நீல நிறமுள்ளதும் மூன்றுஅடி வளர்வதுமான வெள்ளைமீன்வகை . (W.) |
| பால்முட்டான் | pāl-muṭṭāṉ n. prob. id.+. A kind of fish ; மீன்வகை . (W.) |
| பால்முடங்கி | pāl-muṭaṅki n. prob. id.+. Panicled bindweed ; See நிலப்பூசனி. (யாழ்.அக) |
| பால்மூத்திரம் | pāl-mūttiram n. <>id.+. Urine of a morbid condition, chyluria ; வெள்ளையாக இறங்கும் மூத்திரம். (M.L.) |
| பால்மேனியாள் | pāl-mēṉiyāḷ n. <>id.+. Sarasvati, milk-white in colour ; சரசுவதி . |
| பால்மோடிக்காய் | pāl-mōṭi-k-kāy n. See பால்முடங்கி. (W.) . |
| பால்மோதகம் | pāl-mōtakam n. <>பால்1+. A kind of confectionery boiled in milk ; பாலில் வெந்த மோதகம்.(இராசவைத்.161) . |
| பால்யன் | pālyaṉ n. See பாலன் (சி.சி.2, 95, சுப்பிர) . . |
| பால்வடி | pāl-vaṭi n. <>பால்1+. A kind of perforated basket used for straining milk ; பாலைவடிகட்டுதற்குரிய பாத்திரம் . (J.) |
| பால்வடிதல் | pāl-vaṭital n. <>id.+. Blooming appearance of youth ; இளமைச்செவ்வித்தோற்றம். Colloq. |
| பால்வடிந்தான் | pāl-vaṭintāṉ n. <>id.+. Indian guttapercha ; See காட்டிருப்பை, 2 . (L.) |
| பால்வடை | pāl-vaṭai n. <>id.+. A kind of cake boiled in milk ; பாலில் வேகவைத்த வடைப்பணிகாரம். (இராசவைத்.139) . |
| பால்வண்ணன் | pāl-vaṇṇaṉ n. <>id.+. 1. Siva; சிவன். 2. Balarāma ; Lit., one who is white in colour. |
| பால்வரைகிளவி | pāl-varai-kiḷavi n. <>பால்2+ வரை. Word denoting a fraction or portion ; எண் அளவு முதலியவற்றின் பகுதியைக் குறிக்குஞ் சொல். (தொல்.எழுத்.165) . |
| பால்வரைதெய்வம் | pāl-varai-teyvam n. <>id.+ id. Deity that assorts evil and good karma ; நல்வினை திவினைகளை வகுக்குந் தெய்வம் பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல்.சொல்.58) . |
| பால்வழு | pāl-vaḻu n. <>id.+. Incorrect use of one Pāl for another ; ஒருபாற்சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம். (தொல்.சொல்.11, சேனா) . |
| பால்வழுவமைதி | pāl-vaḻu-v-amaiti n. <> பால்வழு+. Sanction by usage of the incorrect use of Pāl ; பால்வழுவை ஆமென்று அமைத்துகொள்வது (நன்.379, உரை) . |
