Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாலத்தாபனம் | pāla-t-tāpaṉam n. <>bāla + sbhāpana. See பாலாலயம். (சங்.அக) . . |
| பாலத்தூண் | pāla-t-tūṇ n.<>பாலம்4+. Pier of a bridge ; ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கடை. (C.E.M.) |
| பாலதனயம் | pālataṉayam n. <>bālatanayā. Ceylon ebony ; See கருங்காலி 2 (மூ.அ.). |
| பாலநக்ஷத்திரம் | pāla-nakṣattiram n. <>bālā+. Comet ; வால்நட்சத்திரம் (C.G.) |
| பாலபாடம் | pāla-pāṭam n. <>bāla-pāṭha. See பாலசிட்சை, 2 . . |
| பாலபோதம் | pāla-pōtam n. <>bāla+bōdha. See பாலசிட்சை. 2. . |
| பாலம் 1 | pālam n. 1. cf.Pāl. Earth ; பூமி. (பிங்.) பவப்பால மன்னவரை (உபதேசகா. சிவபுண்ணிய. 222). 2. Branch of a tree ; 3. Cuscus plant ; |
| பாலம் 2 | pālam n. <>bhāla. Forehead ; நெற்றி. (பிங்) தீவிழிப் பாலமும் (விநாயகபு.11, 11) . |
| பாலம் 3 | pālam n. <>bhiṇdi-pāla. A weapon ; மழு.(திவா) . |
| பாலம் 4 | pālam n. <>U. pāla 1. Bridge; வாராவதி. நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (இராமநா.கிஷ்.12). 2. Dam, embankment, projecting wharf, jetty ; |
| பாலம்மை | pāl-ammai n. <>பால்1+. Small-pox ; வைசூரி (M.L.) |
| பாலமணி | pāla-maṇi n. <>id.+. 1. Shell beads; அக்குமணி. (W.) 2. White glass beads, opp. to kīraimaṇi ; |
| பாலமணிக்கோவை | pāla-maṇi-k-kōvai n. <>பாலமணி+. String of shell beads, put on children as an amulet ; குழந்தைகளின் கழுத்தணி வகை. (W.) |
| பாலமிர்தம் | pāl-amirtam n. <>பால்1+. See பாலடிசில் ஆசிலடி பாலமிர்தந் சிறியவயின்று (சீவக.2033) . |
| பாலமுடாங்கி | pālamuṭāṅki n. Stinking swallow wort ; வேலிப்பருத்தி. (மலை.) |
| பாலமை | pālamai n. <>பாலன்1. Childish innocence ; அறியாமை. பாலமை யுடையராகிப் படருறப் படுவதென்னே (உபதேசக. சிவபுண்ணிய .339) . |
| பாலர் | pālar n. cf. go-pāla. Inhabitants of pastoral tracts, herdsmen, shepherds ; முல்லை நிலமக்கள். (பிங்) . |
| பாலரீதி | pāla-rīti n. <>bāla+. Childishness ; குழந்தைத் தன்மை . |
| பாலல¦லை | pāla-līlai n. <>id.+. 1. Play of children ; குழந்தைவிளையாட்டு. 2. Youthful sport ; |
| பாலலோசனன் | pāla-lōcaṉaṉ n. <>bhāla+. šiva, having an eye on His forehead ; (நெற்றிக்கண்ணன்) சிவன். பாலலோசனற்கெனத் திருவிழாவுறப் பணிப்பார் (உபதேசகா.சிவபுண்ணி.5) . |
| பாலவம் | pālavam n. <>bālava. (Astrol.) A division of time, one of eleven karaṇam , q.v. ; கரணம் பதினொன்றனுள் ஒன்று . |
| பாலவரை | pāl-avarai n. <>பால்1+. 1. A species of Egyptian bean; அவரைவகை. (W.) 2. Country bea, Dolichos lablab; |
| பாலவன் | pālavaṉ n. <>id.+. šiva in his milk-white manifestation ; பால்வண்ணமான சிவன். பாலினி பாலவன் பாகம தாகுமே (திருமந்.1216) . |
| பாலவி | pāl-avi n. <>id.+. See பாலடிசில். பாலவியும் பூவும்புகையும் (சீவக.1045) . |
| பாலவிலோசனன் | pāla-vilōcaṉaṉ n. <>bhāla+vilōcana. See பாலலோசனன். பாலவிலோசனர் பாதம் (உபதேசகா.சிவநாம.133) . |
| பாலவோரக்கட்டை | pāla-v-ōra-k-kaṭṭai n. <>பாலம்4+ஓரம்+. Abutment of a bridge ; பாலத்தின் இருகரைகளிலுமுள்ள பக்கச்சுவர். (C.E.M.) |
| பாலறுகுகுத்துதல் | pāla-aṟuku-kuttutal n. <>பால்1+அறுகு+. A form of benediction in a marriage ceremony ; விவாகச் சடங்குவகை . Nā. |
| பாலன் 1 | pālaṉ n. <>bāla. See பாலகன்2. பாலனாய் விருத்தனாகி (தேவா.8, 10) . . |
| பாலன் 2 | pālaṉ n. <>pāla. Protector, guardian, used in compounds ; காப்போன். பூபாலன், கோபாலன் . |
| பாலன்சம்பா | pālaṉ-campā n. <>பால்1+. Milk-white Campā paddy ; வெள்ளைச்சம்பா . Loc. |
| பாலனம் | pālaṉam n. <>pālana. Protection, defence ; பாதுகாப்பு. என் பாலனத்துக்குன்பாலனம் வேண்டுங்காண் (தனிப்பா, i, 344, 61) . |
| பாலனன் | pālaṉaṉ n. <>pālaṇa. See பாலகன். (யாழ்.அக) . |
