Word |
English & Tamil Meaning |
|---|---|
| பால்வழுவமைப்பு | pāl-vaḻu-v-amaippu n. <>id.+. See பால்வழுவமைதி. (நன்.380, உரை.) . |
| பால்வள்ளி | pāl-vaḷḷi n. prob. பால்1. [M. pālvaḷḷi.] Slender fruited viper-dogbane, m.cl., ichnocarpus fruteaseans ; கொடிவகை. |
| பால்வன்னத்தி | pāl-vaṉṉatti n. <>id.+. Consort of Siva ; சிவசத்தி. நாரணியாம் பால்வன்னத்தி (திருமந். 1046.) |
| பால்வாய்க்குழவி | pāl-vāy-k-kuḻavi n. <>id.+. Child born with silver spoon in its mouth ; அதிருஷ்டசாலியான குழந்தை. Loc. |
| பால்வார்த்தல் | pāl-vārttal n. <>id.+ வார். The ceremony of pouring milk in serpent holes and ant-hills, with a view to get the blessings of the serpent-deity ; நாகதெய்வத்தின் அருளைப்பெறப் பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு. Colloq. |
| பால்வார்த்துக்கழுவு - தல் | pāl-vārttu-k-kaḻuvu- v. tr. <>id.+ id. To lose for ever, part with ; அடியோடு இழந்துவிடுதல். Loc. |
| பால்வீதிமண்டலம் | pāl-vīti-maṇṭalam n. <>id.+ வீதி+. Milky way, via lactea ; வானத்தின் ஒருபுறமாக நீளத்தோன்றும் நட்சத்திரத் திரளின் ஒளி. (W.) |
| பால்வெடி - த்தல் | pāl-veṭi- v. intr. <>id.+. See பால்சிதறு-. பால்வெடிபதம். (W.) . |
| பால்வெடிபதம் | pāl-veṭi-patam n. <>பால்வெடி+. A stage in the growth of grain when it is in the milk ; தானியமணியிற் பால் நிறைத்து முதிரும் நிலை. (W.) |
| பால்வெண்டை | pāl-veṇṭai n. <>பால்1+. Musk mallow, abelmoschus ; வெண்டைவகை. Madr. |
| பால்வெள்ளி | pāl-veḷḷi n. <>id.+. Pure silver ; சொக்கக் கட்டி வெள்ளி. Loc. |
| பால்வை - த்தல் | pāl-vai- v. intr. <>id.+. 1. To vaccinate, inoculate ; அம்மைகுத்துதல். (W.) 2. See பால்பிடி. Loc. |
| பாலக்கண்ணாடி | pāla-k-kaṇṇāṭi n. <>பாலன்1+. Spectacles adapted to young eyes ; சிறுவர்க்கு அமைத்த மூக்குக்கண்ணாடி . (W.) |
| பாலக்கிரகதோஷம் | pāla-k-kiraka-tōṣam n. <>bāla+graha+. See பாலக்கிரகாரிட்டம். Loc. . |
| பாலக்கிரகாரிட்டம் | pāla-k-kirakāriṭṭam n. <>id.+ id. 1. Frequent sickness of children believed to be due to the malign influence of planets; கிரகங்களின் தீயபார்வையால் குழந்தை கட்கு உண்டாம் பீடை. (சீவக. 306, உரை) 2. Inflammatory diarrhoea of infants; |
| பாலக்கிராணி | pāla-k-kirāṇi n. <>id.+. A kind of disease ; நோய்வகை. (இராசவைத். 159). |
| பாலகம் 1 | pālakam n. prob. pālaṇka. Arabian costum ; See வெண்கோஷ்டம். (மலை.) |
| பாலகம் 2 | pālakam n. cf. palala. Sesame ; See எள். (தைலவ. தைல.) |
| பாலகரை | pāla-karai n. perh. bāla+hara. Infantile convulsions ; குழந்தை யிசிவு. (M.L.) |
| பாலகன் 1 | pālakaṉ n. <>pālaka Protector, guardian ; காப்போன். (W.) |
| பாலகன் 2 | pālakaṉ n. <>bālaka. 1. Infant ; குழந்தை. பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1, 5, 7). 2. Son; |
| பாலகாப்பியம் | pālakāppiyam n. <>Pāla-kāpya. A veterinary treatise on elephants diseases by Pālakāppiyar ; பாலகாப்பியர் செய்த யானைவைத்திய நூல். பாலகாப்பிய நூறன்னால் வணக்கினான் (இராகு. மாலை. 94). |
| பாலகாப்பியர் | pālakāppiyar n. <>id.+. A sage ; ஒரு முனிவர். |
| பாலசந்திரன் | pāla-cantiraṉ n. <>bāla+. Young or waxing moon, crescent moon ; பிறைச்சந்திரன். (C. G.) |
| பாலசிட்சை | pāla-ciṭcai n. <>id.+. 1. Teaching of children; குழந்தைகளுக்குப் போதிக்கை. Colloq. 2. A primer for infants ; |
| பாலசூரியன் | pāla-cūriyaṉ n. <>id. Morning sun ; உதய சூரியன். |
| பாலசோஷரோகம் | pāla-cōṣa-rōkam n. <>bāla+sōṣa A wasting disease of childhood, tabes mesenterica ; கணைநோய்வகை. (பைஷஜ. 209.) |
| பாலடி | pāl-aṭi n. <>பால்1+அடு. See பாலடி சில். (இலக். அக.) . |
| பாலடிசில் | pāl-aṭicil n. <>id.+. Rice cooked in milk ; பாலில் அட்ட சோறு. இன்பாலடிசிற் கிவர்கின்றகைப்பேடி (சீவக. 443). |
| பாலடை 1 | pāl-aṭai n. <>id.+அடு. Conchshell or any metallic imitation of it for feeding infants ; குழந்தைகட்குப் பாலூட்டுஞ் சங்கு. |
| பாலடை 2 | pāl-aṭai n. <>id.+. Pointedleaved tick-trefoil ; See சித்திரப்பாலடை. (மலை.) |
