| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பாவசங்கீர்த்தனம் | pāva-caṅkirttaṉam n. <>id.+. Confession of sin; தன் பாவங்களைக் குருவிடத்திற் சொல்லுகை R. C. (W.) | 
| பாவசங்கீர்த்தனை | pāva-caṅkirttaṉai n. <>id.+. See பாவசங்கீர்த்தனம். (W.) . | 
| பாவசன்மம் | pāva-caṉmam n. <>id.+. Sinful birth; பாவமுள்ள பிறவி.( W.) | 
| பாவசுத்தி 1 | pāva-cutti n. <>id.+. Removal if sin; பாவம் நீங்குகை. | 
| பாவசுத்தி 2 | pāva-cutti. n. <>bhāva+. Purity of heart; மனத்தூய்மை. (கோயிலொ.44) | 
| பாவசேடம் | pava-cēṭam n. <>pāpa+. 1. Remains of sin attaching to holy persons ; பரிசுத்த புருஷர்களிடத்து எஞ்சியிருக்குந் தீவினை. 2. Demerit of soul remaining at the close of a term of existence to be exhausted in future births; | 
| பாவட்சயம் | pāvaṭcayam n. <>id.+kṣaya. Exhaustion of the accumulated demerit or sin attaching to the soul; பாவநிவர்த்தி. (W.) | 
| பாவட்டா | pāvaṭṭā n. <>U. bāotā. Flag; கொடி. (W.) | 
| பாவட்டை | pāvaṭṭai n. [T. pāpaṭa K. pāvaṭe M. pāvaṭṭa.] 1. Pavetta, l.sh., Pavetta indica; செடிவகை. (பதார்த்த. 534.) 2. Common bottle flower, s. tr., Webera corymbosa; 3. Malabar-nut. See ஆடாதோடை. (யாழ். அக.) | 
| பாவட்டைச்சக்களத்தி | pāvaṭṭai-c-cakkaḷatti n. <>பாவட்டை+. A shrub resembling the pāvaṭṭai; பாவட்டைபோன்ற ஒருவகைச்செடி. (யாழ். அக.) | 
| பாவடி | pāvaṭi n. <>பாவு-+அடி. Stirrup ; அங்கவடி. பாவடியிட் டேறுங் கடும்பரியும் (பணவிடு.163). | 
| பாவண்ணம் | pā-vaṇṇam n. <>பா4+. (Pros.) A rhythm specially adapted for nūṟ-pā; நூற்பாவுக்குரிய சந்தம். (தொல்.பொ. 526.) | 
| பாவத்து | pāvattu n. <>U. bābat. Article, affair, item of account; விஷயம். | 
| பாவதி | pāvati n. <>U. pāoti. Receipt for money paid, acknowledgment; ரசீது. (c. g.) | 
| பாவநாசம் | pāva-nācam n. <>pāpa+nāšā. 1. Removal of sin, absolution; பாவத்தை நீக்குகை. பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57). 2. Sacred place or water which removes or absolves from sin; | 
| பாவநிவாரணம் | pāva-nivāraṇam n. <>id.+. See பாவநாசம், 1. (யாழ். அக.) . | 
| பாவநிவிர்த்தி | pāva-nivirtti n. <>id.+. See பாவநாசம், 1. (யாழ். அக.) . | 
| பாவப்பிரயோகம் | pāva-p-pirayōkam n. <>bhāvē-prayōga. See பாவேப்பிரயோகம். (பி. வி. 45, உரை.) . | 
| பாவபரிகாரம் | pāva-parikāram n. <>pāpa+. Expiation of sin; பிராயச்சித்தம் | 
| பாவபாணம் | pāva-pāṇam n. <>bhāva+bāṇa. Excited state of mind, considered as cupid's arrows inducing sexual love, dist. fr. tiraviya-pāṇam; மனோபாவங்களாகிய மன்மதபாணங்கள். (சீவக. 706, உரை.) | 
| பாவபுண்ணியம் | pāva-puṇṇiyam n. <>பாவம்1+. Demerits and merits; நல்வினை தீவினைகள். | 
| பாவம் 1 | pāvam <>pāpa. n. 1. Accumulated result of sinful actions; தீவினைப்பயன். பகைபாவ மச்சம் பழி (குறள், 146). 2. Sinful act, crime; 3. Hell; | 
| பாவம் 2 | pāvam n. <>bhāva. 1. Contemplation, meditation; தியானம். (சூடா.) 2. Idea, opinion, conception; 3. State or condition of existence; 4. (Nāṭya.) Gesture expressive of emotions; 5. Established order; 6. Sport; | 
| பாவம்பழி | pāvam-paḻi n. <>பாவம்1+. Heinous sin; கொடுந் தீச்செயல். | 
| பாவமன்னிப்பு | pāva-mannippu n. <>id.+. Forgiveness of sins; பாவத்தைப் பொறுத்து விடுகை. Chr. | 
| பாவமூர்த்தி | pāva-mūrtti n. <>id.+. Hunter; வேடன். (சூடா.) | 
| பாவயோனி | pāva-yōṉi n. <>id.+. Sinful birth; பாவப்பிறப்பு. (W.) | 
| பாவர் | pāvar n. <>id. Sinners; பாவிகள். பாவர் சென்றல்கு நரகம் (திருக்கோ. 337). | 
| பாவரசம் | pāva-racam n. <>bhāva+. 1. Beauty of an idea; கருத்துநயம். 2. (Nāṭya.) Aesthetic excellence of gestures; | 
