Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாவாபாவம் | pāvāpāvam n. <>bhāvābhāva. Existence and non-existence; உண்மையும் இன்மையும். |
| பாவாற்றி | pā-v-āṟṟi n. <>பா4+ஆற்று-. Weaver's brush; நெய்வோர் குச்சு. (சீவக.615, 1153, உரை.) |
| பாவாற்று - தல் | pā-v-āṟṟu- v. tr. <>id.+. To make the warp ready for the loom; நெசவு பாவைத் தறிக்குச் சித்தஞ்செய்தல். |
| பாவி - த்தல் | pāvi- 11.v. tr. <>bhāvi. 1. To think, conceive; எண்ணுதல். 2. To contemplate, meditate; 3. To imagine fancy; |
| பாவி 1 | pāvi n. <>pāpin. Sinner; தீமையாளன். அழுக்கா றெனவொரு பாவி (குறள். 168) . |
| பாவி 2 | pāvi n. <>bhāvin. That which must happen; வரக்கூடியது. பர்வியை வெல்லும் பரிசில்லை (திருக்கோ. 349) . |
| பாவி 3 | pāvi n. cf. அப்பாவி. (J.) 1. In-offensive, harmless, good-natured person or animal; சாது. 2. Person of weak intellect; |
| பாவிக்குணம் | pāvi-kuṉam n. <>பாவி4+. Harmless disposition தீமையின்மை. (J.) |
| பாவிகம் | pāvikam n. <>bhāvika. The basic idea running through a poem; தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு. (தண்டி. 89). |
| பாவிட்டன் | pāviṭṭaṉ n. See பாபிஷ்டன், பாவிட்டன் மேலோர் கோபம் பணித்திலா மனத்தினார் (மேருமந். 745). . |
| பாவித்தனம் | pāvi-t-taṉam n. <>பாவி4+. See பாவிக்குணம். (J.) . |
| பாவியம் | pāviyam n. <>bhāvya. 1. That which is conceivable பாவிக்கத்தக்கது. 2. Fitness; worthiness; |
| பாவியர் | pāviyar n. <>பாவியம். Those who have opinions or ideas; குறிப்புடையவர். வில்லிகைப்போதின் விரும்பாவரும் பாவியர்கள் (திருக்கோ. 364). |
| பாவிரி | pāviri n. [T. pāvili.] Creeping purslane; See பசிரி. (பிங்.) . |
| பாவிரிமண்டபம் | pā-viri-maṇṭapam n. <>பா4+விரி-+. Academy; சங்கமண்டபம். தெய்வப்பாவிரி மண்டபம் (திருவாலவா. 19, 8, ). |
| பாவிலி | pāvili n. <>T. bāvilī. A kind of ear-ornament. See கத்திரிபாவிலி. . |
| பாவிலேவார் - த்தல் | pāvilē-vār- v. intr. <>பா4+. To interweave dyed with white yarn; வெண்ணூலில் சாயநூல் சேர்த்து நெய்தல். |
| பாவினம் | pā-v-iṉam n. <>id.+. (Pros.) Sub-division of verse, of which there are three kinds, viz., tāḷicai, tucai, viruttam; தாழிசை, துறை, விருத்தம் என்ற முப்பகுதியான பாவின்வகை. |
| பாவு - தல் | pāvu- 5 v. intr. 1. To extend; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 2. To be diffused; to pervade; 3. To spread, as creepers on the ground; to ramify, as family connections; 4. To touch, skim along the ground; 5. To lay in order; to pave, ceil with boards; 6. To spread; 7. To seed closely for transplanting; 8. To transplant; 9. To leap or jump over; |
| பாவு | pāvu n. <>பாவு-. 1. Warp; நெசவுப்பா. Colloq. 2. Measure equal to double the arm's length; 3. A measure of weight equal to two palam; |
| பாவுகல் | pāvu-kal n. <>id.+. Stones or slabs used for paving or terracing; தளம் பரப்புங் கல் (கோயிலொ.13.) |
| பாவுகழி | pāvu-kaḻi n. <>id.+. (Weav.) Split bamboos used to keep the upper warp separated from the lower one; பாவின் பிளவை நிறுத்துங் கழி. |
| பாவுபலகை | pāvu-palakai n. <>id.+. Wainscot or ceiling with boards; மேற்றளமாகப் பரப்பும் பலகை. (யாழ். அக.) |
| பாவேப்பிரயோகம் | pāvē-p-pirayōkam n. <>bhāvē-prayōga. Impersonal voice in sanskrit, as janēna gamyatē; சனத்தாற் போகப்படுகை என்பது போன்ற வடமொழி வினைவழக்கு. (பி.வி. 36, உரை.) |
| பாவை | pāvai n. [T. pāpa K. pāpe M. pāva.] 1. Puppet, doll; பதுமை. மரப்பாவை நாணா லுயிர் மருட்டியற்று (குறள், 1020). 2. Image, picture, portrait; 3. Pupil of the eye; 4. Woman, lady, damsel; 5. Flower of the common bottle-flower tree; 6. See பாவைக்கூத்து. திருவின் செய்யோ ளாடிய பாவையும் (சிலப். 6, 61). 7. A religious observance; 8. A hymn in Tiru-vācakam. See திருவெம்பாவை. (திருவாலவா. 27, 8.) 9. A hymn in Nālāyira-p-pirapantam. See திருப்பாவை. தொல்பாவை பாடி யருளவல்ல பல்வனையாய் (திவ். திருப்பா. தனியன்). 10. Root of the ginger plant; 11. Wall; |
