Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாவைக்கூத்து | pāvai-k-kūttu n. <>பாவை+. 1. Dance of Lakṣmī when she assumed the form of kolli-p-pāvai, fascinated the Asurās and made them fall down insensible, one of 11 kūttu, q.v.; கூத்துப் பதினொன்றனுள் அவுணர்மோகித்து விழும்படி கொல்லிப்பாவைவடிவு கொண்டு திருமகள் ஆடிய ஆடல். (சிலப். 6, 61.) 2. Puppetdance; |
| பாவைஞாழல் | pāvai-āḻal n. <>id.+. A kind of āḻal; ஞாழல்வகை. (இறை. 2, பக். 28.) |
| பாவைத்தீபம் | pāvai-t-tīpam n. <>id.+. A kind of lamp with a damsel-shaped stand, waved before idols in a temple; கோயிலில் வழங்கும் தீபாராதனைக் கருவிவகை. (பாரத. ஒழிபு. 42, உரை.) |
| பாவைப்பாட்டு | pāvai-p-pāṭṭu n. <>id.+. A kind of stanza having more than four lines, as in Tiruppāvai and Tiru-v-empāvai; திருப்பாவை, திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள் வகை (தொல். பொ. 461, உரை.) |
| பாவையாடல் | pāvai-y-āṭal n. <>id.+. 1. See பாவைக்கூத்து. (சிலப். 6, 61, உரை.) . 2. Play with doll, a characteristic feature of peṇpāṟ-pillai-t-tamiḻ; |
| பாவையிஞ்சி | pāvai-y-iṉci n. <>id.+. Ginger-root; இஞ்சிக்கிழங்கு. பாவையிஞ்சியுங் கூவைச்சுண்ணமும் (பெருங்.உஞ்சைக். 51, 23). |
| பாவைவிளக்கு | pāvai-viḻakku n. <>id.+. Lamp with a damsel-shaped stand; பிரதிமை விளக்கு. பொலம்பாலிகைகளும் பாவைவிளக்கும் பலவுடன் பரப்புமின் (மணி. 1, 45). |
| பாவோடல் | pā-v-oṭal n. <>பா4+. Weaver's beam; நெசவில் இழையோடுந் தடி. (யாழ். அக.) |
| பாவோடு - தல் | pā-v-ōṭu- v. intr. <>id.+. 1. To run the weaver's warp; நூலை நெசவுப்பாவாக்குதல். (W.) 2. To be always in motion; |
| பாழ் - த்தல் | pāḻ- 11 v. intr. 1. To go to ruin; to be laid waste; அழிவடைதல். 2. To become useless; 3. To be accursed, as a place or a house; |
| பாழ் | pāḻ n. <>பாழ்-. [K. hāḷ.] 1. Desolation, devastation, ruin; நாசம். நரகக்குழி பலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5). 2. Damage, waste, loss; 3. Corruption, decay, putrifaction; 4. Baseness, wretchedness, evil; 5. That which is ugly or graceless; 6. Profitlessness, uselessness; 7. Emptiness, barrenness, inanity; 8. Non-existence, nothingness; 9. Vacuity; 10. Barren land; 11. Waste land; 12. Fault; 13. Vast expanse of space; 14. Primordial Matter, as the cause of the manitest universe; 15. The soul; |
| பாழ்க்கடி - த்தல் | pāḻkkaṭi- v. tr. <>பாழ்+அடி-. To desolate, devastate, reduce to ruins; நாசமாக்குதல். Loc. |
| பாழ்க்கிறை - த்தல் | pāḷkkiṟai- v. intr. <>பாழ்+. Lit., to irrigate a barren land; [பாழ்நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்] to labour in vain; |
| பாழ்க்கோட்டம் | pāḻ-k-kōṭṭam n. <>id.+. Cremation-ground; சுடுகாடு. பொடியடுத்த பாழ்க்கோட்டஞ் சேராமுன் (பதினொ. ஐயடி. க்ஷேத். 2). |
| பாழ்கிடை | pāḻ-kiṭai n. <>id.+. Lying obstinately, sitting dhurna; விடாமற் பற்றிக் கிடக்கை. கடன்காரன் பாழ்கிடையாய்க் கிடக்கிறான். |
| பாழ்ங்கிணறு | pāḻ-ṅ-kiṇaṟu, n. <>id.+. Neglected, dilapidated or ruined well; தூர்ந்து அல்லது இடிந்து பாழான கிணறு. (நன். 223, மயிலை.) |
| பாழ்ங்குடி | pāḻ-ṅ-kuṭi n. <>id.+. A family in distress; சீர்கெட்ட குடும்பம். (யாழ். அக.) |
