Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாளங்கட்டு - தல் | pāḷaṅ-kaṭṭu- v. tr. <>id.+. To put a bandage; புண்ணுக்குத் துணி கட்டுதல் (M. L.) |
| பாளச்சீலை | pāḷa-c-cīlai n. <>id.+. Plaster; புண்ணுக்கிடும் மருந்து பூசிய சீலை. (யாழ். அக.) |
| பாளபந்து | pāḷapantu n. <>K. bāḷa-bandu. The Dēvanāgari character; தேவநாகரியெழுத்து. Colloq. |
| பாளம் | pāḷam n. [T. pālamu K.pāḷa M. pāḷam.] 1. Flattened shape; தகட்டு வடிவம். (இலக். அக.) (W.) 2. Metal molten and cast in moulds; 3. Flake, scale, lamina from a solid mass; 4. Peeling or cracking of the skin; 5. Saltpetre; 6. cf. phāla. Long strip of cloth; 7. cf. பாடம். polish; |
| பாளயம் | pāḷayam n. See பாளையம். நிசானாட்டிய பாளயமும் (தாயு. பராபர. 232). . |
| பாளாசக்கயிறு | pāḷāca-k-kayiṟu n. Heelrope by which a horse's feet are fastened to a peg; குதிரையின் காற்கயிறு. (W.) |
| பாளி 1 | pāḷi n. <>pāli. Sign, signal, mark; அடையாளம். (W.) |
| பாளி 2 | pāḷi n. <>phāla. Embroidered garment; பணித்தூசு. 2. Canopy; |
| பாளி 3 | pāḷi n. See பாலி4. . |
| பாளி 4 | pāḷi n. See பாழி2, 6. . |
| பாளித்தியம் | pāḷittiyam n. A Prākrit grammar; பிராகிருத இலக்கணநூலுள் ஒன்று. பாளித்தியமென்னும் பாகதவிலக்கணமும் (காரிகை, பாயி.1, உரை). |
| பாளிதம் 1 | pāḷitam n. perh. phālita. 1. Boiled rice; சோறு. (பிங்.) 2. Rice boiled in milk; 3. Liquid of a thick consistency; |
| பாளிதம் 2 | pāḷitam n. 1. Silk garment; பட்டுவர்க்கம். (பிங்.) 2. See பாளி2. வீரபாளிதப்படாம் (திருக்காளத். பு. பஞ்சாக்கர. 69). |
| பாளிதம் 3 | pāḷitam n. prob. phāṇita. Sugar-candy; கண்டசருக்கரை. (பிங்.) |
| பாளிதம் 4 | pāḷitam n. cf. பளிதம். 1. Medicated camphor; பச்சைக்கர்ப்பூரம். அடகு புலால் பாகு பாளி தமு முணணான் (தொல். சொல். 279, இளம்.). 2. Sandal paste; |
| பாளீபாஷை | pāḷī-pāṣai n. <>பாளி3+. Pāli; பிராகிருதபாஷைவகை. (மணி. அரும். பக். 494.) |
| பாளேபந்து | pāḷēpantu n. See பாளபந்து. Loc. . |
| பாளை 1 | pāḷai n. [K. hāḷe.] 1. Spathe of palms; தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல். பாளையுடைக் கமுகோங்கி (தேவா. 9, 1). 2. A reddish kind of paddy; 3. Empty ears of grain, chaff; 4. Shark's liver; |
| பாளை 2 | pāḷai n. prob. bāla. 1. Embryonic stage; கருவில் இருக்கும் பருவம். பாளையாம் பருவஞ் செத்தும் (பன்னூற். 900). 2. Male infant under five years; |
| பாளைக்கத்தி | pāḷai-k-katti n. <>பாளை1+. Toddy-drawer's knife; கள்ளிறகுவோர் கைக் கொள்ளுங் கத்தி. |
| பாளைச்சூழ் | Pāḷai-c-cūḻ n. <>id.+. Torch made of spathe of palms; பாளையிற் கட்டிய தீப்பந்தம். (J.) |
| பாளைசீவு - தல் | pāḷai-cīvu- v. intr. <>id.+. To pare the spathe for drawing toddy; கள்ளிறக்கப் பாளையைச் சீவுதல். |
| பாளைத்தடி | pāḷai-t-taṭi n. <>id.+. A short club used by toddy drawers; கள்ளிறக்க உதவுஞ் சிறுதடி. Colloq. |
| பாளைதட்டு - தல் | pāḷai-taṭṭu- v. intr. <>id.+. To beat the spathe of a palm for making it yield toddy; கள்ளிறங்கப் பாளையை நசுக்குதல். |
| பாளைப்பருவம் | pāḷai-p-paruvam n. <>பாளை2+. See பாளை2. (பன்னூற். 900.) . |
| பாளையக்காரர் | pāḷaiya-k-kārar n. <>பாளையம்+. [T. pāḷegādu K. pāḷeyagāraru M. pāḷayakkār.] Poligars; விஜயநகரவேந்தராட்சியில் சிறிய நாட்டதிபராக ஆண்டுவந்த தலைவர்கள். பாளையக்காரர் பணங்களுக்கங் காளனுப்பும் வல்லமையும் (பணவிடு. 22). |
| பாளையப்பட்டு | pāḷaiya-p-paṭṭu n. <>id.+. [K. pāḷeyapaṭṭu.] Estate, village or group of villages of a feudal chieftain or poligar held originally on condition of rendering military service whenever required by his suzerain; அரசனுக்குப் போரில் உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் பாளையக்காரருக்கு விடப்பட்ட கிராமத்தொகுதி. (C. G.) |
| பாளையம் | pāḷaiyam n. [T. pāḷemu K. pāḷeya M. pāḷayam.] 1. Army; சேனை. இருபாளையத்தி னிடந்தோறும் (பாரத. பதினோ. 45). 2. War-camp; 3. See பாளையப்பட்டு. (C. G.) 4. Village surrounded by hillocks; |
