Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாற்குறண்டி | pāṟ-kuṟaṇṭi n. <>id.+. Milk corandy, s. sh., Lepidagathis pungens; முட்செடிவகை. (M. M. 227.) |
| பாற்குனம் | pāṟ-kuṉam n. <>Phalguna. The last month of the Tamil year, March-April; பங்குனி. 2. See பாற்குனி, 1. |
| பாற்குனி | pāṟ-kuṉi n. <>Phalgunī The 12th nakṣatra; உத்தரநாள். (சூடா.) 2. See பாற்குனம், 1. (யாழ். அக.) |
| பாற்குனிகம் | pāṟ-kuṉikam n. <>id. See பாற்குனி, (யாழ்.அக.) |
| பாற்கூழ் | pāṟ-kūḻ n. <>பால்+. See பாற்சோறு. பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321). |
| பாற்கெண்டை | pāṟ-keṇṭai n. <>id.+. White mullet, brilliant glossy blue, attaining 3 ft. and more in length, Chanos salmonens; மூன்றடி வளர்வதும், பளபளப்பான நீலநிறமுள்ளதுமான கெண்டை மீன்வகை. (யாழ்.அக.) |
| பாற்கொடி | pāṟ-koṭi n. <>id.+. Indian sarsaparilla. See நன்னாரி |
| பாற்கொவ்வை | pāṟ-kovvai n. <>id.+. A kind of creeper with white flower, Capparis; கொவ்வைவகை. (யாழ்.அக.) |
| பாற்சம்பா | pāṟ-campā n. <>id.+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (m. M. 639.) |
| பாற்சிரசந்தன் | pāṟciracantaṉ n. A kind of emerald; கருடப்பச்சை. (யாழ்.அக.) |
| பாற்சுண்டு | pāṟ-cuṇṭu n. <>பால்+. 1. Crease of milk adhering to the vessel in which milk is boiled ; பால்காய்ச்சிய பனையின் அடியிற் பற்றிய பாற்பற்று. (யாழ்.அக.) 2. Scurf, dandruff on the head; |
| பாற்சுருக்கி | pāṟ-curukki n. <>id.+. A medicinal plant that checks the secretion of milk, lactifuge; பாலை வற்றச்செய்யும் பூடு. (M. M. 965.) |
| பாற்சுறா | pāṟ-curā n. <>id.+. White shark, grey, attaining 2 ft. in length, Carcharias laticandus; இரண்டடி வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான மீன்வகை. |
| பாற்சொக்கு | pāṟ-cokku n. <>id.+. Cheerfulness due to affluence; செல்வமகிழ்ச்சி. (யாழ்.அக.) |
| பாற்சொரிக்கீரை | pāṟ-cori-k-kīrai n. <>id.+ சொரி+. A kind of greens said to cure diseases of the bowels; குடல்நோயைத் தீர்க்க உதவுங் கீரைவகை (பதார்த்த. 599.) |
| பாற்சொற்றி | pāṟ-coṟṟi n. See பாற்சோற்றி. (W.) . |
| பாற்சொற்றிப்பாலை | pāṟ-coṟṟi-p-pālai n. <>பாற்சொற்றி+. Indian guttapercha. See காட்டிருப்பை. |
| பாற்சொறி | pāṟ-coṟi n. <>பால்+. Scabbiness, due to want of mother's milk; தாய்ப்பாலில்லாமையால் உண்டாஞ் சொறிப்புண். (W.) |
| பாற்சோட்டை | pāṟ-cōṭṭai n. <>id.+. Craving for milk, as of an infant; குழந்தைக்கு உண்டாகும் பால்குடிக்கும் அவா. (J.) |
| பாற்சோற்றி | pāṟ-cōṟṟi n. A plant, Ruellia secunda; செடிவகை. (W.) |
| பாற்சோறு | pāṟ-cōṟu n. <>பால்+. Rice boiled in milk; பால்கலந்த அன்னம். நெய்யிலாப் பாற்சோற்றி னேர் (நாலடி, 333). |
| பாற்பசு | pāṟ-pacu n. <>id.+. Milch cow; கறவைப்புசு. (யாழ்.அக.) |
| பாற்பட்டார் | pāṟ-paṭṭār n. <>பாற்படு-. Ascetics, noted for their extreme discipline; துறவியர்.பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு (ஏலாதி, 13). |
| பாற்படு - தல் | pāṟ-paṭu v. intr. <>பால்+. 1. To be well-arranged; to be well-disciplined; ஒழுங்கடைதல். 2. To tread the path of virtue; |
| பாற்பண்ணியம் | pāṟ-paṇṇiyam n. <>பால்+. A kind of preparation made of milk and other ingredients; பால்கலந்த பணியாரவகை (இராசவைத்.) |
| பாற்பல் | pāṟ-pal n. <>id.+. Milk-tooth; முதன் முதல் முளைக்கும் பல். |
| பாற்பள்ளயம் | pāṟ-paḷḷayam n. <>id.+. Offering of milk and fruits to the deities who cause diseases; நோய்களின் அதிதேவதைகட்குப் படைக்கும் பால்பழம் முதலியன. |
| பாற்பாக்கியம் | pāṟ-pakkiyam n. <>id.+. The fortune of possessing milch cows; கறவைப்பசுக்களைத் தான் அடைந்திருக்கும் பேறு. |
| பாற்பாகல் | pāṟ-pākal n. <>id.+. A kind of balsam-apple, climber, Momorica balsamma; பாகல்வகை. |
