Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிச்சமாவாசை | piccamāvācai n. <>பிச்சம் + அமாவாசை. Day having the unexpired portion of the new moon, when oblations are not offered to manes; தர்ப்பணதினமல்லாது அமாவாசையின் இறுதிப்பாகத்தைக்கொண்ட நாள். Brāh. |
| பிச்சரிசி | piccarici n. See பிட்சையரிசி. Loc. . |
| பிச்சன் | piccaṉ n. <>pitta. [T. picchi.] 1. Maniac, madman; பைத்தியக்காரன். பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70). 2. One who is captivated, enamoured or fascinated; 3. šiva; |
| பிச்சாடனம் | piccāṭaṉam n. See பிட்சாடனம். . |
| பிச்சாடனன் | piccāṭaṉaṉ n. See பிட்சாடனன். பிச்சாடனன் காமதகனன் (அறப். சத. 99). |
| பிச்சாடி | piccāṭi n. <>U. pichāri. Tether for the hind feet of a horse, opp. to akāṭi; குதிரையின் பின்னங்காற் கயிறு. (W.) |
| பிச்சாணா | piccāṇā n. <>U. bichānā. Bed; படுக்கை. Colloq. |
| பிச்சாபாத்திரம் | piccā-pāttiram n. See பிட்சாபாத்திரம். . |
| பிச்சி 1 | picci n. cf. பித்திகை. 1. Largeflowered jasmine. See சாதிமல்லிகை. Colloq. 2. Trichotomous-flowering smooth jasmine. 3. Cananga flower tree. |
| பிச்சி 2 | picci n. 1. Fem. of பிச்சன். [T. picci.] Crazy woman; பித்துப்பிடித்தவள். பெயர்த்து மவனுக்கே பிச்சியானள் (தேவா. 714, 7) 2. See பிச்சியார், 1. 3. A female devil; |
| பிச்சி 3 | picci n. <>பிச்சு. Crazy person; பைத்தியம் பிடித்தவ-ன்-ள். Loc. |
| பிச்சி 4 | picci n. cf. tarambuja. Sweet water-melon. See சர்க்கரைக்கொம்மட்டி. (M. M. 372.) |
| பிச்சிப்பயறு | picci-p-payaṟu n. Aconite leaved kidney bean. See துலுக்கப்பயறு. |
| பிச்சியார் | picciyār n. <>பிச்சி2. 1. Mendicant woman-devotee of šiva; சைவ தவப்பெண். பிச்சியாரெனும் பேருமக்கிட்டதே (குமர. பிரமதுரைக்கலம். 32). 2. A characteristic theme of kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of šiva; |
| பிச்சிலம் | piccilam n. prob. picchila. (சங். அக.) 1. Curry-broth; குழம்பு. 2. Moisture, dampness; 3. Conjee; |
| பிச்சீரல் | piccīral n. <>பிச்சு + ஈரல். Liver, See பித்தீரல். Loc. |
| பிச்சு | piccu n. <>pitta. [T. picci M. pi-cu.] 1. Bile; பித்த நீர். புறாவின் பிச்சும் (கொக்கோ. 1, 27). 2. Madness, infatuation; |
| பிச்சுநெட்டி | piccu-neṭṭi n. perh. பிச்சு+. A kind of fever; சுரவகை. (C. E. M.) |
| பிச்சுப்பிடுங்கல் | piccu-p-piṭuṅkal n. See பிக்கல்பிடுங்கல். Loc. . |
| பிச்சுப்பேய் | piccu-p-pēy n. <>பிச்சு+. A minor devil; ஒரு சிறுதேவதை. (W.) |
| பிச்சுப்பை | piccu-p-pai n. <>id.+. Liver; பித்தாசயம். Loc. |
| பிச்சுவா | piccuvā n. <>U. bichwā. 1. Dagger; கையீட்டி. (W.) 2. A kind of knife; |
| பிச்சை 1 | piccai n. See பிச்சி4. (W.) . |
| பிச்சை 2 | piccai n. <>phikṣā 1. Alms, food or raw rice given as alms; இரப்போர்க்கிடும் உணவு. ஐயமும் பிச்சையும் (திவ். திருப்பா. 2). 2. Charity; |
| பிச்சை 3 | piccai n. <>picchā. 1. Plantain. See வாழை. (மலை.) 2. Sissoo wood. |
| பிச்சை 4 | piccai n. perh. பிச்சை. 1. Emerald; மரகதம். (சூடா.) 2. Crystal; |
| பிச்சைக்காரன் | piccai-k-kāraṉ n. <>பிச்சை2+. Beggar, mendicant; இரப்போன். |
| பிச்சைச்சட்டி | piccai-c-caṭṭi n. <>id.+. See பிக்ஷாபாத்திரம் பிச்சைச் சட்டியில் சனியன் புகுந்தார்போல. . |
