Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிட்சு | piṭcu n. <> bhikṣu. See பக்ஷு. . 2. An Upaniṣad, one of 108; |
| பிட்சையரிசி | piṭcai-y-arici n. <> bhikṣā+. See பிக்ஷையரிசி. Loc. . |
| பிட்டகம் | piṭṭakam n. <> piṣṭaka. A kind of pastry; சிற்றுண்டிவகை. (அக.நி) |
| பிட்டடி - த்தல் | piṭṭaṭi- v. intr. <> பிட்டம்+. To jump, kicking heels against posteriors; கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல். பேய்கள் குறுநரி சென்றணங்காடுகாட்டிற் பிட்டடித்து (பதினொ. காரைக். மூத்ததிருப். 6). |
| பிட்டபேடணநியாயம் | piṭṭa-pēṭaṇa-niyāyam n. <>piṣṭa-pēṣaṇa-nyāya. (Log) The nyāya of repeating what has already been said, even like kneading the dough already wellkneaded; பிசைந்துதீர்ந்த மாவைப் பின்னும் பிசைதல்போல் முற்கூறப்பட்டதனையே பின்னுங்கூறும் நெறி. (சித். மரபுகண். பக். 2.) |
| பிட்டம் 1 | piṭṭam n. <> pṟṣṭha. See பிருட்டம். (W.) . |
| பிட்டம் 2 | piṭṭam n. <> piṣṭa. Dough; பிசைந்த மா. (சூடா.) |
| பிட்டலை | piṭṭalai n. A kind of curry or sauce; குழம்புவகை. Colloq. |
| பிட்டவத்தி | piṭṭavatti n. perh. பிட்டு+அவி-. See பிட்டவியல். (யாழ். அக.) . |
| பிட்டவியல் | piṭṭaviyal n. <> id.+ அவியல். Meal-cake cooked in steam; நீராவியில் வெந்த பணியாரவகை. (W.) |
| பிட்டன் | piṭṭaṉ n. <> bhraṣṭa. 1. Excommunicated person; heretic; மதத்துக்குப் புறம்பானவன். பிட்டர்தம் மறவுரை (தேவா. 266, 10). 2. Worm-killer; |
| பிட்டி 1 | piṭṭi n. <> puṣṭi. plumpness; பருத்திருக்கை. (நாமதீப. 769.) |
| பிட்டி 2 | piṭṭi n. 1. cf. piṭa. Small basket; சிறு கூடை. (W.) 2. Croup, a disease of children; |
| பிட்டி 3 | piṭṭi n. See பிட்டம். Tinn. . |
| பிட்டி 4 | piṭṭi n. See பீடு. Loc. . |
| பிட்டிலம் | piṭṭilam n. cf. pṟthvīkā. Cardamom. See ஏலம். (மலை.) |
| பிட்டு | piṭṭu n. Perh. piṣṭa [T. K. M. piṭṭu.] 1. A kind of confectionery; சிற்றுண்டி வகை. மதுரையிற் பிட்டமுது செய்தருளி (திருவாச. 13, 16). 2. Millet flour; |
| பிட்டுக்கருப்பட்டி | piṭṭu-k-karuppaṭṭi n. prob. பிட்டு+. Home-made palm-sugar; நாட்டிற் காய்ச்சும் பனஞ்சர்க்கரைக் கட்டி. |
| பிட்டுக்காட்டு - தல் | piṭṭu-kāṭṭu- v. tr. <> பிள்-+. 1. To explain analytically; கூறுபடுத்து விளக்கிச் சொல்லுதல். 2. To reveal, disclose; |
| பிட்டுத்திருப்பி | piṭṭu-t-tiruppi n. Velvetleaf. See வட்டத்திருப்பி. (L.) . |
| பிட்டுத்திருவிழா | piṭṭu-t-tiru-viḻā n. <> பிட்டு+. A festival in Madura which commemorates šiva's receiving piṭṭu from an old woman named vanti in lieu of labour rendered by Him in disguise; வந்திக்காகக் கூலியாளாக வேளைசெய்து சிவபிரான் பிட்டுப்பெற்ற திருவிளையாடலைக் குறித்தற்கு மதுரையில் நடத்தப்படுந் திருவிழா. |
| பிட்டுவம் | piṭṭuvam n. cf. piṣṭa. Grinding; அரைக்கை. (நாமதீப. 743.) |
| பிடக்கர் | piṭakkar n. A tribe; ஒருசார் சாதியினர். பிடக்கர் குருக்கர் துருக்கர்களே (கலிங். 319). |
| பிடக்கு 1 | piṭakku n. See பிடகன். (தைலவ. தைல.) . |
| பிடக்கு 2 | piṭakku n. <> piṭaka. Buddhist scripture; பௌத்தரது பிடகநூல். பிடக்கே யுரை செய்வார் (தேவா. 245, 10). |
| பிடகம் | piṭakam n. <> piṭaka. 1. Basket; கூடை. 2. Buddhist scripture. See திரிபிடகம். பெரியோன் பிடகநெறி (மணி. 26, 66). 3. Treatise; 4. Boil; 5. Alms charity; |
| பிடகன் 1 | piṭakaṉ n. <> id. Buddha, author or Tripiṭaka; [திரிபிடகத்தின் ஆசிரியன்] புத்தன். (பிங்.) |
| பிடகன் 2 | piṭakaṉ n. <> bhiṣaj. Doctor, physician; வைத்தியன். (பிங்.) பிடகர் தம்மாற் றேள் வெங் கடுத்தீர் மருந்துதவி (சேதுபு. அனுமகு.15). |
| பிடகாரி | piṭakāri n. perh. viṣa + hārin. Doctor who cures the effect of poison, toxicologist; விஷவைத்தியன். (W.) |
| பிடகை | piṭakai n. <> piṭakā. Plate for holding flower; பூந்தட்டு. பிடகைப்பெய்த கமழ்நறும் பூவினர் (மதுரைக். 397). |
| பிடங்கு | piṭaṅku n. cf. புடை. (W.) 1. Back of a blade or weapon; கத்தியின் முதுகுப்புறம். 2. Butt end, as of a musket; bottom as of a basket; |
